ஆப்நகரம்

Gemini Ascendant: மிதுனம் லக்னத்தின் 2வது இடத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்

ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும். அதே சமயம் ஒவ்வொரு கிரகங்கள் அந்த ராசியின் மீது பல யோகங்கள் மற்றும் பிரச்னைகள் கொடுக்கலாம். அப்படி மிதுனம் லக்னத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் யோக பலன்கள் பார்க்கலாம்.

Samayam Tamil 16 Aug 2019, 8:03 pm

மிதுனம் ஜென்ம லக்னமாக அமைந்து இரண்டாம் இடமான கடகத்தில் செவ்வாய் நீசம் பெற்று அமர்ந்திருப்பது. மிக வசதியான சொத்துக்கள் நில புலன்கள் வாகனங்கள் போன்றவற்றிற்கு அதிபதியாக இருந்தாலும் இவர்களுடைய சொத்துக்கள் கரைந்துவிடும். இருப்பினும் தாங்கள் சுயமாக சம்பாதித்த சொத்துக்களை கொண்டவர்களாக இருப்பார்கள்.
Samayam Tamil Mithunam Sevvai 1200


மிதுனம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்!

உடன்பிறந்தவர்கள் மற்றும் சொந்த பந்தங்களின் அனுசரணை ஆதரவு என்பது இவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கும். தாய்வழி சொந்த பந்தமும் தகப்பனார் வழி சொந்த பந்தமும் பகைமை பாராட்டும் முகத்துடன் இருப்பார்கள்.

இவர்களது பணத் தேவைகளுக்கு நண்பர்களின் உதவிகள் நிச்சயமாக கிடைக்கும். ஒரு சிலர் குறிப்பாக இரண்டாம் இடத்தில் கடகத்தில் இருக்கக்கூடிய நீசமடைந்த செவ்வாய் மற்ற கிரகங்கள் ஒரு தொடர்பு இல்லாத பட்சத்தில் பணம் சம்பாதிப்பதற்காக தீய வழிகளை நாடி செல்ல வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டு விடும்.

அனைத்து ராசிகளின் தொழில் மற்றும் செல்வ நிலை எப்படி இருக்கும்?
லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்

இம்மாதிரியான காலங்களில் சற்று நிதானத்துடனும் கவனத்துடனும் இருப்பது மிக நல்லது இல்லத்தில் மிகுந்த மகிழ்ச்சி இருக்காது. இவர்களுடைய எண்ணத்தை முழுமையாக புரிந்துகொள்ள முடியாதவர்கள் .உடனே குடும்பம் நடத்திக் கொண்டிருப்பார்கள் தங்களுடைய எண்ணங்களையும் செயல்பாடுகளையும் அனைவருக்கும் புரிய வைப்பதற்குள் இவர்களுக்கு வயதாகி விடும் சுப கிரகங்களின் பார்வை மற்றும் சேர்க்கை அல்லது தொடர்புகள் வாழ்க்கையின் உச்சத்திற்கே கொண்டு சென்று நிறுத்திவிடும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்