மேஷ ராசி
மனைவி உறவு அன்னியோன்னியமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இட மாற்றத்தை எதிர்பார்க்கும் நாள் ஆகும். பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் எதிர் கொண்டு வெற்றி அடைவீர்கள்.
மேஷ ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2020 - புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும்
ரிஷப ராசி:
பணிச்சுமை சற்று கூடுதலாக இருந்தாலும் அவைகளை திறம்பட எதிர்கொண்டு உங்கள் திறமையை நிரூபிப்பீர்கள். கல்விக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்விற்கான காலமாக இன்றைய நாள் அமையும்.
ரிஷப ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2020 : அதிர்ஷ்டங்களால் வாழ்க்கை சிறக்கும்
மிதுன ராசி:
சொத்துக்கள் வாங்குவது அல்லது வீடு கட்டுவது போன்ற சிந்தனைகளிலும் செயல்பாடுகளிலும் ஈடுபடுவீர்கள். உத்தியோகம் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்.
Video-இன்றைய ராசி பலன் - 27 / 10 / 2020 | தினப்பலன்
கடக ராசி
உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் உண்டு. வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு அல்லது ஊதிய உயர்விற்கான முக்கியமான நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் குடும்பத்தில் அமைதி தவழும்.
கடக ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2020 - அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கும் குரு
சிம்ம ராசி
ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கைகூடி வரும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் பல புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முன்னேற்றமான நிகழ்வுகள் உண்டு.
சரஸ்வதி யோகம் யாருக்கு அமையும்; எப்படிப்பட்ட கிரக அமைப்பு இருக்கும்?
கன்னி ராசி
கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் நிற்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று பணிச்சுமை கூடுதலாக இருக்கும். நிர்வாகத்தில் நம்பிக்கையையும் பெற்று விடுவீர்கள். கல்வியை முடித்து வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
துலாம் ராசி
உத்தியோகங்களுக்கு விண்ணப்பிப்பது போன்றவற்றை சற்று தள்ளி வைப்பது நல்லது. மனைவி உறவு நன்றாக இருந்து வரும். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டு இருப்பவர்கள் முன்னேற்றத்தை காண்பார்கள். மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள்.
இந்த சகுனங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் பண வரவையும் கொண்டு வரும்
விருச்சிக ராசி
குடும்பத்தில் அமைதி தவழும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் ஓரிரு நாட்கள் தாமதம் ஆகலாம். தொழில் துவங்க பலருக்கு மனதில் எண்ணம் ஏற்படும். படிப்பை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சற்று காலதாமதம். நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தனுசு ராசி
நீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியடையும். நீண்டகாலமாக தொழிலில் இருந்து வந்தவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். வேலையில் நிர்வாகத்தின் நம்பிக்கையை பெறுவீர்கள். ஒரு சிலர் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.
மகர ராசி
நீண்ட காலமாக வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்கள் தாய் நாட்டை நோக்கி திரும்ப எண்ணமும் செயல்பாடுகளும் கொண்டிருப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஆதாயம் உண்டாகும்.
கும்ப ராசி
நீங்கள் எதிர்பார்த்த பல காரியங்கள் வெற்றியடையும். பிரிந்து சென்று கொண்டிருந்த குடும்பங்கள் ஒற்றுமை அடைவார்கள். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வியில் இருப்பவர்கள் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைவார்கள்.
மீன ராசி
தன வரவுக்கு வழி உண்டு. நீங்கள் செய்யக்கூடிய பல காரியங்கள் உங்கள் உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள்.