ஆப்நகரம்

சனி ராகு கேது சுக்கிரன் கிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷம் நீங்க எளிய பரிகாரம்!

Shukran Pariharam- ஒருவருக்கி சில கிரகங்களால் கெடு பலன்கள் ஏற்படுவதுண்டு. அதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும். குறிப்பாக சுக்கிரன், ராகு கேது, சனி பகவானின் நற்பலன்களை அதிகம் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்...

Samayam Tamil 3 Jul 2020, 8:54 pm
உலகில் யாராக இருந்தாலும் அவரின் ஜாதக பலனைப் பொறுத்த வரையில் ஒரு கிரகம் 100 சதவீதம் நன்மையோ அல்லது தீமையோ செய்யாது. ஒருவருக்கு அனைத்து கிரகங்களின் நன்மையும், தீய பலன்களும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் கலந்து தான் இருக்கும். இருப்பினும் ஒரு சில கிரகங்களின் அமைப்பு தீய பலனை கொடுப்பதாக இருக்கும். அப்படி இருக்கும் போது அந்த ஜாதகத்தை சேர்ந்தவர் அந்த கிரகத்தின் நற்பலனைப் பெற சில எளிய பரிகாரங்களை செய்து வருவது நல்லது.
Samayam Tamil Navagraha Pariharam
Navagraha Pariharam


அந்த வகையில் இங்கு சனி பகவான், சுக்கிரன், ராகு கேது பகவானின் அருள் பெற என்ன செய்ய வேண்டும். அதற்கான எளிய பரிகாரம் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்....

ஏன் செவ்வாய்க் கிழமையில் முடி வெட்டுதல், சவரம் செய்யக்கூடாது தெரியுமா?
சனி பகவான்:
கிரகங்களிலேயே மிக பாசமானவரும், நீதிமானாக இருப்பவர் சனி பகவான். அதுமட்டுமல்லாமல் மக்கள் அதிகம் பயப்படக்கூடிய கிரகம் சனி கிரகம் தான். நாம் செய்யக் கூடிய நேர்மையற்ற செயலுக்கு தகுந்த தண்டனை கொடுக்கக் கூடியவர் சனி பகவான் என்பதால், அவர் கொடுக்கும் கெடு பலன்களிலிருந்து தப்பிக்கவும், அவரின் அருள் பெறவும் செய்ய வேண்டிய எளிய எளிய பரிகாரம் என்னவென்றால் கருமை நிற பறவைகள், விலங்குகளுக்கு உணவளிக்கவும். உதாரணமாக காகம், கரு நிற நாய், எருமை

உங்களுக்கு சனி தசை நடக்கிறதா? - எப்படிப்பட்ட பலன்கள் சனி தசை தரும் தெரியுமா?

ராகு - கேது கிரகம்
நிழல் கிரகங்களான ராகு - கேதுவும் ஒருவரின் ஜாதக பலனில் ஆதிக்கத்தைச் செலுத்த வல்லவை. ஒருவருக்கு ராகு - கேது தோஷம், சர்ப்ப தோஷம் ஏதேனும் இருப்பின் அவர்கள் ஏழேழு தலைமுறை தோஷத்தை நீக்கக் கூடிய வல்லமை வாயந்த எறும்புக்கு உணவளித்தலைச் செய்யலாம். சர்க்கரை, மாவு கலந்த உணவை எறும்புக்குக் கொடுத்து வர ராகு - கேதுவால் வரக்கூடிய கெடுபலன் நீங்கி நன்மை ஏற்படும்.

ராகு கேது பெயர்ச்சி 2020 எப்போது வருகிறது?- உங்கள் ராசிக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும்?

சுக்கிரன் கிரகம்
செல்வத்தையும், சுக போகம், ஆடம்பரத்தை அளிக்கக் கூடியவர் சுக்கிர பகவான். சுக்கிரனின் நற்பலனைப் பெற விரும்பினால் பறவைகளுக்கு தானியங்களை உணவாக அளிப்பது நல்லது. குறிப்பாக புறாக்களுக்கு உணவு அளிப்பதால் சுக்கிர பகவானின் அருளை பெறலாம்.

ராகு கேது பெயர்ச்சி 2020 எப்போது வருகிறது?- உங்கள் ராசிக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும்?

செல்வத்தை அளிக்கக்கூடிய கிரகம் சுக்கிர பகவான். இந்த கிரகம் நல் முறையில் வலுப்பெற புறா உள்ளிட்ட பறவைகளுக்கு தானியங்களை உணவாக கொடுக்கலாம் சுக்கிர பகவானின் அருள் பெற்று செல்வத்தை பெறலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்