ஆப்நகரம்

இந்த முறைவாது அதிமுக நிறைவேற்ற வேண்டும்: ஸ்டாலின்

தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக இந்த முறையாவது நிறைவேற்ற வேண்டும் என திமுக பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

TNN 19 May 2016, 5:31 pm
சென்னை: தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக இந்த முறையாவது நிறைவேற்ற வேண்டும் என திமுக பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil admk should full fill their manifesto this time mk stalin
இந்த முறைவாது அதிமுக நிறைவேற்ற வேண்டும்: ஸ்டாலின்


தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் களமிறங்கிய திமுக பொருளாளர் ஸ்டாலின் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தல் வெற்றி சான்றிதழை அந்த தொகுதியின் தேர்தல் அலுவலரிடம் இருந்து பெற்ற பின்னர், செய்தியாளர்களை ஸ்டாலின் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் திமுக-வுக்கு கிடைத்த வெற்றி அதிகமாகும். திமுக-வுக்கு கிடைத்திருக்கும் பெரும்பான்மை பலத்துடன் சட்டப்பேரவையில் எதிர்கட்சியாக யாரும் இருந்ததில்லை. இந்த வெற்றியை அளித்த மக்களுக்கு நன்றி.

இந்த முறையாவது தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்ற வேண்டும் என்றார்.

அடுத்த செய்தி