ஆப்நகரம்

சூரிய கிரகணத்தின் போதும் பரிகாரம் செய்ய வேண்டியது அவசியமா?

இன்று ஆண்டி கடைசி சூரிய கிரகணம் நிகழ்கிறது. கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும், யாரெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும். பரிகாரம் தேவைப்படாத நிலை என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

Samayam Tamil 14 Dec 2020, 12:53 pm
2020ம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணம் இன்று டிசம்பர் 14ம் தேதி நிகழ உள்ளது. இந்த கிரகண நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 19:03 (07:03 PM) மணிக்கு தொடங்கி மறுநாள் டிசம்பர் 15 நள்ளிரவு 00:23 (12:23 AM) மணிக்கு முடிவடையும். இந்த சூரிய கிரகணம் 2020 சுமார் ஐந்து மணி நேரம் நீடிக்கும்.
Samayam Tamil Solar eclipse Pariharam
Solar eclipse Pariharam


இந்த கிரகணத்தின் உச்ச நிலையானது இரவு 9:43 மணிக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூரிய கிரகணம் என்றால் என்ன, எப்படி ஏற்படுகிறது?
சூரியன் - பூமிக்கு இடையே சந்திரன் ஒரே நேர் கோட்டியில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

சூரிய கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்ன?
சூரிய கிரகணம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படுவதால், சூரியன் எங்கு எல்லாம் பார்க்க முடியுமோ அந்த நேரத்தில் கிரகணத்தை அந்த நாடுகளில் பார்க்க முடியும்.

எந்த நட்சத்திரங்களுக்கு தோஷம் ஏற்படுகிறது?
இந்த சூரிய கிரகணம் மாலை 7.03 மணிக்கு ஏற்படக்கூடிய நேரத்தில் வரக்கூடிய நட்சத்திரம் விருச்சிக ராசியில் உள்ள கேட்டை நட்சத்திரம்.

கேட்டை நட்சத்திரத்தில் இந்த சூரிய கிரகண நிகழ்வு நடப்பதால் அதற்கு அடுத்து உள்ள மூலம் நட்சத்திரமும், அதற்கு முன் உள்ள அனுஷம் நட்சத்திரனரும் பரிகாரம் செய்ய வேண்டும்.

சூரிய கிரகணம் டிசம்பர் 2020 எப்போது?: கிரகணம் நிகழக்கூடிய நேரம், எங்கு பார்க்கலாம், முக்கியத்துவம் என்ன?

கேட்டை நட்சத்திரம் கேது பகவானை அதிபதியாக கொண்டது என்பதால், கேதுவை நட்சத்திர நாதனாக கொண்ட ரேவதி நட்சத்திரம், ஆயில்யம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களும் பரிகாரம் செய்வது அவசியம்.

எளிய பரிகாரம் :
கிரகண நேரத்தில் இந்த ராசியினர் இறைவனை வழிபடுவதும், இறை நாமத்தை உச்சரிப்பது அவசியம்.

கிரகண நேரத்தில் உணவுகளை எடுத்துக் கொள்வது வேண்டாம்.
கிரகணம் முடிந்த உடன், வீட்டை சிறிது கல் உப்பு, மஞ்சள் தூள் போட்ட தண்ணீரால் வீட்டை கழுவி விட வேண்டும்.
இந்த கிரகணம் இரவு நேரத்தில் நிகழ்வதால் பரிகாரம் தேவை இல்லை. ஆனால் கிரகண நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வதும், கர்ப்பிணிப் பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதும் கூடாது.

சூரிய கிரகணம் 2020 கர்ப்பிணி பெண்கள் முக்கியமாக செய்யக் கூடாதது, செய்ய வேண்டியது என்ன?


பரிகாரம் அவசியமா?
நாம் இருக்கும் இடத்திலிருந்து சூரிய கிரகணத்தைப் பார்க்க முடிந்தால் அப்போது பரிகாரம் அவசியம்.

இந்த கிரகணம் இரவு நேரத்தில் நிகழ்வதால் பரிகாரம் தேவை இல்லை. ஆனால் கிரகண நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வதும், கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதும் கூடாது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்