ஆப்நகரம்

என்.ஆர்.காங்.,-அதிமுக கூட்டணி வராது: புதுவை அதிமுக செயலாளர்

வரவிருக்கும் புதுவை சட்டமன்ற தேர்தலில், என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைக்க எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை என்றுபுதுவை அதிமுக செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்தார்

TNN 17 Apr 2016, 3:13 pm
புதுவை: வரவிருக்கும் புதுவை சட்டமன்ற தேர்தலில், என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைக்க எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை என்று புதுவை அதிமுக செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்தார்.
Samayam Tamil aiadmk will not allign with nr congress in pondycherry says pondychery admk secretary
என்.ஆர்.காங்.,-அதிமுக கூட்டணி வராது: புதுவை அதிமுக செயலாளர்


புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைக்க முயற்சி செய்வதாகவும், தேர்தல் முடிந்தவுடன் இவர்களின் கூட்டணி செயல்படும் என்றும் ஊடகங்களில் வந்த செய்திகள் தவறு என்று கருத்து தெரிவித்த புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் புருஷோத்தமன், புதுச்சேரி மாநிலத்தை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் அலை ஓய்ந்து விட்டது என்று தெரிவித்தார்.

முன்னதாக புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவுள்ள அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் கடந்த 4-ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி