ஆப்நகரம்

அமேசானில் இந்திய தேசியக்கொடி போன்ற கால் மிதியடி!

அமேசான் வர்த்தக இணையதளத்தில் இந்திய தேசியக் கொடி போன்ற கால் மிதியடி விற்பனைக்கு வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

TNN 5 Jan 2017, 8:09 pm
அமேசான் வர்த்தக இணையதளத்தில் இந்திய தேசியக் கொடி போன்ற கால் மிதியடி விற்பனைக்கு வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil amazon canada removes doormats with indian flag after protests
அமேசானில் இந்திய தேசியக்கொடி போன்ற கால் மிதியடி!


அமேசான் இணைய வர்த்தக நிறுவனத்தின் அமேசானின் கனடா இணையதளத்தில் இந்திய தேசியக் கொடி போன்ற கால் மிதியடிகள் காணப்பட்டது. தேசியக் கொடியை அவதிக்கும் விதமாக இருப்பதாக அமேசானுக்கு எதிராக விமர்சனங்கள் அதிகரித்தன.

இந்திய தேசியக் கொடி மட்டுமின்றி இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் தேசிய கொடிகளும் கால் மிதியடிகள் போல விற்பனைக்கு வைக்கப்பட்டது கடும் கொந்தளிப்பை உண்டாக்கியது.

விமர்சனங்களைத் தாக்குப்பிடிக்க முடியாத அமேசான், தேசியக் கொடி போன்ற கால் மிதியடிகள் அனைத்தையும் தனது இணையதளத்தில் இருந்து நீக்கியுள்ளது. இருப்பினும், அமேசான் நிறுவனத்திற்கு நெட்டிசன்களின் தாக்குதல் நின்றபாடில்லை.

அடுத்த செய்தி