ஆப்நகரம்

Rasi Palan: புத்தாண்டில் உங்கள் இன்றைய ராசி பலன்கள் எப்படி?

இன்றைய ராசிபலன். (14 /4 /2019) தமிழ் விகாரி வருஷம் சித்திரை மாதம். 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தசமி திதி ஆயில்ய நட்சத்திரம் புதன் நட்சத்திரம் (சித்திரை 13-ஆம் தேதி வரை புதன் பலவீனமாக நீசம் பெற்று இருப்பது) சித்த யோகம். தமிழ் வருட பிறப்பு.

Samayam Tamil 14 Apr 2019, 12:11 am
இன்றைய ராசிபலன். (14 /4 /2019) தமிழ் விகாரி வருஷம் சித்திரை மாதம். 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தசமி திதி ஆயில்ய நட்சத்திரம் புதன் நட்சத்திரம் (சித்திரை 13-ஆம் தேதி வரை புதன் பலவீனமாக நீசம் பெற்று இருப்பது) சித்த யோகம். தமிழ் வருட பிறப்பு.
Samayam Tamil astro3


மேஷராசி
அன்பர்களே உங்கள் ராசிக்கு 4ல் சந்திரன் இருப்பதால். 3 6-ம் அதிபதி புதன் சாரம் பெற்று நிற்பதால் ஆனால் புதன் பலவீனமாக இருப்பதால் எந்த முயற்சியிலும் நிதானமாக செயல்பட வேண்டும் வாகனத்தில் கவனமாக மெதுவாக. செல்ல வேண்டும் முன் கோபப்பட வேண்டாம் யாரு நம்பி கடன் உதவி செய்ய வேண்டாம் தானதர்மம் செய்யலாம் இன்றைய மேஷ ராசிக்கு அலைச்சலை தவிர்ப்பது நன்று.


ரிஷப ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 3-ல் சந்திரன் இருப்பதால் 2 -5-ம் அதிபதி புதன் சாரம் பெற்று நிற்பதால் ஆனால் புதன் பலவீனமாக இருப்பதால் யாருக்கும் வாக்கு தர வேண்டாம், எந்த முயற்சியிலும் நிதானமாக செயல்பட வேண்டும், யாரையும் மன்னிக்கும் குணம் வேண்டும், சொத்துக்கள் பற்றி பேசுவதில் கவனம் தேவை , இன்றைய ரிஷப ராசிக்கு முயற்சியில் கவனம் தேவை .


மிதுன ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 2-ல் சந்திரன் இருப்பதால் 1 4-ம் அதிபதி புதனுடைய சாரம் பெற்று நிற்பதால். புதன் பலவீனமாக இருப்பதால் தனக்குத்தானே தாழ்வுமனப்பான்மை வேண்டாம் யாரும் வாக்கு தருவதில் கவனம் தேவை வாகனத்தில் கவனமாக செல்ல வேண்டும், நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும் தூங்கும் வேண்டும் அப்போது தான் உடலுக்கு நல்லது. இன்றைய. மிதுன ராசிக்கு வாக்கு தருவதில் கவனம் தேவை .


கடக ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு லக்னத்தில் சந்திரன் இருப்பதால் 3 12-ம் அதிபதி புதனுடைய சாரம் பெற்று நிற்பதால் புதன் பலவீனமாக இருப்பதால் எந்த முயற்சியிலும் நிதானமாக செயல்பட வேண்டும் மன அலைச்சலை தவிர்ப்பது நன்று யாரும் கடன் உதவி செய்ய வேண்டாம், வாங்கியும் தர வேண்டாம் தானம் தர்மம் செய்யலாம் யாரிடமும் தாழ்வு மனப்பான்மை வேண்டாம் இன்றைய கடக ராசிக்கு தன்னுடைய முயற்சியினால் நிதானமாக செல்ல வேண்டும்.


சிம்ம ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 12-ல் சந்திரன் இருப்பதால் 2ம் 11-ம் அதிபதி புதனுடைய சாரம் பெற்று நிற்பதால் புதன் பலவீனமாக இருப்பதினால் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நன்று வீட்டில் உள்ள தன யோகத்தை யாரிடமும் தராமல் இருப்பது நன்று, தொழில் துறையில் வரும் லாபத்தை யாருக்கும் கடன் உதவி செய்யாமல் இருப்பது நன்று ,முன் கோபப்பட வேண்டாம் இன்றைய சிம்ம ராசி வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நன்று.


