ஆப்நகரம்

Santhira Kiranam 2019: இன்று சந்திர கிரகணம்! எப்போது எப்படி பார்க்கலாம்?

2019-ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம், இன்றும் நாளையும் நிகழவிருக்கிறது. இந்த சந்திர கிரணத்தை தொடர்ந்து 2021, மே 26 வரை எந்த சந்திர கிரகணமும் நிகழாது என்று கூறப்படுகிறது.

Samayam Tamil 20 Jan 2019, 10:30 am
2019-ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம், இன்றும் நாளையும் நிகழவிருக்கிறது. இந்த சந்திர கிரணத்தை தொடர்ந்து 2021,மே 26வரை எந்த சந்திர கிரகணமும் நிகழாது என்று கூறப்படுகிறது.
Samayam Tamil chandra graghanam


இந்த ஆண்டில் உலகில் 5 கிரகணங்கள் தென்படும் என்றும், அதில் இந்தியாவில் 2 கிரணங்கள் தென்படும் என்றும் வானியல் கூர்நோக்கு மையம் தெரிவித்துள்ளது.

நிலவு மறைப்பு அல்லது சந்திர கிரகணம் (lunar eclipse) என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும்.

இது சூரியன், பூமி, நிலவு ஆகியவை, மிகத்துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழவோ, ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே ஏற்படும்; இது ஏற்படுவதற்கு பூமி இடையில் அமைந்திருக்க வேண்டும்.


வருகின்ற 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் நிகழும் சந்திர கிரகணம் முழுமையாக நிகழ்கிறது.

நிகழும் நேரம்
இன்று இரவு 11.41 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம் நாளை காலை 10.11 மணிவரை நீடிக்கும். 62 நிமிடங்கள் வரை நீடிக்கும் இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க இயலாது.

எந்த நாடுகளுக்கு தெரியும்?
கிழக்கு ஆப்ரிக்கா, கிழக்கு ஐரோப்பா பகுதிகளில் மட்டும் இந்த சந்திர கிரகணத்தை பார்க்க முடியும் . அதேபோல் மற்றொரு சந்திரகிரகணம் ஜூலை 16 , 17 ஏற்படப்போவதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்