ஆப்நகரம்

Horoscope Today: இன்றைய ராசி பலன் - துலாம் ராசியினர் பிரச்னையிலிருந்து தூர நில்லுங்கள்

இன்றைய ராசி பலன் (30 செப்டம்பர் 2019): மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கிறது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார்.

Samayam Tamil 27 May 2020, 7:18 am
மேஷ ராசி:
Samayam Tamil daily astrology september 30 2019 today rasi palan in tamil
Horoscope Today: இன்றைய ராசி பலன் - துலாம் ராசியினர் பிரச்னையிலிருந்து தூர நில்லுங்கள்

புதிய கடன் எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு கடன் கிடைக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது வயதானவர்களுக்கு உடல் நலத்தில் சிறுசிறு தொல்லைகள் ஏற்பட்டு நீங்கும்.

ரோகிணி நட்சத்திரத்திற்கு குரு பெயர்ச்சி பலன்கள் (2019- 2020) எப்படி இருக்கும்?
ரிஷப ராசி:
வெளிநாட்டு வேலை வாய்ப்பு சம்பந்தமாக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு. முருகப் பெருமான் வழிபாடு உங்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும்.
மிதுன ராசி:
மாணவர்களின் கல்வி சற்று கூடுதல் கவனம் தேவை. சோஷியல் மீடியாவில் அதிக நேரம் செலவிட வாய்ப்பு உண்டு, என்பதால் இவைகளில் கவனம் கொள்ளவும்.

கடக ராசி:
மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை சுபகாரிய முயற்சிகள் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.


சிம்ம ராசி:
வாழ்க்கையில் முன்னேற்றமான நாளாக இருப்பதால் நீங்கள் எடுக்கும். எல்லா புது முயற்சிகளும் வெற்றியடைய இறையருள் துணை நிற்கும். விநாயகப் பெருமானின் வழிபாடு விக்கினங்களை தீர்த்து வெற்றியைத் தரும்.


கன்னி ராசி:
சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். மருத்துவத் துறை ஆராய்ச்சி துறை தொடர்பான கல்வியில் இருப்பவர்கள் முன்னேற்றத்தை அடைவார்கள்.

துலாம் ராசியினரின் தொழில் மற்றும் செல்வ நிலை எப்படி இருக்கும்?

துலாம் ராசி:

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். வெளிநாடுகளிலிருந்து பண வரவை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு அவை கிடைக்க வாய்ப்பு உள்ளது. குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சக ராசி:
கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். என்பதால் பேச்சில் நிதானம் தேவை. கோபத்தை குறைத்து குணத்தை அதிகப்படுத்திக் கொள்ளவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

தனுசு ராசியின் காதல் மற்றும் திருமண வாழ்வு எப்படி இருக்கும்?
தனுசு ராசி:
நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும், மனமகிழ்ச்சியும் உண்டாக வாய்ப்பு உண்டு. புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள் காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு.


மகர ராசி:
எதிர்காலத்தைப் பற்றிய முதலீடுகள் தொடர்பான சிந்தனைகளை மனதில் வரும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து வருபவர்களுக்கு வெற்றி உண்டாகும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மேன்மை அடைவீர்கள்.


கும்ப ராசி:
வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வயோதிகர்களுக்கு சற்று உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.


மீன ராசி:உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். ஒரு சிலருக்கு திடீர் பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வெளிநாட்டு வேலை வாய்ப்பை நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு விசா தொடர்பான காரியங்களை துவக்க நல்ல நாள் ஆகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்