ஆப்நகரம்

Kanavu Palangal : இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன் தெரியுமா? - நல்ல கனவா, கெட்டதா எப்படி அறிந்து கொள்வது?

நம்மில் அனைவருக்கும் கனவு வந்திருக்கும். நம்முடைய நினைவுகளின் கற்பனை வடிவம் தான் கனவு என்கிறோம். கனவுகள் பெரும்பாலும் நம்முடைய ஆழ்ந்த உறக்கத்தின் போது வரக்கூடியது. நம் ஆழ்ந்த மனதில் இருக்கக்கூடிய நினைவு, எண்ணங்களுக்கு கற்பனை வடிவத்தை அந்த கனவு கொடுக்கிறது.

Authored byஅரவிந்தன் | Samayam Tamil 22 May 2023, 10:13 am
எந்த நேரத்தில் வரக்கூடிய கனவு பலிக்கும் தெரியுமா?
Samayam Tamil seeing dead person alive in dream meaning dreams of deceased loved ones
Kanavu Palangal : இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன் தெரியுமா? - நல்ல கனவா, கெட்டதா எப்படி அறிந்து கொள்வது?

ஆழ்ந்த மனதில் இருக்கக்கூடிய நினைவு, எண்ணங்களுக்கு கற்பனை வடிவத்தை ​கொடுப்பது கனவு .
மாலை 6 முதல் இரவு 8.24 க்குள் வரக்கூடிய கனவு ஒருவருட காலத்திற்குள் பலிக்கும்.
இரவு 8.24 முதல் 10.48 வரை வரக்கூடிய கனவு 3 மாதங்களில் பலிக்கும்.
இரவு 10.48 மணி முதல் நள்ளிரவு 1.12 வரை வரக்கூடிய கனவு 1 மாத காலத்தில் பலிக்க வாய்ப்புள்ளதாகப் பஞ்சாங்க சாஸ்திரங்களில் கனவு பலனாக குறிப்பிடப்படுகிறது.

​இறந்தவர்கள் அழுவது போன்ற கனவு தரும் பலன்​

இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும்? - Dream Of Unknown Dead Person In Tamil Hinduism


1. இறந்தவர்கள் உங்களின் கனவில் வந்தால் நல்ல செய்திகள் கிடைக்கும். உங்களின் ஆயுள் அதிகரிக்கு என்பது பொருள்.

2. இறந்தவர்கள் ஆசி செய்வது போன்று கனவு வந்தால் உங்களுக்கு எல்லா விதமான நன்மைகளும் உண்டாகும் என்று பொருள்.



3. இறந்தவர்கள் அழுவது போன்ற உங்கள் கனவில் வந்தால் அது நல்ல தல்ல. இந்த கனவு வந்தால் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து கொள்வது நல்லது. வீட்டை விட்டு செல்லும் போது விநாயகரை வழிபட்டு செல்லவும்.

கனவில் பல்லியைப் பார்த்தால் ஆபத்தா? - பல்லி கனவில் வருவதன் அர்த்தம், பரிகாரம் இதோ

பிணம் கனவில் வந்தால் என்ன பலன்?

Dreaming of a Dead Person Talking to You Meaning

4. இறந்தவர்களிடம் பேசுவது போன்ற கனவு வந்தால் உங்களின் பெயர், புகழ் அதிகரிக்கும் என்று பொருள்.
5. இறந்தவர்கள் உங்கள் வீட்டில் தூங்குவது போன்ற கனவு, உங்களுக்கு வரக்கூடிய பெரிய கண்டத்திலிருந்து நீங்கள் தப்பிப்பீர்கள் என்று அர்த்தம்.
6. சவப்பெட்டியை உங்கள் கனவில் வந்தால் நெருங்கியவர்கள் யாரேனும் இறக்கப் போகிறார்கள் என்று பொருள்.

7. இறந்தவர்கள் உங்களுடன் சேர்ந்து சாப்பிடுவது போன்ற கனவு கண்டால் உங்களுக்கு நற்புகழும், செலவ செழிப்பும் உண்டாகும்.
8. இறந்தவர்கள் உங்களுடம் பேசுவது போன்று கனவு கண்டால் உங்களுக்கு வரக்கூடிய சில இக்கட்டான நிலையிலிருந்து மீள்வீர்கள். சிலர் அதற்கு உதவுவார்கள்.
9. நாமே இறந்து விட்டது போன்ற கனவு உங்களுக்கு வந்தால் நம்முடைய ஆயுள் அதிகரிக்கும்.

யானை கனவில் வந்தால் நல்லதா, கெட்டதா? வெள்ளை யானை துரத்தினால் என்ன அர்த்தம் தெரியுமா?

இறந்தவர்கள் உங்கள் கனவில் பேசினால் என்ன அர்த்தம்?

What Does It Mean When A Dead Person Touches You In A Dream

10. இறந்து போன உங்கள் தந்தை கனவில் வந்தால் நீங்கள் எல்லா பிரச்னைகளையும் சிறப்பாக கையாண்டு விரைவில் அதில் வெற்றி பெற முடியும் என்று அர்த்தம்.


11. இறந்து போன தாய் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு சுப பலன்கள் ஏற்படும். அதில் குறிப்பாக குடும்பத்தில் உள்ளவர் ஒருவருக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கப்போகிறது என்று அர்த்தம்.

12. நம் அன்புக்குரிய, நமக்கு வேண்டப்பட்ட ஒருவர் இறந்தது போன்ற கனவு கண்டால் அதனால் உங்களுக்கு துன்பங்கள் நீங்கப்போகிறது என்று பொருள்.

13. இறந்து போனவர்களை தூக்கிச் செல்வது போன்று கனவு கண்டால், உங்களுக்கு நன்மை உண்டாகும்.

கனவில் எருமை மாடு வந்தால் கெட்டது நடக்குமா? - பசு, நரி போன்ற விலங்குகள் கனவில் வந்தால் என்ன பலன் தெரியுமா?

​உங்களின் இறந்த தாய், தந்தை கனவில் கண்டால் என்ன பலன்?

Dreaming of Dead Father Meaning

14. இறந்தவர்கள் உங்கள் கனவில் வந்து ஆசி செய்வது போன்று கண்டால் உங்களுக்கு அனைத்து நன்மையும் வந்து சேரும்.


15. இறந்தவர் உங்கள் கனவில் வந்து அழுவது போன்று கண்டால், உங்களுக்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வருவது நல்லது.

16. இறந்தவர்கள் உங்களுடன் பேசுவது போன்ற கனவு கண்டால் உங்களின் பெயர், புகழ் உண்டாகும் என்று பொருள்.

17. உங்களின் இறந்த தாய், தந்தை கனவில் கண்டால், உங்களுக்கு வரக்கூடிய ஆபத்து, பிரச்னையை சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்தவர்கள் என்று பொருள்.

18. கனவில் தானே இறந்துவிட்டது போன்று கண்டால் நன்மைகளும், உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்கள் நடக்கும்.

பாம்பு குறித்த கனவு வந்தால் என்ன அர்த்தம்?

எழுத்தாளர் பற்றி
அரவிந்தன்
நான் அரவிந்தன் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 12 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஜோதிடம், ஆன்மிகம் தொடர்பான செய்திகளை எழுதிக் கொண்டிருக்கும் நான், விளையாட்டு, நடப்பு நிகழ்வு, செய்திகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Principal Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்