ஆப்நகரம்

நோக்கியா சார்ந்த சாதனங்களை புறக்கணித்த ஆப்பிள் நிறுவனம்

காப்புரிமை தொடர்பான பிரச்னையால், நோக்கியா சார்ந்த சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் புறக்கணித்துள்ளது.

TNN 25 Dec 2016, 12:18 pm
சான்பிரான்சிஸ்கோ: காப்புரிமை தொடர்பான பிரச்னையால், நோக்கியா சார்ந்த சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் புறக்கணித்துள்ளது.
Samayam Tamil apple has pulled all of nokias withings products from its online store
நோக்கியா சார்ந்த சாதனங்களை புறக்கணித்த ஆப்பிள் நிறுவனம்


வித்திங்ஸ் என்ற நிறுவனம் மின்சாதனப் பொருட்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தை நோக்கியா நிறுவனம் 190 மில்லியன் டாலர்களுக்கு கைப்பற்றியது. இதையடுத்து நோக்கியாவின் டிஜிட்டல் மருத்துவ சேவைகளை வழங்கும் பிரிவாக வித்திங்ஸ் மாற்றப்பட்டது.

இந்நிலையில் நோக்கியா சார்ந்த காப்புரிமைகளை ஆப்பிள் தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி, பல்வேறு நீதிமன்றங்களில் நோக்கியா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து வித்திங்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஐஓஎஸ் சார்ந்து இயங்கும் பல்வேறு சாதனங்களின் விற்பனையை ஆன்லைன், ஆஃப்லைன் விற்பனை நிலையங்களில் இருந்து ஆப்பிள் முழுமையாக்க நீக்கியது.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வழக்குகள் ஐரோப்பிய, அமெரிக்க நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ளன. இதில் Display, User Interface, Software, Video Coding உள்ளிட்ட 32 காப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Apple has pulled all of Nokia’s Withings products from its online store.

அடுத்த செய்தி