ஆப்நகரம்

நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பது எப்படி? - வைரஸ் நம்மை நெருங்காமல் காத்துக் கொள்ளும் வழிமுறை

நம்மை தாக்கக் கூடிய நோய்களிடமிருந்து காத்துக் கொள்ள நம் உடலிலேயே எதிர்ப்பு சக்தி உள்ளது. நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி என்பதை இங்கு விரிவாக காண்போம்.

Samayam Tamil 6 Apr 2020, 8:58 pm
உலகில் வைரஸ், பாக்டீரியா என கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரி முதல், உலகத்தையே ஆட்டிப்படைக்கும் மனிதன் வரை வாழ்ந்து வருகிறோம். ஒவ்வொரு புதிய வைரஸ் தோன்றி மனிதனை தாக்கும் போதெல்லாம் மனிதன் அதிலிருந்து எப்படி தப்பிப்பது, தற்காத்துக் கொள்வது என சிந்திக்கிறான். ஆனால் தற்போது கொரோனா எனும் வைரஸ் உலகத்தையே நடுநடுங்க வைத்துள்ளது.
Samayam Tamil Ways to strengthen your immune system
Ways to strengthen your immune system


எந்த வகை நோய் கிருமியாக இருந்தாலும், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் நம் உடல் எந்த பிரச்னையை சமாளிக்கும் ஆற்றலோடு இருக்கும். எந்த வைரஸைக் கண்டு பயப்படத் தேவையில்லை.

அப்படி நம் உடலை ஆரோக்கியாமக வைக்க நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த சில வழிமுறைகளும், ஆரோக்கிய விஷயங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.

உடலுக்கு நோய் வரும் முன் காப்பது எப்படி?
ஹோமமும் உடல் ஆரோக்கியமும்
நம் கோயிலிலும், வீட்டிலும் ஹோமம் செய்து பார்த்திருப்போம். இந்த ஹோமத்தின் போது நவகிரகங்களின் சமித்துக்கள் ஹோமகுண்டத்தில் போடப்படுகிறது. அதன் மூலம் பல உடல் ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகிறது.



ஆரோக்கியத்தை மேம்படுத்த வீட்டில் செய்ய வேண்டிய விஷயங்கள்:
நாம் குடிக்கக் கூடிய நீர் நன்றாக கொதித்து ஆறிய சுத்தமான நீராக இருப்பது நல்லது.

வீட்டினுள் சூரிய வெளிச்சம் படும் வகையில் கதவு, ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டியது அவசியம்.

முடிந்த வரை அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. நன்றாக சுத்தம் செய்த பாத்திரங்களை பயன்படுத்துவது அவசியம். முடிந்தால் நன்றாக விலக்கிய பாத்திரங்கள் சூரிய ஒளியில் வைக்கலாம்.

வீட்டில் சமைத்த பச்சை காய்கறி, கீரைகள், பழங்களை எடுத்துக் கொள்வது உடலுக்கு நன்மையை தரும்.

தினமும் குளித்த பின் சுத்தமாக துவைத்த உடைகளை உடுத்த வேண்டும்.

யாரையும் தேவையின்றி தொட்டு பேசுதல் கூடாது.

அடுத்தவரிக் கைப்பட்ட அல்லது எச்சில் பட்ட உணவை உண்ணக் கூடாது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்