ஆப்நகரம்

உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி மனதுக்குள்ளேயே புழுங்கி கொண்டிருக்கும் ராசிகள்

ஜோதிடத்தில் ராசி, நட்சத்திரத்தை வைத்து பல்வேறு பொதுபலன்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒருவருக்கான சரியான ஜோதிட பலன் பார்க்க அவரின் ஜாதகத்தை வைத்து தான் முடியும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

இங்கு சில ராசிகள் மனதில் எவ்வளவு கலக்கமும், பாரத்தையும் வைத்துக் கொண்டு, உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல், மனத்திற்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருக்கும் ராசிகள் குறித்த பொது பலன்களை இங்கு பார்ப்போம்.

ஜோதிடத்தின்படி 5 ராசிகள் சற்று குறைவாக தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவர்களாகவும், தங்கள் மனதில் என்ன இருக்கின்றது என்பது குறித்து விரிவாக எடுத்துரைக்க பேசாதவர்களாக, வார்த்தைகளால் உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாதவர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

Samayam Tamil 19 Feb 2021, 5:28 pm
ஜோதிடத்தில் ராசி, நட்சத்திரத்தை வைத்து பல்வேறு பொதுபலன்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒருவருக்கான சரியான ஜோதிட பலன் பார்க்க அவரின் ஜாதகத்தை வைத்து தான் முடியும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
Samayam Tamil virgo cancer libra capricorn scorpio rasi are very most unemotional zodiac sign
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி மனதுக்குள்ளேயே புழுங்கி கொண்டிருக்கும் ராசிகள்


இங்கு சில ராசிகள் மனதில் எவ்வளவு கலக்கமும், பாரத்தையும் வைத்துக் கொண்டு, உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல், மனத்திற்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருக்கும் ராசிகள் குறித்த பொது பலன்களை இங்கு பார்ப்போம்.

ஜோதிடத்தின்படி 5 ராசிகள் சற்று குறைவாக தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவர்களாகவும், தங்கள் மனதில் என்ன இருக்கின்றது என்பது குறித்து விரிவாக எடுத்துரைக்க பேசாதவர்களாக, வார்த்தைகளால் உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாதவர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

​கன்னி

கன்னி ராசி தங்களின் மனக்குறைகளைப் பெரிதாக வெளிப்படுத்தாதவர்கள். தங்களின் மனக்குறையை எப்போதும் ரகசியமாக வைத்திருக்க விரும்புவார்கள், மறைக்க விரும்புவார்கள்.


இவர்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்த சரியான வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், அவர்கள் சூழ்நிலையிலிருந்து தப்பிக்க விரும்புவார்களே தவிர தங்களின் எண்ணத்தை வெளிப்படுத்தி சூழ்நிலையை சரி செய்ய நினைக்கமாட்டார்கள். அதனாலேயே இவர்களின் மனக்குறை தீர பலகாலம் ஆகலாம்.

விசாகம், கேட்டை, மூலம், ஆயில்யம் நட்சத்திரங்கள் குடும்பத்திற்கு ஆகாத நட்சத்திரமா?

கடகம்

கடக ராசியினர் நண்டைப் போலவே கூச்ச சுபாவமுள்ளவர்கள். அவர்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் துணையை மிகவும் நேசிப்பவர்களாக இருப்பார்கள். உறவு குறித்த அன்பை வெளிப்படுத்த தெரிந்த இவர்களுக்கு உண்மையான மனதின் குமுறல்களை உணர்வுகளைப் பற்றி பேச, வெளிப்படுத்த முடியாதவர்களாக இருப்பார்கள்.


தங்களின் உணர்ச்சிகளை வார்த்தைகளில் விவரிப்பது கடினம். எனவே, அவர்கள் பொதுவாக அக்கறை மற்றும் ஆடம்பரத்தின் மூலம் மற்றவர்களிடம் தங்கள் அன்பைக் காட்டுகிறார்கள்.

ஆயில்யம் நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாதா? - ஆயில்யம் நட்சத்திர பெண்ணை திருமணம் செய்யலாமா?

​துலாம்

துலாம் ராசியினர் தங்கள் மக்களை நேசிக்கக்கூடியவர்களாக, அவர்களைக் கவனித்துக் கொள்பவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கான தேவையை நிறைவேற்றுவார்கள். இவர்கள் தங்கள் மனதில் என்ன ஓடுகிறது என்பதையும், அவர்களின் எண்ணத்தை பகிர்ந்து கொள்ளாதவர்களாக இருப்பார்கள்.


இவர்கள் தங்களின் மனதில் உள்ள விஷயத்தை வற்புறுத்திக் கேட்டால் தவிர தங்களின் மன உணர்வை வெளிப்படுத்த மாட்டார்கள். எப்போதும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயல்வார்கள்.

திருமண பால் மரம் பொருத்தம் என்றால் என்ன? - திருமணத்திற்கான எளிய பரிகாரம், மந்திரம்

​மகரம்

மகர ராசியினர் தங்களின் மனக்குறை, மன உணர்ச்சிகளை வெளிப்படு சிறிது கால அவகாசம் தேவைப்படும். எந்த ஒரு பிரச்சினையையும், மனக்குறையை தங்களுக்குள் அழுத்த முயல்வர் ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு அது வெளிப்படக்கூடும்.

இவர்கள் சிறிது நேரம் வேலையைப் பற்றி சிந்திப்பதை நிறுத்திவிட்டு, அவர்களின் மனதில் என்ன நடக்கிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

​விருச்சிகம்

தேள் எப்போதும் மறைந்து வாழக்கூடியது என்பதைப் போல தங்களின் மனதின் உணர்ச்சிகளை ரகசியமாக வைத்துக் கொள்வார்கள். இவர்கள் ஒருவரை முழுமையாக நம்பும் வரை மற்றவர்களிடம் தங்களின் மனதை திறக்க மாட்டார்கள். இவர்கள் மனது காயமடைந்து ஏமாற்றப்பட்டால், அவர்கள் மீண்டும் தங்கள் மனதை திறக்க மாட்டார்கள். மீண்டும் ஒருபோதும் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த மாட்டார்கள்.

விசாகம், கேட்டை, மூலம், ஆயில்யம் நட்சத்திரங்கள் குடும்பத்திற்கு ஆகாத நட்சத்திரமா?

அடுத்த செய்தி

டிரெண்டிங்