ஆப்நகரம்

Sukran in Thulam : மேஷம் லக்னமாக அமைந்து துலாமில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள்

ராசி கட்டத்தில் அமைந்திருக்கும் ஒவ்வொரு கிரக அமைப்பை பொருத்து பலன்கள் கிடைக்கும். அப்படி மேஷம் லக்கினமாக மைந்து 2வது இடத்தில் அதாவது துலாமில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் யோக பலன்கள் பார்க்கலாம்.

Samayam Tamil 23 Sep 2019, 2:22 pm
ஒருவருடைய தாம்பத்திய வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு, அவரின் ஜாதகத்தில் சுக்கிரன் எங்கு அமைந்துள்ளார் என்பதை வைத்தே கணக்கிட வேண்டும். பொதுவாக சுக்கிரன் மறைவு ஸ்தானங்களில் இல்லாமல் கேந்திரம் என்று சொல்லப்படும். 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் இருந்தால் மிகச் சிறந்த தாம்பத்திய வாழ்க்கையை அனுபவிக்க வாய்ப்பு உள்ளது.
Samayam Tamil Sukran Thulam1200


மேஷம் லக்கினமாக அமர்ந்து ஏழாம் இடமான துலாமில் சுக்கிரன் ஆட்சி பெற்ற நிலையில் பிறந்த ஜாதகர்கள் வாழ்க்கையை அனுபவிக்கப் பிறந்தவர்கள். அவர்கள் தனது மனதிற்கு பிடித்த அழகான வாழ்க்கைத் துணை அமையும். குடும்ப வாழ்க்கை மிகவும் இனிமையாக செல்லும்.

மேஷம் லக்கினமாக இருந்து ஒவ்வொரு வீட்டில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள்

ஒரு காலத்தில் தனது திருமண வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் அதிவிரைவாக காலம் ஓடி விட்டதாகவே தோன்றும். தனது மனைவியின் மீது மிகுந்த மோகம் கொண்டு இருப்பார். காமத்தை அடக்க முடியாமல் சிரமப்படுவார்கள்.

அனைத்து நட்சத்திரங்களுக்கான குரு பெயர்ச்சி பலன்கள் (2019 - 2020)

மிகவும் அழகான வாழ்க்கை துணை அமையும் என்பதால் காமத்தை கொண்டு பிரச்சினைகள் எழுவதற்கு வாய்ப்பே இல்லை. திருமணத்திற்கு பின் இவர்களுடைய வாழ்க்கை மிக உன்னதமான நிலையை நோக்கிச் சென்று விடும் வசதி வாய்ப்பு என்று வருவது ஒரு பக்கம் இருந்தாலும் அதிர்ஷ்டம் அவர்களை நோக்கி வந்து விடும்.

மனைவி வரும் பொழுது. இவருக்கு உதவி செய்வதற்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் புடைசூழ எந்நாளும் திறந்து வருவார். விருந்தினர்களாக வருபவர்களுக்கு மிகுந்த மரியாதையையும் மகிழ்ச்சியையும் அளிக்கக் கூடிய திறன் படைத்தவராக இருப்பார்.

உங்கள் ஜாதக தோஷம் நீங்க எந்த விலங்குகளுக்கு உணவளிக்க வேண்டும் தெரியுமா?

மிகப்பெரிய அரசியல் வாதிகளும், அதிகாரம் படைத்த அலுவலர்களும். செல்வாக்கு படைத்த உயர்ந்த மனிதர்களின் பழக்க வழக்கங்கள் இவருக்கு அதிகமாக இருக்கும் என்பதால் தனக்கு சாதகமான பல காரியங்களை வெகு எளிதாக சாதித்துக் கொள்வார்கள். சாமுத்திரிக லட்சணம் சிறப்பாக அமைய பெற்றவர்களாக இருப்பார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்