ஆப்நகரம்

மேஷம் அஸ்வினி நட்சத்திரத்தினர் கோடீஸ்வரர் யோகம் எப்போது வரும்?

அனைவருக்கும் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இருப்பினும் அன்றாட வாழ்வில் பொருள், பணப் பிரச்னை ஏற்படாமல் இருந்தாலே போதும் என்ற அளவிற்கு பிரச்னைகள் தொடர்ந்திருக்கும். அப்படி இருக்கும் அஸ்வினி நட்சத்தினர் எப்படி கோடீஸ்வர யோகம் பெறலாம், அவர்கள் என்ன பரிகாரம் செய்யலாம் என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்...

Samayam Tamil 26 Sep 2022, 2:29 pm
அனைவருக்கும் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இருப்பினும் அன்றாட வாழ்வில் பொருள், பணப் பிரச்னை ஏற்படாமல் இருந்தாலே போதும் என்ற அளவிற்கு பிரச்னைகள் தொடர்ந்திருக்கும். அப்படி இருக்கும் அஸ்வினி நட்சத்தினர் எப்படி கோடீஸ்வர யோகம் பெறலாம், அவர்கள் என்ன பரிகாரம் செய்யலாம் என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்...
Samayam Tamil ashwini natchatiram person to get crorepati luck and its pariharam
மேஷம் அஸ்வினி நட்சத்திரத்தினர் கோடீஸ்வரர் யோகம் எப்போது வரும்?


அஸ்வினி நட்சத்திர சிறப்புகள்:

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

அதாவது, பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க, நம் வாழ்க்கையை வளமாக வாழ பொருளை சேர்த்து வைப்பது அவசியம். அப்படி சேர்த்து வைத்தால் தான் இந்த உலகம் நமக்காது என்று அர்த்தம்.


அப்படி இருக்க அஸ்வினி நட்சத்திரத்தினர் செல்வத்தை சேர்க்க, கோடீஸ்வர் யோகத்தைப் பெறுவது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.


அஸ்வினி நட்சத்திர சிறப்புகள்:

அஸ்வினி கேது பகவானுடைய நட்சத்திரம். மேஷ ராசியில் நான்கு பாதமும் கொண்டது.


அஸ்வினி நட்சத்திரத்திற்கான சனிப் பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி பலன்கள்

பொருள் சேரும் வயது

அஸ்வினின் நட்சத்திரத்திற்கு சூரிய தசை 24 -30 வயது வரை வரும். படிப்பு முடித்து இருக்கக் கூடிய இந்த காலகட்டத்தை சரியாக பயன்படுத்தினால் நல்ல வேலை அல்லது தொழில், வியாபாரம் அமைந்து சிறப்பான முன்னேற்றம் இருக்கும். லாபமும் மரியாதையும் கூடும்.


இந்த ஆறு வருடங்களில் நாம் சேர்க்கும் செல்வம் நம் வாழ்க்கை முழுவதும் வளமாக வைத்துக்கொள்ள உதவும்.


Also Read: சனிப்பெயர்ச்சி அஷ்டமத்து சனி, கண்டக சனி, அர்த்தாஷ்டமச் சனி என்றால் என்ன?- சனி பெயர்ச்சி பரிகாரங்கள்

எப்படி பொருள் சேர்க்கலாம்?

சூரிய தசை காலகட்டத்தைத் தவறவிட்டால் அடுத்து வரக்கூடிய ராகு தசை தான் சாதக பலன்கள் சந்திக்க முடியும். அப்போது சந்திரன், செவ்வாய் சேர்ந்திருப்பதால் என்ன தான் சம்பாதித்தாலும் அதை சேர்த்து வைக்கும் வாய்ப்பு குறைவாக தான் இருக்கும்.


அதோடு 45 வயது என்பது சம்பாதிக்கும் திறன் குறையும். பல செலவுகள் குழந்தைகளின் படிப்பு உள்ளிட்டவையால் இருக்கும்.

​கோடீஸ்வர யோகம் சரியாக அமைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

கோடீஸ்வர யோகம் சரியாக அமைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?


கோடீஸ்வர காலத்தை தவறவிட்ட அஸ்வினி நட்சத்திரத்தினர் தினமும் கணபதி மந்திரத்தை 108 சொல்வது நல்லது.

சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகர் வழிபாடு செய்து வர அனைத்து நன்மைகளும் வந்துசேரும்.

Also Read: சனிப்பெயர்ச்சியில் உச்சத்தைத் தொட உள்ள ராசிகள் - யாருக்கு பாதிப்பு?

அடுத்த செய்தி

டிரெண்டிங்