கன்னி ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 11-ல் சந்திரன் இருப்பதால் 1 10-ம் அதிபதி புதன் சாரம் பெற்றுநிற்பதால் புதன் பலவீனமாக இருப்பதாலதொழிலில் வரும் லாபத்தை யாரும் கடன் உதவி செய்ய வேண்டாம் தனக்குத்தானே தாழ்வுமனப்பான்மை வேணாம் டென்ஷன் ஆக வேண்டாம் நகைச்சுவை உணர்வுடன் இருப்பது நன்று யாரிடமும் வித்தையை சொல்ல வேண்டாம் கேட்டால் சொல்ல வேண்டும் அப்பொழுதுதான் உயர்வைத் தருவார் இன்றைய கன்னிராசிக்கு வரும் லாபத்தை யாரிடமும் பகிர வேண்டாம் .


துலாம் ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 10ல் சந்திரன் இருப்பதால் 9 12-ம் அதிபதி புதன் சாரம் பெற்று நிற்பதால் புதன் பலவீனமாக இருப்பதால் அலுவலகத்திலும், வேலைபார்க்கும் இடத்தில் நேர்மை நாயத்தைப் பற்றி பேசவேண்டாம் , வீட்டில் உள்ள செல்வத்தை யாரிடமும் தர வேண்டாம் , வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நன்று வாகனத்தில் கவனமாக மெதுவாகவும் செல்ல வேண்டும் இன்றைய துலா ராசிக்கு பதவி உயர்வில் சற்று கவனம் தேவை.


விருச்சிக ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 9-ல் சந்திரன் இருப்பதால் 8 11-ம் அதிபதி புதன் சாரம் பெற்று நிற்பதால் ஆனால் புதன் பலவீனமாக இருப்பதால் வீட்டில் உள்ள செல்வத்தை யாரும் கடன் உதவி தர வேண்டாம் . தொழில் துறையில் அதிக லாபம் வருவதையும் கடன் உதவி தர வேண்டாம், எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும், வாகனத்தில் கவனமாகவும் மெதுவாகவும் செல்ல வேண்டும் இன்றைய விருச்சிக ராசிக்கு வரும் யோகத்தை கவனமாக வைத்திருப்பது நன்று.


தனுசு ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 8-ல் சந்திரன் இருப்பதால் 7- 10ம் அதிபதி புதன் சாரம் பெற்று நிற்பதால் புதன் பலவீனமாக இருப்பதால் சந்திராஷ்டமம் இருப்பதால். வேலை பார்க்கும் இடத்திலும் அலுவலகத்திலும் வாக்குவாதம் செய்ய வேண்டாம் அமைதியாக இருப்பது நன்று வாகனத்தில் கவனமாகவும் மெதுவாகவும் செல்ல வேண்டும், எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும் இன்றைய தனுசு ராசி சந்திராஷ்டமம் இருப்பதால் கடவுளை தியானித்து வருவது மிக நன்று.


மகர ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 7-ல் சந்திரன் இருப்பதால் 6 9-ம் அதிபதி புதன் சாரம் பெற்று நிற்பதால் புதன் பலவீனமாக இருப்பதால் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும். மனக் குழப்பம் வேண்டாம் நகைச்சுவை உணர்வுடன் இருப்பது நன்று வீட்டில் உள்ள செல்வத்தை யாரிடமும் கடனாக தர வேண்டாம், இன்றைய மகர ராசிக்குஏதிலும்நிதானமாகசெயல்படும்நாள்.


கும்ப ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 6-ல் சந்திரன் இருப்பதால். 5 8-ம் அதிபதி புதன்உடையசாரம். பெற்றுஇருப்பதால். அனால்புதன் பலவீனமாக இருப்பதால் உடல் நிலையை அக்கறை காட்டவேண்டும், ஏந்த முயற்சியில் நிதானமாக செயல்பட வேண்டும், வீண் அலைச்சலை தவிர்ப்பது நன்று, எதிலும் தைரியமாக செயல்படுவதும், இன்றைய கும்ப ராசிக்கு உடல்நிலையில் அக்கறை காட்டும்நாள்.


மீன ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 5ல் சந்திரன் இருப்பதால் 4-7-ம்புதனுடைய சாரம் பெற்று நிற்பதால் புதன் பலவீனமாக இருப்பதால் வீண் அலைச்சலை தவிர்ப்பதும் வரும் யோகத்தை யாரிடமும் பேசாமல் இருப்பது நன்று ,வாகனத்தில் கவனமாக செல்ல வேண்டும் நேரத்திற்கு உணவும் தூக்கமும் வேண்டும் அப்பொழுதுதான் உடல் ஆரோக்கியம் பெறும். இன்றைய. மீன ராசிக்கு சொத்துக்கள் வாங்கும் போது கவனம் தேவை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்