ஆப்நகரம்

சுக்கிரன் நன்மை தரும் இடங்கள் மற்றும் பலன்கள்!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு. அப்படி சுக்கிரன் அமைந்துள்ள இடத்தைப் பொருத்து அவர் பலன்களை தருவார். அந்த இடத்தைப் பொருத்து அது நன்றானதாகவோ, தீயதாகவோ இருக்கலாம்.

Samayam Tamil 18 Feb 2020, 7:58 pm
அசுரர்களின் குரு சுக்கிரன். இவர் ஜாதகத்தில் கேந்திர திரிகோண ஸ்தானத்தில் அமைந்தால் மிக நல்ல பலன்களைத் தருவார்.
Samayam Tamil sukran


அதே போல் பாவ கிரகங்கள் சுக்கிரனைப் பார்த்த போதிலும் கவலை அடைய தேவையில்லை. அவர் வீடு, மனை உள்ளிட்ட சொத்துக்களுடன் ஆடை, ஆபரணங்கள் உள்ளிட்ட சுகங்களை பெற்று வாழ்வார்.

சுக்கிரன் 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் பலமாக இருந்தால் அந்த ஜாதகதாரருக்கு உடல் ஆரோக்கியம் பாதிப்பு உண்டாகும். வியாதி, வாத நோய் உண்டாகலாம். இதனால் அவரின் ஆயுள் குறைபாடு ஏற்படும்.

அதுமட்டுமல்லாமல் வீடு, பொன், பொருள் நஷ்டமும் ஏற்பட வாய்ப்புண்டு.

அதே சமயம் 12ல் சுக்கிரன் இருந்து அது ஆட்சி வீடாக அமைந்து விட்டால், இறைவன் அருளும், நல்ல யோகம், சயன சுகமும் உண்டாகும் என்பது ஜோதிட விதி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்