ஆப்நகரம்

சுப கிராகங்களுக்கு 6, 8ம் இடத்தில் அசுப, சுப கிரகங்கள் இருந்தாலும் கெடுபலன் நடக்குமா?

சஷ்ட அஷ்டக தோஷம் என்றால் என்ன, உங்கள் ஜாதகத்தில் 6,8ம் இடத்தில் சுப கிரகம் மற்றும் அசுப கிரகங்கள் இருந்தால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் பார்ப்போம்...

Samayam Tamil 9 Oct 2020, 2:12 pm
ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான ஜாதகத்தில் ராசி, லக்கினம் இருக்கும். அது அவருக்கு எப்போதும் மாறாமல் இருக்கும். ஆனால் அவருக்கு ஜனன கால ஜாதகத்தின் அடிப்படையில் ஏதேனும் ஒரு கிரகத்தின் திசா நடந்து கொண்டிருக்கும். அது காலத்தைப் பொறுத்து மாறக்கூடியது.
Samayam Tamil Sastha Ashtakam Dosham
Sastha Ashtakam Dosham


ஒருவரின் ஜாதகத்தில் திசா நாதன் எந்த ஒரு கிரகத்திற்கு 6ம் இடம் மற்றும் 8ம் இடங்களான சஷ்ட, அஷ்டமமாக அமர்ந்து திசை நடக்கின்ற போது. அந்த ஜாதகருக்கு கிரகங்களின் காரகங்கள் கிடைக்காது.

  • உங்கள் ஜாதகத்தில் 7ம் இடத்தில் இந்த கிரகங்கள் இருந்தால் திருமணம் செய்தாலும் வீண்!- பல சிக்கல் வரும்

உதாரணத்திற்கு ஒருவருக்கு செவ்வாய் கிரகத்திற்கு 6 அல்லது 8ம் இடத்தில் அசுப கிரகமான சனி அமர்ந்து திசை நடத்தும் போது அவருக்கு நோய், கடன் பிரச்னை, எதிர்ப்புகள் வலுக்கும், பயம் அதிகரிக்கும்.

சரி அசுப கிரகம் இருப்பதால் தான் இப்படி அசுப பலன் கிடைக்கிறது என எண்ண வேண்டாம். சுப கிரகம் திசை நடத்தினாலும் அந்த ஜாதகருக்கு சுப கிரகத்திற்கான சுப பலன் கிடைக்காது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

  • கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன? - 12 வகை கால சர்ப்ப தோஷங்கள், பரிகாரம்
உதாரணமாக சுப கிரகமான குருவிற்கு 6, 8ல் மற்றொரு சுப கிரகம் அமைந்து திசையை நடத்தினால் அந்த ஜாதகருக்கு திருமணம் நடப்பதில் தாமதம், குழந்தைப் பேறு கிடைப்பதில் தாமதம், நிதி வளர்ச்சி தடை என சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

  • ஒரு மனிதனில் இருக்கும் இரண்டு தெய்வங்கள்; உணர்ந்தால் உயரத்திற்குக் கொண்டு செல்லும்

அதிலும் குறிப்பாக திசை நடத்துபவர் உங்களுக்கு பலத்தை தரக்கூடிய லக்கின அதிபதியாகவே இருந்தாலும், காரகர்களுக்கு சஷ்ட, அஷ்டக அமைப்பில் இருக்கக் கூடாது.

அப்படி இருந்தால் சுப கிரகங்கள் இருந்தாலும் பெரியளவில் நன்மை ஏற்படாவிட்டாலும் தீமை தான் ஏற்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்