ஆப்நகரம்

Virgo Ascendant: கன்னி லக்னத்தின் 2வது இடத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்

ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும். அதே சமயம் ஒவ்வொரு கிரகங்கள் அந்த ராசியின் மீது பல யோகங்கள் மற்றும் பிரச்னைகள் கொடுக்கலாம். அப்படி கன்னி லக்னத்திற்கு 2வது இடத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் யோக பலன்கள் பார்க்கலாம்.

Samayam Tamil 22 Aug 2019, 6:20 pm

கன்னி லக்னமாக அமைந்து இரண்டாம் இடமான துலாமில் செவ்வாய் நிற்பது மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை தரக்கூடிய ஒரு கிரகச் சேர்க்கை ஆகும். பாவ கிரகங்களின் தொடர்பு இல்லாமல் இருந்தாலே போதுமானது சுபகிரகங்கள் இந்த இரண்டாமிட செவ்வாயுடன் தொடர்பு இல்லாத பட்சத்திலும் கூட பொருளாதாரத்தில் மிகுந்த முன்னேற்றத்தை அடைவார்கள்.
Samayam Tamil Kanni Sevvai 1200


தனக்கென வலுவான சொத்து பத்துக்களை சம்பாதித்துக் கொள்வார்கள். தனது சம்பாத்தியத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை தான தர்மம் என்று நிறைய செலவு செய்து விடுவார்கள். இவர்களுடைய பேச்சு கூடுதலாகவே இருக்கும்.

கன்னி லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்

கேட்பதற்கு ஒரு ஆள் கிடைத்துவிட்டால் போதும் வாரக் கணக்காக வன்மையாக பேசிவிடுவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை என்பது பெயரளவில் தான் இருக்கும். யார் சொல்வதை யார் கேட்பது என்பதில் போட்டி மிகுந்து இருக்கும்.

ஜாதகத்தில் லக்கினம் என்பது என்ன?- அது எப்படி நமக்கு அமைகிறது? ஜோதிடரின் பதில்

நல்ல ஆயுள் பலத்தை பெற்றிருக்கக் கூடிய இந்த ஜாதகர்கள் மன நிம்மதி பெறுவது என்பது சற்று கடினமான காரியமே இருப்பினும் வெளி உலகிற்கு இவர்களை மிகவும் யோககாரர்கள் ஆகவே காட்டி விடும் என்பதால் பெயர் மற்றும் புகழ் குறை ஒன்றும் இருக்காது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்