ஆப்நகரம்

கோபமான மனைவி, நபர்களை எளிதில் சாந்தப்படுத்துவது எப்படி? - ஜோதிட டிப்ஸ்

கோபம் எனும் எதிரி : கணவன் - மனைவி இடையே எத்தனையோ நிகழ்வுகள் நடக்கும். அதில் பல முறை மன கசப்பான சண்டைகள் நடந்திருக்கும். கோபம் உள்ளிட்ட மன ஸ்தாபத்தால் இருவரிடையே விரிசல் ஏற்பட்டிருக்கும். அப்படி கோபமாக இருக்கும் உங்கள் துணையை எப்படி சமாதானம் செய்வதும் எப்படி மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது, அதற்கான எளிய ஜோதிட வழிமுறை என்ன என்பதை பார்ப்போம்.

Samayam Tamil 7 Jun 2021, 2:55 pm

Samayam Tamil these remedies of astrology can quickly convince the angry spouse in tamil
கோபமான மனைவி, நபர்களை எளிதில் சாந்தப்படுத்துவது எப்படி? - ஜோதிட டிப்ஸ்

​மனதை இதமாக்கும் ரோஜா

ஜோதிடத்தின் படி துர்க்கை அம்மனுக்கு உகந்த ரோஜா பூக்களை சூடுங்கள். அதே போல வெள்ளை நிறத்தில் இருக்கும் இனிப்பு பதார்த்தங்களைப் படைக்கலாம். உங்கள் துணையுடனான சண்டை, மனஸ்தாபம் நீங்க வேண்டிக் கொள்வதால் அனைவருடனான கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை ஏற்படும்.

உங்கள் துணைக்கும் ரோஜாவை அன்புடன் வழங்குங்கள், எளிதில் கோபம் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.

​நகை பரிசு :

உங்கள் அன்புக்குரியவரின் கோபத்தை குறைக்க அவருக்கு பிடித்தார் போல தங்க, வைர நகைகளை வாங்கித் தரலாம். முடிந்த வரை கருப்பு அல்லது நீல நிற பரிசு பொருட்களை வாங்கித் தர வேண்டாம்.

அனைவராலும் நகை போன்ற விலை மதிப்பு மிக்க பொருட்களை வாங்குவது சிரமம் என்றாலும் சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள் அல்லது பச்சை நிறத்திலான பொருட்களை பரிசாக வழங்க முயலவும்.

அதிகமாக பேசக்கூடிய 4 ராசிகள் யார் தெரியுமா? - செய்ய வேண்டிய முக்கிய விஷயம்

​ஏலக்காய் பானம்

ஒருவரின் கோபத்தை குறைக்கும் சிறப்பான ஆற்றல் ஏலக்காயில் உள்ளது. வெள்ளிக்கிழமைகளில் கோபமான உங்கள் துணை அணியக்கூடிய ஆடையில் ஏலக்காய் கட்டி வையுங்கள். அது அவரின் உடலைத் தொட்டுக் கொண்டு இருப்பது போல மறைத்து வைக்கவும். புடவை, கைக்குட்டையில் மறைத்து வைக்கவும்.

அடுத்த நாள் சனிக்கிழமையில் அந்த ஏலக்காயை அரைத்து டீ அல்லது உணவில் கலந்து உணவளிக்கவும். ஐந்து வெள்ளிக்கிழமைகளில் இதை தவறாமல் செய்வதால் கணவன்-மனைவி இடையே அன்பை அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் தினத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் முக்கிய விளக்கம் இதோ

​அற்புதமான தேன் :

ஜோதிடத்தின் படி தேன் ஒரு அற்புதமான மன அமைதி, உடல் வலுவைத் தரக்கூடியது. வாரத்தின் மூன்று நாளாவது ஒரு ஸ்பூன் தேன் எடுத்துக் கொள்வது நல்லது. இதனால் உடல் பிரச்சினைகள் தீரும், உறவில் இருக்கும் பிரச்சினைகளும் தீரும் என்று நம்பப்படுகிறது.

புதுமண தம்பதிகள் திருப்பதி ஏழுமலையானின் அற்புத பிரசாத பரிசு பெற வேண்டுமா?

அடுத்த செய்தி

டிரெண்டிங்