ஆப்நகரம்

திதிகளுக்குரிய தெய்வங்களை வழிபட்டால் விதியை வெல்லலாம்!

எந்த திதிகளில் எந்த தெய்வங்களை வழிபட வேண்டும். நாம் திதிகளுக்குரிய தெய்வங்களை வழிபடுவதால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

Samayam Tamil 25 Apr 2020, 5:33 pm
ஒவ்வொரு திதிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட தெய்வங்களுக்கு உரியதாக பார்க்கப்படுகிறது. மொத்தம் 15 திதிகளின் பெயர்கள் உள்ளன. அவற்றில் வளர்பிறையில் வரக்கூடிய திதிகளுக்கு சுக்லபட்சம் திதிகள் என்றும். தேய்பிறையில் வரக் கூடிய திதிகள் கிருஷ்ணபட்ச திதிகளாக குறிப்பிடப்படுகிறது.
Samayam Tamil Gods worshipped on Each Tithi
Gods worshipped on Each Tithi


ஒவ்வொரு நாளுக்கான திதிகளுக்குரிய தெய்வங்களை வணங்குவது விசேஷமானது. அதிலும் குறிப்பாக நம்முடைய பிறந்த திதிக்குரிய தெய்வ வழிபாடு செய்வது மிகச் சிறந்த பலனைத் தரும்.

சுக்லபட்சம் (வளர்பிறை திதிகளுக்குரிய தெய்வங்கள்)
1). பிரதமை - பிரம்மா தேவன் மற்றும் குபேரன்
2). துவதியை - பிரம்ம தேவன்
3). திரிதியை - சிவ பெருமான் மற்றும் கெளரி அம்மன்
4). சதுர்த்தி - விநாயகர் மற்றும் எம தர்மன்
5). பஞ்சமி - திரிபுர சுந்தரி

குல தெய்வ வழிபாடு ஏன் அவசியம்? - காஞ்சி மகா பெரியவர் விளக்கம்

6). சஷ்டி - செவ்வாய் பகவான்
7). சப்தமி - இந்திரன் மற்றும் ரிஷிகள்
8). அஷ்டமி - கால பைரவர்
9). நவமி - சரஸ்வதி
10). தசமி - வீரபத்திரன் மற்றும் தர்ம ராஜா

11). ஏகாதசி - மகா விஷ்ணு மற்றும் ருத்ரன்
12). துவாதசி - பெருமாள்
13). திரியோதசி - மன்மதன்
14). சதுர்த்தசி - காளி தேவி
15). பெளர்ணமி - லலிதாம்பிகை

ஒரு முறை சொன்னால் 7 தலைமுறை பாவங்களை போக்க கூடிய சிவ மந்திரம் இதோ!

கிருஷ்ணபட்சம் (தேய்பிறை திதிகளுக்குரிய தெய்வங்கள்)
1). பிரதமை - துர்க்கை அம்மன்
2). துவதியை - வாயு பகவான்
3). திரிதியை - அக்னி பகவான்
4). சதுர்த்தி - விநாயகர் மற்றும் எம தர்மன்
5). பஞ்சமி - நாக தேவதை

சிவனுக்கு மூன்று மகன்கள் இல்லை ஆறு மகன்கள்? - இதோ புராண கதைகள்

6). சஷ்டி - முருகப் பெருமான்
7). சப்தமி - சூரிய தேவன்
8). அஷ்டமி - மகா ருத்ரன் மற்றும் துர்க்கை அம்மன்
9). நவமி - சரஸ்வதி தேவி
10). தசமி - துர்க்கை அம்மன் மற்றும் எம தர்மன்

இயற்கை சீற்றங்களை தாங்கி கம்பீரமாக நிற்கும் கேதார்நாத் கோயில் : முக்கோண வடிவ லிங்கம் உள்ள அதிசய கோயில்

11). ஏகாதசி - சிவ பெருமான் மற்றும் மகா விஷ்ணு
12). துவாதசி - சுக்கிரன்
13). திரியோதசி - நந்தி பகவான்
14). சதுர்த்தசி - ருத்ரன்
15). அமாவாசை -காளி தேவி மற்றும் பித்ருக்கள்

ஒவ்வொருவரும் அவர் பிறந்த திதிகளுக்குரிய தெய்வங்களை வழிபடுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் சிறப்பான வெற்றி கிடைக்கும் அதோடு, அவரின் பிறப்பு தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.


நாம் குலதெய்வத்தை கும்பிடுவது எவ்வளவும் முக்கியமானதோ அதே போல் நாம் பிறந்த திதிகளுக்குரிய தெய்வங்களை வணங்குவதால் மிக சிறந்த பலன்கள் பெற முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்