ஆப்நகரம்

அசுரத்தனமான பேட்டரியுடன் களமிறங்கும் எம்.ஐயின் புதிய ஸ்மார்ட் போன்..!

5000mAh திறனுடைய பேட்டரியுடன் கூடிய புதிய எம்.ஐ ஸ்மார்ட் போனை ஜியோமி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

TNN 17 May 2017, 3:34 am
5000mAh திறனுடைய பேட்டரியுடன் கூடிய புதிய எம்.ஐ ஸ்மார்ட் போனை ஜியோமி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
Samayam Tamil  xiaomis mi max smart phone have a 5000 mah battery
அசுரத்தனமான பேட்டரியுடன் களமிறங்கும் எம்.ஐயின் புதிய ஸ்மார்ட் போன்..!


ஏற்கனவே கடந்த ஆண்டு எம்.ஐ மேக்ஸ் என்ற பெயரில் புதிய ரக ஸ்மார்ட் போனை, ஜியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட் போனின் அடுத்த வரிசையாக எம்.ஐ மேக்ஸ் 2 என்ற ஸ்மார்ட் போனை ஜியோமி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
மற்ற எம்.ஐ போன்களை விட இந்த எம்.ஐ மேக்ஸ் போனில் இருக்கக் கூடிய முக்கிய சிறப்பம்சம், அதில் உள்ள 5000mAh திறனுடைய பேட்டரிதான். இதனால் இந்த போனை 4 நாட்களுக்கு ஒரு முறை சார்ஜ் செய்து கொண்டால் கூட போதுமானது.

6.44 அங்குல ஹெச்.டி டிஸ்பிளே, குவாட் கோர் ஸ்நாப்டிராகன் 626 பிராசசர், 4 ஜிபி ராம் மற்றும் 34 ஜிபி ரோம் அல்லது 6 ஜிபி ராம் மற்றும் 64 ஜிபி ரோம் ஆகிய சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட் போனில் இருக்கலாம். 12 எம்.பி பின்பக்க கேமிரா, 5 எம்.பி முன் பக்க கேமிரா ஆகியவையும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எம்.ஐ மேக்ஸ் 2 போன் 15,000 ரூபாய்க்குள் விலை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த போன் வரும் 23-ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதற்கு பின்னர் சில காலம் கழித்து இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது.

Xiaomi’s MI max smart phone have a 5000 mAh battery

அடுத்த செய்தி