ஆப்நகரம்

Fact Check: பாஜக வெற்றி பெற்றால் இந்தியா உலக வரைப்படத்தில் இருக்காது.. ராகுல் காந்தி கூறியது உண்மையா?

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் இந்தியா உலக வரைப்படத்தில் இருக்காது என ராகுல் காந்தி கூறியதாக செய்தி பரவி வரும் நிலையில் அது உண்மையா என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Contributed by India Today |Authored byபஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil 23 May 2024, 10:54 am
Samayam Tamil Rahul Gandhi

இந்தியா கூட்டணி சார்பில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி ஜனநாயகத்தை காப்போம் என்ற தலைப்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றால் இந்தியாவை நாங்கள் இந்தியாவை கைப்பற்றுவோம் என்றும் அந்த நாடு வரைபடத்தில் இடம் பெறாது என்றும் பேசுவதாக உள்ளது.

மேலும் ஆணவத்தின் உருவகமாக விளங்கும் இந்த அரக்கனின் ஆணவத்தை பார்த்துள்ளீர்களா? அவர் சீனா மற்றும் பாகிஸ்தானை விடவும் ஆபத்தானவர் என்பதை நீங்கள் உணருவிர்கள்.. என்று எச்சரிப்பதாகவும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தியா டுடே ஊடகம் இதுதொடர்பாக ஆய்வு செய்ததில் அந்த ராகுல் காந்தி ஆவேசமாக பேசுவதாக பரவும் அந்த வீடியோ போலீயானது என்றும் தவறாக பரப்பப்படுகிறது என்பதும் தெரியவந்துள்ளது.

சரிபார்ப்பு முறை


பிரபல ஃபேஸ்புக் போஸ்டுடன் ராகுல் காந்தி பேசிய வீடியோவை உன்னிப்பாக ஆய்வு செய்ததில், “இந்தியாவில் மேட்ச் பிக்சிங் மூலம் பாஜக வெற்றி பெற்றால், அதன் பிறகு அரசியல் சாசனத்தை மாற்றினால் நாடு முழுவதும் பற்றி எரியும். நான் சொன்னதை நினைவில் வையுங்கள், இந்த நாட்டைக் காப்பாற்ற முடியாது." என்றுதான் ராகுல் காந்தி மார்ச் 31ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி நடத்திய ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் கூட்டத்தில் பேசியுள்ளார்.

FACT CHECK: ஆந்திரா தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் தெலுங்கு தேசம் கட்சி முன்னணியா? உண்மை என்ன?

டெலிகிராப் ஆன்லைன் செய்தி தளம், ராகுல் காந்தியின் ஜனநாயகத்தை காப்போம் கூட்டம் குறித்த விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி ராகுல் காந்தியின் உரையில் மத்திய அரசையும், பிரதமரையும் விமர்சித்துள்ளார். தேர்தலில் பாஜக மோசடி செய்து வெற்றி பெற முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. பாஜக தேர்தலில் மோசடியாக வெற்றி பெற்று அரசியல் சட்டத்தை மாற்றினால், நாடு பற்றி எரியும் நாட்டைக் காப்பாற்ற முடியாது என்று ராகுல் காந்தி கூறியதாக தி டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.



உறுதி செய்யப்பட்டது


பின்னர் இந்தியா கூட்டணியின் ஜனநாயகத்தை காப்பாற்றுவோம் கூட்டத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரையின் முழு உரையையும் இந்தியா டுடே குழு சரிபார்த்தாக தெரிவித்துள்ளது. இந்த வீடியோ அவர்களின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் உள்ளது. 14.34 நிமிட வீடியோவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனம் மாற்றப்படும் என்றும், அது நாட்டுக்கே அச்சுறுத்தலாக அமையும் என்றும்தான் ராகுல் காந்தி தனது உரை முழுவதும் பாஜக அரசை விமர்சித்து உள்ளார். பேச்சில் எங்கும் இந்தியாவை எரிப்போம் என்றோ, நாடு வரைபடத்தில் இருக்காது என்றும் கூறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.



முடிவு

சமூக வலைதளங்களில் ராகுல் காந்தி இந்தியாவை எரிப்போம் என்றும் இந்தியா உலக வரைப்படத்தில் இருக்காது என்றும் எங்கேயும் கூறவில்லை. அப்படி பரப்பப்படும் வீடியோ தவறானது என்றும் உறுதியாகியுள்ளது.

(இந்த செய்தி Indiatoday இணையதளத்தில் பதிவிடப்பட்டது. அதை நாங்கள் மறுபதிப்பு செய்திருக்கிறோம். இது கூகுள் நிறுவனத்தின் உண்மை கண்டறியும் Shakti Collective செயல்பாட்டின் ஓர் அங்கமாகும்.)
எழுத்தாளர் பற்றி
பஹன்யா ராமமூர்த்தி
செய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி