ஆப்நகரம்

ஆப்பிள் வாட்சுக்கு புதிய நிறங்களின் பேண்டுகள் அறிமுகம்

ஆப்பிள் வாட்சுகளுக்கு புதிய நிறங்களில் பேண்டுகள் அறிமுகமாகியுள்ளன.

Gadgets Now 22 Mar 2017, 3:17 am
ஆப்பிள் வாட்சுகளுக்கு புதிய நிறங்களில் பேண்டுகள் அறிமுகமாகியுள்ளன.
Samayam Tamil apple watch gets bands in new colours iphone 7 and 7 plus new cases
ஆப்பிள் வாட்சுக்கு புதிய நிறங்களின் பேண்டுகள் அறிமுகம்


ஆப்பள் நிறுவனத்தின் தனித்துவம் மிகுந்த தயாரிப்புகளில் ஒன்று ஆப்பிள் வாட்சு. அவற்றுக்கு ஏற்ற விதவிதமான நிறங்களில் பேண்டுகளும் தொடர்ந்து அறிமுகமாவது கூடுதல் சிறப்பு அம்சம்.

இந்த வகையில் பல புதிய நிறங்களில் நைலான். ஸ்போர்ட்ஸ் மற்றும் கிளாசிக் பக்கிள் பேண்டுகளை ஆப்பிள் நிறுவனம் திங்கட்கிழமை அறிமுகம் செய்துள்ளது. நைலான் பேண்டுகள் நீலம், ஆரஞ்சு, சிவப்பு, கருநீலம் உள்ளிட்ட பல நிறங்களில் அறிமுகமாகியுள்ளது. ஸ்போர்ட்ஸ் பேண்டுகளும் புதிய மூன்று நிறங்களில் வந்திருக்கின்றன.

கிளாசிக் பக்கிள் பேண்டு புதிய டிசைன் மற்றும் மூன்று நிறங்களில் அறிமுகமாகியிருக்கிறது. இதன் விலை ரூ.11,900. நைலான் மற்றும் ஸ்போர்ட்ஸ் பேண்டுகளின் விலை ரூ.3900

ஆப்பிள் நிறுவனத்தின் வாட்சு பேண்டுகளுடன் ஐபோன் 7க்கு ஏற்ற சிவப்பு நிற கவர்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி