ஆப்நகரம்

நம் வாழ்க்கையை கணிக்கும் இறகு : இந்த 5 இறகில் எது உங்களுக்கு பிடித்திருக்கிறதோ அது உங்களின் வாழ்க்கையை மாற்றும்

நம்முடைய ஆளுமை, குண நலன்களைச் சோதனை செய்வதில் முக்கியப் பங்கு வகிப்பது உளவியல் துறை முக்கியப் பங்கு வகிக்கின்றது. அந்த வகையில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வெவ்வேறு பறவைகளின் இறகுகளை வைத்து உங்களின் குண நலன்களும், நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை விரிவாக பார்ப்போம்.

Authored byஅரவிந்தன் | Samayam Tamil 6 Jun 2023, 5:26 pm
உலகில் அனைவருக்கும் ஒரே மாதிரி ஆளுமை இருந்தால் எப்படி இருக்கும்?
Samayam Tamil choose a feather and discover hidden aspects of your personality
நம் வாழ்க்கையை கணிக்கும் இறகு : இந்த 5 இறகில் எது உங்களுக்கு பிடித்திருக்கிறதோ அது உங்களின் வாழ்க்கையை மாற்றும்

நாம் அனைவருக்கும் எல்லா வகையிலும் ஒரே மாதிரியான குண நலன்கள், ஆளுமை இருந்தால் உலகம் எவ்வளவு மோசமாக இருக்கும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதிர்ஷ்டவசமாக, அனைத்து மனிதர்களும் தனித்துவமானவர்களாக மற்றும் குறிப்பிட்ட ஆளுமைப் பண்புகளைக் கொண்டுள்ளனர். ஒரே மாதிரியான ஆளுமை, திறமை கொண்டிருந்தால் நம் உலகம் ஒரே மாதிரியாக இயங்கும். ஒரே மாதிரியான வேலை வாய்ப்பில் போட்டியும், சில வேலைகள் எப்படி செய்வது என்று கூட யாராலும் யோசிக்க முடியாதவர்களாக இருந்திருப்போம்.

இறகும் நம் குணம், ஆளுமைப் பண்பும்

உங்கள் ஆளுமையை கண்டறிய நீங்கள் ஆர்வமாக இருக்க வேண்டும். உங்களைப் புரிந்துகொள்ள உங்களை அனுமதிக்கும் இறகு ஆளுமை சோதனையை இங்கு பார்ப்போம்.



இந்த பதிவில் கொடுக்கப்பட்ட 5 வெவ்வேறு பறவைகளின் இறகுகளின் வடிவங்களைப் பார்த்து அதில் உங்களுக்கு பிடித்த இறகு எது என்பதை உறுதி கொள்ளுங்கள்.

தொடர்ந்து அந்த இறகுக்குரிய ஆளுமைத் திறன் என்ன, குண நலன்கள் என்னென்ன என்பதைப் படித்தால், அந்த இறகின் வடிவங்கள், வண்ணங்கள் எப்படி ஈர்த்தது, அதற்கான உளவியல், ஆளுமைத் திறன் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதில் உங்களுக்கு பிடித்த சாவியை தேர்வு செய்யுங்கள், உங்கள் ஆளுமை, குணம் எப்படி இருக்கும் தெரிந்து கொள்ளுங்கள்

அமைதியையும், நல்லிணக்கத்தையும் விரும்பும் இறகு

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள முதல் வகையான இறகை தேர்வு செய்துள்ள நீங்கள் ஒரு உன்னதமான, அமைதியை விரும்பும், வன்முறையற்ற எண்ணங்கள் கொண்ட ஆன்மாவாக திகழ்பவர். மேலும் நீங்கள் மக்களுக்கு உதவ எப்போதும் விரும்பக்கூடியவர்கள். மற்றவர்களுக்கு நல்ல ஆலோசனைத் தரக்கூடியவர்களாக இருப்பீர்கள்.

சூழலை உணர்ந்து செயல்படுபவராகவும், எந்த வித மோதல்களுக்கும் செல்லாமல், சூழலை இணக்கமானதாக மாற்ற முயல்பவர்கள். எந்த சூழலிலும் நீங்கள் சட்டத்தை மதிக்கக்கூடியவர்கள். உங்கள் வாழ்க்கையில் மோதல்கள் மற்றும் சண்டைகளைத் தவிர்க்க உங்களால் முடிந்தவரை முயற்சி செய்பவர்களாக இருப்பீர்கள்.

யாராவது உங்களை ஒரு பலவீனமான குணம் கொண்டவர் என்று மதிப்பிடும் போது, அவர்களுக்கு உங்களின் அன்பாலும், உதவியாலும் தான் யார் என காட்டுவீர்கள். அதுவே உங்கள் மிகப்பெரிய பலம்.

தங்கள் துணையின் சாதனையைக் கூட கண்டு பொறாமைப் படக்கூடிய ராசிகள் யார் தெரியுமா?

2 வது வகை இறகு : நுண்ணறிவு மற்றும் கற்றலின் இறகு

இந்த இறகை தேர்வு செய்த நபர்கள் மிகவும் புத்திசாலி, விடாமுயற்சி மற்றும் மிகவும் கவனிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். எனவே எதுவும் உங்கள் கவனத்தைத் தப்புவதில்லை. நீங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை முதலில் நிதானமாக கேட்கக்கூடியவர்கள். அதை கூர்மையாக கவனித்து அதில் உள்ள நல்ல விஷயங்களை தான் எடுத்துக் கொள்வதும், தேவையானவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கக்கூடிய சிறந்த நபர்கள்.

உங்களின் புத்திசாலித்தனால் எந்த சூழ்நிலையையும் சமாளித்துவிட முடியும். அதனால் எந்த விஷயத்திலும் வெற்றிகராக செய்து முடிக்க முடியும்.
அதே சமயம் மதிப்புமிக்க அறிவுரைகளை நீங்கள் மற்றவர்களுக்கு வழங்கினாலும், உங்களால் உங்கள் பிரச்சனைகளை மனம் திறந்து யாரிடமும் சுதந்திரமாகப் பேச முடியாது.

நீங்கள் அடிக்கடி உங்களை சுயபரிசோதனை செய்து பார்த்துக் கொள்வது அவசியம், மற்றவர்கள் உங்களை தனிமைப்படுத்துவதற்கு என்ன காரணம் என ஆராயவும். உங்கள் நண்பர்களிடம் வெளிப்படையாக இருக்க வேண்டும்.

உங்கள் ராசிப்படி இவ்வளவு கெட்ட குணம் ​உங்களிடம்இருக்குமாம் - நல்ல குணங்கள் என்னென்ன இருக்கும் தெரியுமா?

3 வது வகை இறகு : சுதந்திரம் மற்றும் இலக்குகளின் ஆர்வம் கொண்டவர்கள்

3வது வகை இறகை தேர்வு செய்த நீங்கள் மிகவும் சுதந்திரமான நபர் மற்றும் உங்கள் இலக்குகளில் அதிக கவனம் செலுத்துபவர். நீங்கள் தீர்வு சார்ந்த அணுகுமுறையுடன் உறுதியாக யோசித்து நடப்பவர்கள். எனவே நீங்கள் ஒரு எழுச்சியூட்டும் தலைவராக இருப்பதற்குத் தேவையான குணங்களைக் கொண்டிருக்கிறீர்கள்.

சாகசத்தை விரும்பக்கூடியவர்களாக இருப்பதால் நீங்கள் உங்கள் வாழ்க்கை இலக்குகளை நிறைவேற்றும் போது, அதில் ஆபத்து மற்றும் சாகச விஷயங்களை வெளிப்படுத்த தயங்கமாட்டீர்கள். உங்கள் ஆற்றல், ஆர்வம், கவனம் மற்றும் செயல்கள் அனைத்தும் உங்கள் விரும்பத்தை அடைவதற்காக, அதை நோக்கி செலுத்துகிறீர்கள்.

எந்த ஒரு இலக்குகளையும் ஆர்வத்துடன் அடைய போராடுவீர்கள். "ஏழு முறை கீழே விழுந்து எட்டு முறை நில்லுங்கள்" என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்கள்.
தோல்விகள் வரும்போது, உங்கள் அணுகுமுறை கட்டுக்குள் இருக்கும். அனுபவங்கள் உங்களை புத்திசாலியாகவும், வலிமையாகவும், முதிர்ச்சியடையச் செய்யவும்.

வீட்டில் குப்பைத் தொட்டியை எங்கே வைக்க வேண்டும், எங்கு வைக்க கூடாது தெரியுமா?

4 வது வகை இறகு : கற்பனை மற்றும் கவர்ச்சியில் ஆர்வம் கொண்ட இறகு

4வது வகை இறகை தேர்வு செய்த உங்களிடம் அபரிமிதமான கற்பனைத்திறன் மற்றும் இணையற்ற மேம்பாடு திறன் இருக்கும். இது சிக்கல்களை எளிதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் தீர்க்கும் திறனை உங்களுக்கு வழங்குகிறது. நீங்கள் ஒரு கவர்ச்சியான மற்றும் காந்த தோற்றத்தைக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் ஆளுமை சற்று குறைவாக இருக்கும்.
உங்கள் படைப்பாற்றல், தனித்தன்மையான திறமை ஆகியவை மற்றவர்களைப் பொறாமையை ஏற்படுத்தும். அதன் வழியாக வரக்கூடிய பிரச்னைகளை உங்களின் சில புதிய அணுகுமுறையால் எதிர்கொள்வீர்கள்.

இந்த இறகை விரும்புபவரின் குண நலன்கள்

சுருக்கமாகச் சொன்னால், உங்களிடம் வலுவான, சிக்கலைத் தீர்க்கும் ஆளுமை உள்ளது. அது உங்களை தனித்துவமாக்குகிறது. அதனால் வாதங்களை வலுவாக வைக்க உதவுகிறது.

உங்கள் வசீகரமான தோற்றம், மற்றவர்களை வசீகரிக்கும் நடத்தை மற்றும் இயற்கையாகவே கவர்ச்சிகரமான ஒளி பொருந்திய நபராக இருப்பதால் மற்றவர்களை உடனடியாக கவனத்தை ஈர்க்கிறீர்கள்.
உங்களை நெருங்கிப் பழகுவதையே பெரும்பாலான மக்கள் அதிர்ஷ்டசாலியாகக் கருதுவார்கள்.

உங்களிடம் உள்ள பெரிய பிரச்னை மன அழுத்தம். சில விஷயங்கள் மன அழுத்தத்தை உணர்த்தும். வாழ்க்கையில் அதிக ஓய்வெடுப்பது நல்லது. பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக ஒவ்வொரு கணத்தையும் அனுபவிக்கவும்.
பல்லி விழும் பலன்கள் பெண்களுக்கு

5 வது வகை இறகு : கலை மற்றும் படைப்பாற்றல் உணர்த்தும் இறகு

5 வது வகை இறகை தேர்வு செய்த உங்களிடம் அபரிமிதமான கலைத்திறன், படைப்பாற்றல் மற்றும் எதையும் விவரமாக அறிந்து கொள்ளும் திறன் உள்ளது.
உங்கள் கலைத்திறன் மற்றவர்களை கவனிக்க வைக்கவும், மரியாதை பெற்றுத் தரவும் உதவும். உங்கள் அதீத தன்னம்பிக்கை மட்டும் பிரச்சினைக்குரியது. மற்றவர்களை கண்மூடித்தனமாக நம்புவது உங்களை காயப்படுத்தலாம்.

ஒரு கலைநயமிக்க நபராக இருப்பதால், நீங்கள் மிகவும் உணர்ச்சிமிக்க நபராகவும் இருப்பீர்கள். அதனாலேயே எளிதில் பாதிக்கப்படுவீர்கள். அதனால் சிறிய தோல்வி அல்லது தடுமாற்றம் கூட பாதுகாப்பின்மையாக உணர்த்தும்.

நீங்கள் மன நிம்மதி பெற நீங்கள் நம்பக்கூடிய நபர்களை கவனமாக தேர்வு செய்யவும்.

உங்கள் ஆளுமையை கண்டுபிடித்தீர்களா? இந்த இறகு கணிப்பு உங்களுக்கு பொருந்துகிறதா என்பது குறித்து கீழே உள்ள கருத்துகளைப் பகிரவும்.

எழுத்தாளர் பற்றி
அரவிந்தன்
நான் அரவிந்தன் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 12 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஜோதிடம், ஆன்மிகம் தொடர்பான செய்திகளை எழுதிக் கொண்டிருக்கும் நான், விளையாட்டு, நடப்பு நிகழ்வு, செய்திகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Principal Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்