ஆப்நகரம்

மாந்தி கிரகத்தால் ஏற்படும் தோஷங்களை நீக்கும் பரிகாரங்கள்

மாந்தி என்றால் யார், அதனால் நம் ஜாதகத்தில் ஏற்படக்கூடிய தோஷங்கள் என்ன.. அதற்கான பரிகாரங்கள் என்ன என்பதை பார்ப்போம்...

Samayam Tamil 30 Oct 2019, 4:21 pm
ஒரு ஜாதகத்தின் நற் பலன்கள், கெடு பலன்கள் குறிக்கும் போது மாந்தி கிரகத்தை வைத்து குறிப்பிடப்படுகின்றது. மாந்தி கிரக தோஷங்கள் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை விளக்கமாகப் பார்ப்போம்.
Samayam Tamil Maanthi Effects


மாந்தி என்றால் என்ன?
மாந்தி கிரகம் என்பது சனி கிரகத்துடன் தொடர்புடையதாகவும். சனி பகவானின் மைந்தன் என்றும், சனியின் உப கிரகம் என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

ஒருவரின் ஜாதகத்தில் மாந்தி எங்கு அமர்ந்திருக்கின்றாரோ அந்த ஸ்தானம் பாதக ஸ்தானமாக பார்க்கப்படுகின்றது. அதன் காரணமாக அந்த ஸ்தான அதிபதியும் பாதகத்தை ஏற்படுத்தக் கூடியவராக மாறுகிறார். மாந்தி இருக்கும் நட்சத்திரமும் பாதகமானதாக பார்க்கப்படுகின்றது.

மாந்தி இருக்கும் வீட்டின் கெடுபலன்கள்:
ஒரு வீட்டில் மாந்தி கிரகம் அமைந்துள்ள இடத்திற்கு கொடுக்கும் தோஷங்கள், கெடுபலன்கள் என்ன என்பதை பார்ப்போம்,

ஐந்தாம் வீடு : மாந்தி 5ம் இடத்தில் இருந்தால் பிரேத சாபம் ஏற்படும்.
ஆறாம் வீடு : மாந்தி 6ம் இடத்தில் இருந்தால் தீராத கடன் ஏற்படலாம்.
ஏழாம் வீடு : மாந்தி கிரகம் 7வது இடத்தில் இருந்தால் கணவன் - மனைவி உறவு பாதிக்கக் கூடும்.
ஒன்பதாம் இடம் : மாந்தி 9வது இடத்தில் இருந்தால் ஜென்ம பாவங்கள் உண்டாகும்.

இது போன்ற தோஷங்கள், கெடுபலன்கள் மந்தியால் ஏற்படுவதாக ஜோதிடம் கூறுகின்றது.

பரிகாரம்:
மாந்தியால் ஏற்படும் கெடுபலன்களுக்கு பரிகாரம் செய்ய நினைப்பவர்கள், திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலுக்கு செல்ல வேண்டியது அவசியம்.

வடாரண்யேஸ்வரர் கோயிலுக்கு சென்றதும் அங்குள்ள பத்ரகாளி அம்மனை வணங்கிய பின்னர், கோயிலின் மூலவரான மாந்தீஸ்வரரை வணங்க வேண்டும். இதன் மூலம் மாந்தி தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.

அதேபோல், அருகில் உள்ள ஆலங்களுக்குச் சென்று மகா மிருத்யுஞ்சய யாகம், சுதர்சன யாகம் செய்ய வேண்டும். யாகத்தின் போது வைக்கப்படும் கும்ப நீரில் குளித்தால் தோஷம் நீங்கும்.

தரமான கனக புஷ்பராகம் கல்லை, வெள்ளி மோதிரத்தில் பதித்து அதை, உங்கள் விரலில் அணிந்து கொண்டால் தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்