ஆப்நகரம்

செவ்வாய் கிரகம் வக்கிரம், நீச்சம் பெற்றிருந்தால் என்ன பலன்களை கொடுப்பார், என்ன பரிகாரம் செய்யலாம்?

செவ்வாய் நம் ஜாதகத்தில் அமைந்திருக்கும் அமைப்பை வைத்து தான் நம் மன தைரியமும், ரத்தம் சார்ந்த பிரச்னைகளும் இல்லாமல் இருக்கும். செவ்வாய் நீச்சம் அல்லது செவ்வாய் வக்கிரம் பெற்றிருந்தால் என்ன பலன் தருவார், அதற்னான பரிகாரம் என்ன என்பதைப் பார்ப்போம்...

Samayam Tamil 26 May 2020, 1:33 pm
ஜோதிடத்தின் அடிப்படையாக நவகிரகங்கள் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு குணத்துடன், ஒரு குறிப்பிட்ட பலன்களை தரக் கூடியதாக இருக்கிறது. பொதுவாக செவ்வாய் பகவான் மன தைரியம், சகோதரக்த்துவம், ரத்தம், நிலம் உள்ளிட்ட அமைப்பிற்கு உரியவராக பார்க்கப்படுகின்றார்.
Samayam Tamil Sevvai Neecham Pariharam
Sevvai Ucham Pariharam


ஒவரின் ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக அமைந்துவிட்டால் அவருக்கு ரத்த இழப்பை தரக்கூடிய விபத்து, காயம் ஏற்படாது. சகோதரர்கள் மிக உதவிகரமாகவும், அன்பாகவும் அமைந்துவிடுவர். எந்த ஒரு முடிவையும், செயலையும் செய்து முடிக்கும் மன தைரியம் ஏற்படும். பூர்விக சொத்துக்கள் கிடைக்கும் அமைப்பு நன்றாக இருக்கும்.

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? - அதற்கான பரிகாரமும், யாருக்கு தோஷம் இருக்கும்?

ஆனால் அதுவே செவ்வாய் ஒருவரின் ஜாதகத்தில் நீச்சம் பெற்றிருப்பின் அல்லது வக்கிர, அடைந்திருந்தால் அவர்களுக்கு விபத்து ஏற்படுதல். அதன் மூலம் ரத்த இழப்பு ஏற்படலாம். இதே போல் ராசிக்கு 8ம் இடத்தில் செவ்வாய் இருந்தாலும் சிறு விபத்துக்கள் ஏறபடலாம்.

செவ்வாய் நீச்சம், வக்கிரம் உள்ள ஜாதகத்தினர் செய்ய வேண்டிய பரிகாரம்
செவ்வாய் நீச்சம், வக்கிரம் பெற்றவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது விபத்தால் ஏற்படக் கூடிய ரத்த இழப்பு தான். விபத்து ஏற்பட்டு ரத்த இழப்பு ஏற்படுவதை தவிர்க்க, ஜாதக அமைப்பைப் பெற்றவர்கள் தாமாகவே முன்வந்து ரத்த தானம் செய்யலாம். அப்படி செய்வதம் மூலம் செவ்வாய் பகவானின் அருளைப் பெறலாம்.

நாம் உண்ணும் உணவு சரியானது தானா? - எந்த உணவை தவிர்க்க வேண்டும் என்பதை ஜோதிட ரீதியாக பார்ப்போம்...

சிலரின் உடல் நிலை ரத்த தானம் செய்ய ஒத்துழைக்காத அமைப்பு இருக்கும். அவர்கள் ரத்த வங்கியின் ரத்தம் வாங்கி, தேவைப்படக் கூடிய ஏழை எளிய நோயாளிகளுக்கு தானம் செய்யலாம். இதன் மூலமும் செவ்வாயின் அருள் பெறலாம்.

ராகுவைப் போல் கெடுப்பவனும் இல்லை, கேதுவைப் போல் கொடுப்பவரும் இல்லை என்கிறார்கள் எப்படி தெரியுமா?

செவ்வாய் நீச்சம், வக்கிரம் அடைவதால் அதிகம் பயப்படக்கூடிய ரத்த இழப்பை தரக்கூடிய விபத்து நடக்காமல் தடுக்க நாமே முன்வந்து ரத்த தானம் செய்வது நல்லது என்பதாலேயே ஜோதிடத்தில் இந்த பரிகாரம் பரிந்துரைக்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்