பிக் பாஸ் 6
பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று யார் வெளியேறப் போவது என்பது குறித்து முதல் ப்ரொமோ வீடியோ வெளியானது. இரண்டாவது வீடியோவில் தனக்கு புறம் பேசும் புத்தி இருக்கிறது என்று கமல் ஹாசனிடம் கூறினார் மைனா நந்தினி. இந்நிலையில் வெளியாகியிருக்கும் மூன்றாவது வீடியோவில், பாப்புலாரிட்டி பற்றி ஹவுஸ்மேட்ஸிடம் கேட்டிருக்கிறார் கமல் ஹாசன்.
Twitter-Vijay Television
தனலட்சுமி
உங்களுடைய பாப்புலாரிட்டி லெவல் மக்களை பொறுத்தவரையில் என கமல் ஹாசன் கூற, தனலட்சுமியின் புகைப்படத்தை ரெட் ஜோனில் வைத்தார் ஏ.டி.கே. அவங்க நடந்து கொள்ளும் விதம், பேசும் முறையை மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என ஏ.டி.கே. கூற தனலட்சுமி முறைத்துப் பார்த்தார். அமுதவாணனை ரெட் ஜோனில் வைத்து அவரை மக்களுக்கு பிடிக்கவில்லை என்று நினைப்பதாக மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
விக்ரமன்
கேமில் இன்வால்வ் ஆனதால் அந்த என்டர்டெயின்மென்ட்டை கொஞ்சம் மிஸ் பண்ணிட்டானோ என்று கூறி அமுதவாணனை ரெட் ஜோனில் வைத்தார் மைனா நந்தினி. அசீமின் கோபத்தை பற்றி பேசி அவரின் புகைப்படத்தை ரெட் ஜோனில் வைத்தார் குவின்ஸி. அவருடைய மீட்டர் குறைந்திருக்கும்னு நான் நம்புகிறேன் என்று கூறி அசீமின் புகைப்படத்தை ரெட் ஜோனில் வைத்தார் விக்ரமன்.
கமல்
விக்ரமன் கூறியதை கேட்ட கமல் ஹாசனோ, இது உண்மையாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறீர்களா என்று அசீமிடம் கேட்டார். அதற்கு அசீம் கூறியதாவது, இல்லை சார், இது அவர்களின் தனிப்பட்ட கருத்து தான் என்று நினைக்கிறேனே தவிர இது தான் உண்மை என்று நினைக்கவில்லை என்றார். இதை கேட்டு அரங்கில் இருந்தவர்கள் கைதட்டினார்கள்.
விளாசல்
ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, கமல் சார் எப்பொழுது பார்த்தாலும் அசீமை டார்கெட் செய்வது போன்று இருக்கிறது. வார இறுதி நாட்களில் கமல் ஹாசன் வருவார் என்று பிக் பாஸ் பார்த்த காலம் போய், வார இறுதி நாட்களில் அசீமை கமல் விளாசுவதை பார்க்கும் காலம் வந்துவிட்டது. வார வாரம் வாங்கிக்கட்டியும் அந்த மனுஷன் திருந்தவே இல்லையே. எத்தனையோ பேர் இருக்க இந்த ஏ.டி.கேவுக்கு தனலட்சுமி செய்வது தான் பெரிய தவறாகத் தெரிகிறது. அதே போன்று விக்ரமனுக்கு அசீம் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறார். இத்தனை நாட்களாக பிக் பாஸ் வீட்டில் இருந்தாலும் அசீமுக்கு வெளியே நடப்பது கூட தெரிகிறதே என்கிறார்கள்.