ஆப்நகரம்

வாழ்க்கை பிரச்னைக்கு சிறந்த ஆலோசனை வழங்கும் 5 ராசிகள்

ஒவ்வொருவரும் தன் வாழ்வில் முன்னேற தன்னுடைய சுய புத்திமட்டுமில்லாமல், சிலரின் சிறப்பான ஆலோசனையும் உதவியாக இருக்கும்.

பலருக்கு தானாக சிந்தித்து முடிவு எடுக்கும் அறிவாற்றல் இருக்கும். பலர் சொல் புத்தி கொண்டவர்களாக அதாவது மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு அதை சரியாக செய்வார்கள்.

Samayam Tamil 17 Sep 2021, 6:56 pm
ஒவ்வொருவரும் தன் வாழ்வில் முன்னேற தன்னுடைய சுய புத்திமட்டுமில்லாமல், சிலரின் சிறப்பான ஆலோசனையும் உதவியாக இருக்கும்.
Samayam Tamil mesham kadagam thulam rasi who solve their problems with the right advice in tamil
வாழ்க்கை பிரச்னைக்கு சிறந்த ஆலோசனை வழங்கும் 5 ராசிகள்


பலருக்கு தானாக சிந்தித்து முடிவு எடுக்கும் அறிவாற்றல் இருக்கும். பலர் சொல் புத்தி கொண்டவர்களாக அதாவது மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு அதை சரியாக செய்வார்கள்.

சிறந்த ஆலோசகர்

தொழில், வியாபாரம், காதல், குடும்ப பிரச்னைகள் தீர்த்தல் என பல வகையான விஷயங்களுக்கு சிலர் சரியான வகையில் ஆலோசனை வழங்குவதில் வள்ளவர்களாக இருப்பார்கள். அவர்களின் ஆலோசனையைப் பின்பற்றி முன்னேற முடியும்.

ஜோதிடத்தின் படி, அனைத்து வகையான வாழ்க்கை பிரச்சனைகளுக்கும் சிறந்த ஆலோசகர்களை வழங்கக்கூடிய சிலர் இருப்பார்கள். அப்படிப்பட்ட 5 ராசியினர் யார் என்பதை இங்கு பார்ப்போம்.

திருமணம் மற்றும் உடலுறவுமுறைகளை கிரகங்கள் எப்படி கட்டுப்படுத்துகிறது?

​துலாம்

சுக்கிரன் ஆளக்கூடிய துலாம் ராசியினர், தன்னுடைய மனநிலையும், மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு உரிய மதிப்பு கொடுக்கக்கூடியவர்கள். இதனால் தான் இவர்கள் மற்றவர்களின் மனதை காயப்படுத்தாமல் இருக்க எந்த ஒரு மோதல்களைத் தவிர்க்கிறார்கள். இவர்களுக்காக மட்டுமில்லாமல், மற்றவர்களின் வாழ்க்கைப் பிரச்னைகளுக்கும் சரியான வகையில் ஆலோசனை கூறி அவர்களுக்கு உண்மையிலேயே உதவிகரமாக இருப்பார்கள்.

கேந்திர, திரி கோண, மறைவு வீடுகள் என்றால் என்ன? - அவை எப்படிப்பட்ட பலன்கள்

கடகம்

ஜோதிடத்தில் மனோகாரகன் என அழைக்கப்படும் சந்திர பகவான் ஆளக்கூடிய கடக ராசியினர், தன்னைப் போல மற்றவர்களை அரவணைத்து நன்றாக பார்த்துக் கொள்ள விரும்புவார்கள். இவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பாக்கூடியவர்கள். அதனால் ம் அற்றவர்களின் வலியை சரியாக உணர்ந்து அதற்கான நிவாரணமாக, பிரச்சினைகளைத் தீர்க்க சிறந்த ஆலோசனைகளை வழங்குவார்கள். மற்றவர்களின் செயல்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

​கன்னி

கன்னி ராசியினர் எதையும் தனியாக செய்து முடிக்க நினைப்பார்கள். பொதுவாக எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் சிறந்த ஆலோசனைகளை வழங்குவார்கள்.

வாழ்வில் எப்படிப்பட்ட கடுமையான பிரச்னைகள் வந்தால், கன்னி ராசியினரிடம் ஆலோசனைக் கேட்டால், அவர்கள் உங்களின் பிரச்னைகளைத் தீர்க்க சரியான தீர்வை கொடுத்து உதவுவார்கள்.

இவர்கள் மிகவும் நடைமுறைக்குரியவர்கள் என்பதால், அவர்களின் தீர்வுகளும் மிகவும் யதார்த்தமானவை.

ரிஷபம்

ரிஷப ராசியினர் மிகவும் பிடிவாதமானவர்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் எந்த பிரச்னைகளுக்கு எதிராக போராடக்கூடியவர்கள். இவர்களின் பாணியிலேயே, மற்றவர்களின் பிரச்சினைகளுக்கும் சரியான ஆலோசனைகளை வழங்குவார்கள். இது நடைமுறைக்குரியதாக இருக்கும் வகையில் பகுப்பாய்ந்து தீர்வை தருவார்கள்.

மேஷம்

இந்த வரிசையில் மேஷ ராசியினர் இருப்பது ஆச்சரியப்படுத்தலாம். ஆனால் இவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் உற்சாகமான, கலகலப்பான, தைரியமான நபர்கள்.

உங்களின் பிரச்சினைக்குரிய விஷயங்களுக்கு தீர்வையும் அந்த வகையிலேயே கொடுக்க சொல்வார்கள். உங்களுக்கு சிறப்பாக ஊக்கம் அளிப்பதோடு, வேறு கோணத்தில் பிரச்னைகளை தீர்க்க அறிவுரைகளை வழங்குவார்கள். வாழ்க்கைப் பிரச்னைகளுக்கு ஆலோசனையைக் கொடுத்து தெளிவான நபராக மாற்றுவார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்