ஆப்நகரம்

ராகு கேது பெயர்ச்சி: துலாம் ராசியில் கேது சஞ்சாரம் - மோசமான பலன்கள் தவிர்க்க எளிய பரிகாரம்

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2022 ஏப்ரல் 12 ம் தேதி மதியம் 1.38 மணியளவில் இந்த ராகு - கேது பெயர்ச்சி நிகழ்கிறது.இந்த பெயர்ச்சியின் போது கேது தனது நட்பு வீடான துலாம் ராசியில் சஞ்சரிக்க உள்ளார். ஏழை, எளியோருக்கு உதவலாம், தான, தானமம் செய்வது அவசியம்.

Samayam Tamil 15 Mar 2022, 1:16 pm

ஹைலைட்ஸ்:

  • திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2022 ஏப்ரல் 12 ம் தேதி மதியம் 1.38 மணியளவில் இந்த ராகு - கேது பெயர்ச்சி நிகழ்கிறது.
  • இந்த பெயர்ச்சியின் போது கேது தனது நட்பு வீடான துலாம் ராசியில் சஞ்சரிக்க உள்ளார்.
  • ஏழை, எளியோருக்கு உதவலாம், தான, தானமம் செய்வது அவசியம்.

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Rahu-Ketu Pariharam
ஜோதிடத்தில் முக்கிய நிகழ்வாகச் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு - கேது பெயர்ச்சிகள் பார்க்கப்படுகின்றன.
ராகு கேது பெயர்ச்சி :
இந்நிலையில் நிழல் கிரகம் அல்லது சாயா கிரகம் என அழைக்கப்படும் ராகு கேது பெயர்ச்சி, வாக்கிய பஞ்சாங்கத்தின்படி பிலவ ஆண்டு மார்ச் 21ம் தேதி மதியம் 3.02 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த நிகழ்வின் போது ராகு ரிஷபத்தில் இருக்கும் கார்த்திகை 2ம் பாதத்திலிருந்து மேஷ ராசியில் இருக்கும் கார்த்திகை 1ம் பாதத்திற்கும், கேது விருச்சிகத்தில் இருக்கும் விசாகம் 4ம் பாதத்திலிருந்து, உங்கள் ஜென்ம ராசியான துலாம் ராசி விசாக நட்சத்திரம் 3ம் பாதத்திற்குப் பெயர்ச்சி ஆக உள்ளார்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2022 ஏப்ரல் 12 ம் தேதி மதியம் 1.38 மணியளவில் இந்த ராகு - கேது பெயர்ச்சி நிகழ்கிறது.

ராகு கேது இந்த 5 விஷயங்களில் கவனமாக இருந்தால், தீங்கு விளையாது!

இந்த கிரக பெயர்ச்சியின் போது கேது தனது நட்பு வீடான துலாம் ராசியில் சஞ்சரிக்க உள்ளார். ஞானத்தை அருளக்கூடிய கேது பகவான் துலாம் ராசியில் சஞ்சாரம் செய்வதால் நாட்டிலும், தனிமனிதர் வாழ்க்கையிலும் பெரிய ஏற்ற தாழ்வுகள், மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கேதுவின் அசுப பலன்களைத் தவிர்க்க, சிறிய, எளிதான பரிகாரங்களைச் சொல்லப் போகிறோம்.

கேதுவின் அசுப பலன்கள் தீர எளிய பரிகாரம் :
ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருப்பது நல்லது. குறைந்தது 18 சனிக்கிழமைகளிலாவது விரதம் கடைப்பிடிக்கவும்.

கேதுவின் அசுப பலன்களைத் தவிர்க்க “ஓம் ஷ்ரம் ஸ்ரீம் ஸ்ரோ சா கேத்வே நமக” (Om shram shreem shroum sah ketave namah) என்ற மந்திரத்தை தினமும் 18 முறை ஜெபிக்கவும்.


கேதுவின் தோஷங்களைத் தவிர்க்க, ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்தின் கீழ் நெய் தீபம் ஏற்றி வழிபடவும். இப்படிச் செய்வதால் பூலோகம் சாந்தி அடையும்.

உங்கள் ராசிக்கு கேது மோசமான இடத்தில் அமைந்து, தசா, புத்திகளும் சாதகமற்று இருப்பின் தான தர்மங்களைச் செய்யுங்கள்.
ஏழை, எளியோர், இல்லாதவர்களுக்குப் போர்வைகள், குடைகள், இரும்பு பொருட்கள், ஆடைகளைத் தானமாக கொடுக்கலாம்.

வீட்டில் கருப்பு நாயையும் வளர்க்கலாம்.


மேஷம் ராசி ராகு - கேது பெயர்ச்சி பலன் 2022 : சிக்கலிலிருந்து தப்பிக்க கவனம் தேவை

ராகு மற்றும் கேதுவின் அசுப பலன்களைத் தவிர்க்க, கலிய நாகத்தின் மீது நடனமாடும் கிருஷ்ணரின் படத்தை தினமும் வணங்க வேண்டும்.

ஜாதகத்தில் கேது சுபமாக இருக்க, கருப்பு நிற பசுவை தானம் செய்வதும் நல்லது. உங்களால் இயலவில்லை என்றால், கருப்பு நிற பசுவிற்குப் பசுந்தீவனம் கொடுங்கள்.

கேதுவின் அசுப பலன்களிலிருந்து விலகி இருக்க, ஏழை எளிய மக்களுக்கு முடிந்த வரையில் உதவ வேண்டும், அவர்களுக்கு உணவு, உடை மற்றும் சிறிது பணத்தை தானம் செய்ய வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்