ஆப்நகரம்

Mars in Dhanusu Lagna: தனுசு லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்

ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும். அதே சமயம் ஒவ்வொரு கிரகங்கள் அந்த ராசியின் மீது பல யோகங்கள் மற்றும் பிரச்னைகள் கொடுக்கலாம். அப்படி தனுசு லக்னத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் யோக பலன்கள் பார்க்கலாம்.

Samayam Tamil 28 Jul 2019, 8:02 pm

தனுசு லக்னமாக அமைந்து செவ்வாய் தனுசுவில் இருக்க பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலியாக இருப்பார்கள். தாராளமாக செலவு செய்யும் இவர்களுக்கு பணத்திற்காக கடன் வாங்க தயங்க மாட்டார்கள். சொத்துக்கள் வாங்குவதற்கு நிச்சயமாக இவர்கள் கடன் பெற வேண்டியது வரும்.
Samayam Tamil Danushu Sevvai 1200 (1)


தாய், தந்தையரை பற்றிய சிந்தனைகள் குறைவான அளவே இவர்களுக்கு மனதில் இருக்கும். சூதாடுதல் தொடர்பான காரியங்களில் ஈடுபடுதல் கூடாது. மீறினால் இவர்களை அடி ஆழத்திற்கு அழைத்துக்கொண்டு செலுத்திவிடும். பெற்றோரால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் தாய் தந்தையரால் சங்கடங்களை சந்திக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகி விடும்.

தனுசு ராசிக்காரங்களால் மற்றவர்களுக்கு தான் நல்லது நடக்கும்!

குடும்பத்தில் இவருக்கான மதிப்பும் மரியாதையும் சற்று குறைவாகவே இருக்கும். இவர் அதை அதிகம் எதிர்பார்க்கவும் மாட்டார்கள் மிகுந்த தந்திர சாலியாக இருப்பார்கள். தங்களுடைய காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள எதைப்பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். உடல் உஷ்ணம் அதிகமாவதால் ஏற்படும் உடல் உபாதைகள் உண்டு.

அனைத்து ராசிகளின் தொழில் மற்றும் செல்வ நிலை எப்படி இருக்கும்?

லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்

மன தைரியம் மிக்கவர்கள் ஆன இவர்கள் வாழ்க்கையில் வெற்றி அடைய கூடியவர்களாக இருப்பார்கள். சமுதாயத்தில் நல்ல பெயரைப் பெறும் இவர்களுக்கு குடும்பத்தில் நல்ல பெயர் என்பது எட்டாக்கனியாகவே நின்றுவிடும். கூடுமானவரை ஆடம்பரச் செலவுகளுக்காக கடன் பெறுவதை தவிர்க்க வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்