ஆப்நகரம்

Mars in Makaram Lagna: மகரம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்

ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும். அதே சமயம் ஒவ்வொரு கிரகங்கள் அந்த ராசியின் மீது பல யோகங்கள் மற்றும் பிரச்னைகள் கொடுக்கலாம். அப்படி மகரம் லக்னத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் யோக பலன்கள் பார்க்கலாம்.

Samayam Tamil 4 Aug 2019, 4:10 pm

மகரம் லக்னமாக அமைந்து செவ்வாய் மகரத்தில் இருக்கப் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். மிகுந்த வசதியான குடும்பத்தில் பிறக்கும் வாய்ப்பு உள்ளவர்களாக இருப்பார்கள். சொத்துக்கள் நிலபுலன்கள் வியாபார நிறுவனங்கள் தொழிற்சாலைகள் வாகன வசதிகள் போன்ற வற்றை நிர்வாகிக்கும் அமைப்பு கொண்ட அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள்.
Samayam Tamil New Project 1200


மகர ராசியினரின் தொழில், செல்வம் உடல் நிலை எப்படி இருக்கும்?

தாய் தந்தையருக்கு மிகவும் பிடித்த மகனாக அல்லது மகளாக இருப்பார்கள் பெண்கள் வழியில் சொத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக தாய் வழியில் மதிப்புமிக்க சொத்துக்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளவர்களாக இருப்பார்கள். இம்மாதிரி இவர்களால் பெறப்படும் சொத்துக்கள் இவர்களுடைய ஆயுட்காலத்திற்கு பின்னும் தொடர்ந்து இந்த குடும்பத்தில் நிலைத்து நிற்கும் என்பதாக அமையும் தனிப்பட்ட முறையில் இவர்கள் உழைப்பை நாடிச் செல்ல வேண்டும் என்பது இல்லை.

அனைத்து ராசிகளின் தொழில் மற்றும் செல்வ நிலை எப்படி இருக்கும்?

லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்

கடின உழைப்பு இல்லாமல் அவர்களுக்கு வரக்கூடிய வாடகை விளைச்சல் போன்றவர்களால் வாழ்க்கை வசதியாகவே சென்று கொண்டிருக்கும். இம்மாதிரியான கிரகச் சேர்க்கை உள்ளவர்கள் வேலை பார்த்து அல்லது உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கு வருவது என்பதில் பெரிய அக்கறை காட்ட மாட்டார்கள் கணவனாக இருந்தால் மனைவியுடனும் மனைவியாக இருந்தால் கணவனுடனும் சுடு சொற்களை அள்ளி வீசும். குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதால் குடும்ப ஒற்றுமையில் சிறுசிறு சலசலப்புகள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்