ஆப்நகரம்

வெற்றிகரமாக தொழில், வியாபாரம் செய்யக்கூடிய ராசிகள்

நாட்டிற்கு முக்கியமான விஷயங்களில் ஒன்று வணிகம், தொழில் ஆகும். இதற்கு சிறந்த தொழில் முனைவோர்களின் தனித் திறமைகள் தேவை. யார் அப்படிப்பட்ட தொழில், வியாபாரத்தில் சிறந்து விளங்கக்கூடியவர்களாக இருப்பார்கள் என்பதைப் பார்ப்போம்.

Samayam Tamil 15 Jul 2021, 12:48 pm
நாட்டிற்கு முக்கியமான விஷயங்களில் ஒன்று வணிகம், தொழில் ஆகும். இதற்கு சிறந்த தொழில் முனைவோர்களின் தனித் திறமைகள் தேவை. யார் அப்படிப்பட்ட தொழில், வியாபாரத்தில் சிறந்து விளங்கக்கூடியவர்களாக இருப்பார்கள் என்பதைப் பார்ப்போம்.
Samayam Tamil these zodiac sign most successful person at business in tamil
வெற்றிகரமாக தொழில், வியாபாரம் செய்யக்கூடிய ராசிகள்


வெற்றிகரமாக தொழில் செய்பவர்கள்

பலரின் கனவு கைகட்டி பிறருக்காக வேலை செய்வதை விட நமக்கான தொழில் அல்லது வியாபாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் ஒரு வணிகத்தை செய்வதற்கான திறமை ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கும். பலருக்கு சொந்த தொழில் கனவாகவே சென்றுவிடும்.

அதுமட்டுமல்லாமல் ஒருவர் தொழில், வியாபாரம் தொடங்கினாலும் அதை சரியாக வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல முடியாதவரும், வணிகத்தை செய்ய திறனற்றவர் என்றே கருத முடியும்.

ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கும் ஆனால் அது உங்கள் சொந்த தொழில், வியாபாரத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லுமா என்பது சந்தேகமே.

ஜோதிடத்தின் படி, ஒரு வெற்றிகரமான வணிகத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லக்கூடிய ராசிகள் குறித்து இங்கு பார்ப்போம்.

உங்கள் தொழில், வேலையில் தோல்வியா? ஏமாற்றம் பெற நீங்களே செய்யக்கூடிய எளிய ஜோதிட பரிகாரம் இதோ!

​மகரம்

மகர ராசியினர் வியாபாரத்தில் மிகச் சிறந்தவர்கள். ஏனென்றால் எல்லாவற்றையும் நேரத்திற்குள் செய்வதற்கான அற்புத பண்பு கொண்டவர்கள். ஒரு செயலை செய்ய சரியான நேரத்திற்காக அவர்கள் எப்போதும் காத்திருக்க மாட்டார்கள். எல்லாவற்றையும் ஒழுங்காக செய்து முடிக்க ஆசைப்படுவார்கள்.

எதிர் எதிர் கிரகங்களான சூரியன் சனி சேர்க்கை ஏற்பட்டால் என்ன பலன் தரும்?

​மிதுனம்

மிதுன ராசியினருக்கு கசப்பான, கடினமான சூழ்நிலைகளை எப்படி கையாள்வது, மோசமான சூழலில் மற்றவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்பது தெரியும். இதனால் தொழில், வியாபாரத்தில் பேச்சு வார்த்தையில் சிறந்தவர்களாக விளங்குவார்கள். அதில் முன்னேற்றம் அடைவார்கள். வியாபாரத்தில் சிறந்த இவர்கள் அனைவருக்கும் பிடித்த வகையில் பேசுவார்கள்.

கிருஷ்ணரால் திட்டமிடப்பட்ட அர்ஜுனன் மற்றும் சுபத்ராவின் காதல் கதை

​துலாம்

துலாம் ராசியினர் நேர்மையான வழியில் எதையும் அடைய வேண்டும் என்பதில் முனைப்பு காட்டுவார்கள். ஏதேனும் தவறு நடக்கும்பட்சத்தில் அதை கண்டறிந்து அதை சரிசெய்ய முயல்வார்கள். தவறுகளை ஆராயும் இவர்களின் பண்பு வியாபாரத்தில் சிறப்பான நிலையை அடைய வழிவகுக்கும்.

கிருஷ்ணரால் திட்டமிடப்பட்ட அர்ஜுனன் மற்றும் சுபத்ராவின் காதல் கதை

சிம்மம்

சிம்ம ராசியினர் மிகவும் ஆளுமைத் திறன் கொண்டவர்களாகவும், நம்பகத்தன்மையானவர்கள். இவர்கள் மற்றவர்கள் முன் நல்லவர்களாகவும், சிறந்தவர்களாகவும் விளங்குவதோடு, மற்றவர்களிடமிருந்து சிறந்தனவற்றை வெளிகொண்டு வர முடியும். இவர்களின் புத்திசாலித்தனம் வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

​ரிஷபம்

ரிஷப ராசியினர் மிகவும் பொறுமையாகவும் உறுதியுடனும் செயல்படுபவர்கள். முதல் முயற்சியிலேயே எல்லாவற்றையும் சரியாகச் செய்யக்கூடியவர்கள். தாங்கள் சரியாக செயல்படுவதோடு, மற்றவர்களுக்குத் தேவையான ஆலோசனை, வழிகாட்டவும் வல்லவர்கள்.

​கன்னி

கன்னி ராசியினரை நோக்கி வரக்கூடிய விமர்சனங்களை விளையாட்டாக எடுப்பதோடு பெரிய விஷமாக நினைக்கமாட்டார்கள். சிறிய விஷயங்களைக் கூடிய உன்னிப்பாகச் செய்யக்கூடிய இவர்கள், எந்த ஒரு விஷயத்தையும் பகுப்பாய்வு செய்து செய்வதால், தொழில், வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்