ஆப்நகரம்

இந்தியாவில் விறுவிறுவென முன்னேற்றம் கண்ட அமேசான்

இந்தியாவுக்கான பிரத்யேக சேவைகள் மூலம் அமேசான் இணையவர்த்தக நிறுவனம் குறுகிய காலத்தில் பெரும் வளர்ச்சியை சந்தித்துள்ளதாக அந்நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்.

TNN 29 Apr 2017, 12:42 pm
இந்தியாவுக்கான பிரத்யேக சேவைகள் மூலம் அமேசான் இணையவர்த்தக நிறுவனம் குறுகிய காலத்தில் பெரும் வளர்ச்சியை சந்தித்துள்ளதாக அந்நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்.
Samayam Tamil amazon in the most visited and fastest growing marketplace in india says jeff bezos
இந்தியாவில் விறுவிறுவென முன்னேற்றம் கண்ட அமேசான்

அமேசான் நிறுவனம் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் அந்நிறுவனத்தின் லாபம் 41 சதவீதம் உயர்ந்து ரூ.4,650 கோடியை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒட்டுமொத்த வருமானம் 2,29,320 கோடி என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“இந்தியாவில் அமேசான் குறுகிய காலத்தில் வேகமான வளர்ச்சியை அடைந்துள்ளது. அமேசான் ப்ரைம் வீடியோ, அமேசான் ஃபயர் ஸ்டிக் போன்றவற்றை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதற்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது” என்று அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் கூறியுள்ளார்.

சமீபத்தில் அறிமுகமான அமேசான் அலெக்ஸா ப்ளீடூத் ஸ்பீக்கர் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அடுத்த செய்தி