ஆப்நகரம்

தீவிரவாதத்தை வேரறுக்க ராணுவத்தில் களமிறங்கும் காஷ்மீர் இளைஞர்கள்

ஜம்மு - காஷ்மீரில், பிரிவினைவாதிகளின் முழு அடைப்பு போராட்டத்தை மீறி, சுமார் 1,300 இளைஞர்கள் ராணுவ தேர்வில் பங்கேற்றனர்.

TNN 29 May 2017, 11:16 am
புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில், பிரிவினைவாதிகளின் முழு அடைப்பு போராட்டத்தை மீறி, சுமார் 1,300 இளைஞர்கள் ராணுவ தேர்வில் பங்கேற்றனர்.
Samayam Tamil 1300 kashmiri youths defy terror threats take army recruitment test
தீவிரவாதத்தை வேரறுக்க ராணுவத்தில் களமிறங்கும் காஷ்மீர் இளைஞர்கள்


ஜூனியர் கமிஷன் அதிகாரிகள் மற்றும் அதற்கு இணையான பதவிகளுக்கு இந்திய ராணுவம் சார்பில் எழுத்துத் தேர்வு நேற்று நடத்தப்பட்டது. இதில் ஸ்ரீநகர் மற்றும் பாராமுல்லா பட்டான் ராணுவ முகாமிலும் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சப்ஸார் பட் கொல்லப்பட்டதை கண்டித்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் 2 நாட்கள் முழு அடைப்பு போராட்டத்துக்கு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்திருந்தனர். காஷ்மீரின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலும், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எழுத்துத் தேர்வில் கலந்துக் கொண்டனர்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக பாதுக்கப்புப் படை, ஜம்மு-காஷ்மீர் காவல்துறை பணியில் சேர காஷ்மீர் இளைஞர்கள் சுமார் 67,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 815 விண்ணப்பங்கள் வந்திருந்ததாகவும் அவர்களில் 799 இளைஞர்கள் எழுத்துத் தேர்வில் பங்கேற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்ட போதிலும், இளைஞர்கள் ராணுவ மையத்திற்கு வந்து அனுமதி அட்டைகளை காட்டி தேர்வு எழுதினர். எழுத்துத் தேர்வில் பங்கேற்ற இளைஞர்கள் அனைவரும் ஏற்கனவே உடல் தகுதி மற்றும் மருத்துவ சோதனைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Nearly 1,300 Kashmiri youth defied terrorists' threats and the Hurriyat call for a strike on Sunday, and took the Army recruitment test at two centres: Srinagar's Jammu & Kashmir Light Infantry Regimental Centre and Baramulla's Pattan Army camp.

அடுத்த செய்தி