ஆப்நகரம்

Mars in Rishabam Lagna: ரிஷபம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்

ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும். அப்படி ரிஷபம் லக்னத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் யோக பலன்கள் பார்க்கலாம்.

Samayam Tamil 18 Jul 2019, 7:03 pm
ரிஷபம் ஜாதகருடைய லக்னமாக அமைந்து இலக்கினத்தில் செவ்வாய் இருக்குமாயின் கடின உழைப்பாளிகளாக இருப்பார். இரவும் பகலும் பாடுபட்டு பொருளாதாரத்தில் முன்னேற்றம் நிலைக்கு வந்துவிடுவார்கள். தன்னுடைய உடல் நலத்தை விட தான் சம்பாதிக்கும் பொருள் நலமே மிகப் பெரிதாக இவர்களுக்கு இருக்கும். ஆடம்பரப் பொருட்களை விரும்பும் இவர்கள் தன் மனைவிக்கு ஏற்ற சிறந்த கணவனாக இருப்பார்கள்.
Samayam Tamil Rishabam Sevvai (1)


Rasi In Astrology:ஜாதகத்தில் ராசி என்றால் என்ன?- அது எப்படி நமக்கு அமைகிறது? ஜோதிடரின் பதில்

ஜாதகத்தில் லக்கினம் என்பது என்ன?- அது எப்படி நமக்கு அமைகிறது? ஜோதிடரின் பதில்

மனைவி மற்றும் மனைவி வழிச் சொந்த பந்தங்கள் ஆகியவற்றிற்கு நல்ல மரியாதை கொடுப்பார். இதனால் இவர் பெண்ணெடுத்த வகையில் மிகுந்த கௌரவத்தையும் மரியாதையையும் சம்பாதித்து விடுவார். மனைவி வகையில் நல்ல பெயரைப் பெற்று விடும். இம்மாதிரியான ஜாதகர்கள் தன்னுடைய தாய் தந்தையரிடம் நல்ல பெயரை பெற முடியாமலே போய்விடும் . தனது தாயை காண்பதற்கு கூட நேரம் ஒதுக்க முடியாமல் இருப்பார்.

அனைத்து ராசிகளின் தொழில் மற்றும் செல்வ நிலை எப்படி இருக்கும்?
லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்

பெற்றோரின் அன்பை புரிந்துகொள்ள முடியாத ஒரு மனோநிலையே இம்மாதிரியான அவர்களிடம் இருக்கும். ஆனால் இவர்கள் கல் நெஞ்சக்காரர்கள் அல்ல இம்மாதிரியான ஜாதகர்கள் எவ்வளவுதான் பொருளாதாரத்தை குவித்தாலும் மன நிம்மதி என்பது வருவது இல்லை. ஆகவே இவர்களுக்கு வாழ்நாள் முழுமையும் சம்பாதித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற தீராத வெறி இருக்கும். பணத்தின் மீது கொண்ட காதல் கண்மூடித்தனமாக இருக்கும். இவருடைய கடின உழைப்பு மனைவிக்கும் மனைவி வழி உறவினர்கள் எடுக்கும் சிறப்பாக பயன்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்