ஆப்நகரம்

Vastu Tips: வீடு வாங்குவதற்கு முன் இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்..!

நீங்கள் வாங்க திட்டமிட்டுள்ள வீடு வாஸ்து சாஸ்திரத்தின், அடிப்படை விதிகளைப் பின்பற்றி கட்டப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். புதிய வீட்டிற்கான இந்த வாஸ்து குறிப்புகள் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வீடு வாஸ்து இணக்கமாக உள்ளதா மற்றும் நமது எதிர்க்கால வளர்ச்சிக்கு வளைவகுக்குமா என்பதை தெரிந்து கொள்ள உங்களுக்கு உதவும்.

Samayam Tamil 17 Sep 2022, 6:06 pm
"வீட்டை கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்" என்ற பழமொழி அனைவரும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஏனென்றால், வீடுகட்டுவதும், திருமணம் செய்வதும் கிட்டத்தட்ட பெரிய விஷயமாக கருதப்படுகிறது. வீட்டின் அமைப்பு வேண்டுமானால் தகுதிக்கு ஏற்றார் போல மாறுபடலாம். ஆனால், அவரவர் தகுதிக்கு ஏற்றார் போல வீடு காட்டுவார்கள்.
Samayam Tamil keep these things in your mind buying new home
Vastu Tips: வீடு வாங்குவதற்கு முன் இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்..!


நீங்களும், வீடு வாங்க திட்டமிட்டிருந்தால், அறைகளின் அளவு மற்றும் வடிவத்தைப் பார்த்து எப்போதும் முன்பதிவு செய்யாதீர்கள். வீடு வாங்கும் போது வாஸ்து தொடர்பான சில விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். இது உங்கள் வீட்டை அதிர்ஷ்டமாகவும், வளமாகவும் மாற்றுவதுடன் உங்கள் எதிர்க்களத்தையும் சிறப்பாக மாற்றும்.

​வீடு வாங்கும் போது இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்

இன்றைய காலத்தில் வாஸ்துவின் முக்கியத்துவம் குறித்து அனைவருக்கும் தெரியும். ஆனால், பெரும்பாலானோர் வாஸ்து தோஷம் வீட்டிற்குள் தான் ஏற்படும் என்பதை தப்பாக உணர்கிறார்கள். நமது வீட்டிற்கு வெளியிலும் வாஸ்து பார்ப்பது மிகவும் முக்கியம். ஏனென்றால், நமது வீட்டில் நடக்கும் சில அபசகுணமாக சம்பவங்களுக்கு, காரணம் வீட்டிற்கு வெளியில் உள்ள வாஸ்து குறைபாடாகவும் இருக்கலாம்.

வீட்டிற்கு வெளியில் உள்ள வாஸ்து குறைபாடுகள், வீட்டில் வசிக்கும் உறுப்பினர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகளை கொண்டு வருவதோடு, மக்களின் முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கும். எனவே, எப்போது வீடு வாங்கினாலும், கட்டினாலும் அதைச் சுற்றியுள்ள வாஸ்து குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். புது வீட்டிற்கு செல்லும் போது எந்தெந்த விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்று பார்ப்போம்.

​வீட்டிற்கு அருகில் வழிபாட்டுத்தளங்கள் இருப்பதை உறுதிப்படுத்தவும்

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டிற்கு அருகில் ஒரு வழிபாட்டுத்தளம் இருந்தால், அந்த பகுதிகளில் ஆற்றல் மிகவும் நேர்மறையாக இருக்கும். இந்த இடங்களின் சக்தி மிகவும் நேர்மறை ஆற்றலாக இருப்பதால், அதனுடன் தொடர்பு கொள்வது மனிதர்களுக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்தத் தொடங்குகிறது. ஒரு மத ஸ்தலத்திற்கு அருகில் வாழ்வது ஒரு நபரின் வாழ்க்கையை அழுத்தமாக மாற்றும்.

​வீட்டின் அருகே மரம் அல்லது கம்பம்

வாஸ்து படி, வீட்டிற்கு அருகில் மரம் அல்லது தூண் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துங்கள். ஏனென்றால், வீட்டிற்கு மரம் அல்லது தூண் இருப்பது நல்லதல்ல. இப்படி ஒரு இடத்தில் நாம் வாழும் போது, ஒரு நபர் ஒவ்வொரு வேலையிலும் சில தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதே சமயம், மிக எளிதாக செய்ய வேண்டிய பணிகளில் சிக்கல்களும் எழுகின்றன.

​வீட்டிற்கு அருகில் மருத்துவமனை

மருத்துவமனை வீட்டின் அருகாமையிலோ அல்லது எதிரிலோ இருக்கக் கூடாது. ஏனெனில், உடல்நிலை சரியில்லாதவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். யாருடைய ஒளி மிகவும் பலவீனமானது. இந்த ஆரோக்கியமற்ற நபர்களால், அங்கு எதிர்மறை ஆற்றல் அளவு மிக அதிகமாக உள்ளது. இதனால் மருத்துவமனைகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலை உள்ளது.

​வீட்டின் அருகே பழைய கட்டிடங்கள் இருக்கக் கூடாது

சிலரின் வீட்டைச் சுற்றிலும் பழைய கட்டிடங்கள் இருப்பதை பலமுறை பார்த்திருப்பீர்கள். மன்னர்கள் அல்லது மகாராஜாக்கள் காலத்தைச் சேர்ந்தவன் புதைக்கப்பட்டிருந்தால், அத்தகைய இடத்திலும் எதிர்மறை ஆற்றல் அதிகம்.

​டி- பாயின்ட்டில் வீட்டில் இருக்க வேண்டாம்

வீடு ஒருபோதும் T-பாயின்ட்டில் இருக்கக்கூடாது. அதாவது, மூன்று வீதிகள் அல்லது மூன்று சாலைகள் சந்திக்கும் வீட்டைக் கொண்டிருப்பது சுபமாக கருதப்படுவதில்லை. அவ்வாறான இடங்களில் வாழும் மக்களுக்கு நல்ல பலன் கிடைப்பதில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்