ஆப்நகரம்

இன்றைய ராசி பலன் (06 ஏப்ரல் 2023)

இன்றைய கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசி பலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

Authored byஅரவிந்தன் | Samayam Tamil 6 Apr 2023, 6:53 pm
ஏப்ரல் 6ஆம் தேதி வியாழக் கிழமை கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. சுக்கிரன் தனது ராசியான ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆகி ஆட்சி செய்ய உள்ளார். சஞ்சரிப்பார். நாள் முழுவதும் சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கக்கூடியதால் கஜகேசரி யோகம் உருவாகிறது இதன் காரணமாக கடகம், துலாம் உள்ளிட்ட சில ராசியினருக்கு சுப பலன்கள் கிடைக்கும். 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
Samayam Tamil today astrology 06 april 2023 check daily rasi palan prediction aquarius rasi may get more respect
இன்றைய ராசி பலன் (06 ஏப்ரல் 2023)


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உத்தியோகத்தில் மூத்த அதிகாரியுடன் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். உங்கள் கோபத்தையும் பேச்சையும் கட்டுப்படுத்தவும். இன்று நீங்கள் நண்பர்களுடன் நீண்ட தூர பயணங்கள் செய்ய திட்டமிடுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

மேஷ ராசி சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன் 2023-24

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இன்று நீங்கள் வியாபாரம், வேலையில் தேவையற்ற அல்லது கூடுதல் உழைப்பு தேவைப்படும். கடின சூழலிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் உத்தியோகத்தில் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். உங்கள் வணிகத்திற்காக நீங்கள் சில புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். அவை உங்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.

ரிஷபத்தில் ஆட்சி செய்யப்போகும் சுக்கிரன் : ஏப் 6 முதல் சுக்கிர யோகம் பெறப்போகும் ராசிகள்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு நிம்மதி தரும் நாளாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான சில பிரச்சனைகள் இன்று தீரும். இன்று உங்கள் வியாபாரத்தில் முன்னேற ஒரு பெரியவரின் அனுபவம் தேவைப்படும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம் குரு பெயர்ச்சி 2023 : லாப குரு தரும் ஓஹோன்னு பலன் : Mithunam Guru Peyarchi Palan

கடகம்

கடக ராசிக்கு மிகச் சிறந்த நாளாக இருக்கும். உங்கள் நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சிலரின் சந்திப்பால் உங்கள் மன அழுத்தம் குறையும்,வாழ்க்கைத் துணையின் ஆலோசனை சாதகமான பலன் தரும். குழந்தைகள் விஷயம் சார்ந்த சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், எனவே கவனமாக இருக்கவும்.

கடகம் குரு பெயர்ச்சி பலன்கள் : 10ல் குரு பதவி பறிபோகலாம்... கவனம்!

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இன்று நிதி விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் தெரியாத நபருடன் பெரிய பண பரிவர்த்தனை செய்ய வேண்டாம். அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். தொழில் நிமித்தமாக மேற்கொள்ளும் பயணம் சாதகமாக அமையும். எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும்.

ஆட்சி செய்யும் சுக்கிரனால் ஆட்டம் காணப் போகும் 5 ராசிகள் - கவனமாக இருந்தால் தப்பிக்கலாம்

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். இன்று உங்கள் குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகளைப் பற்றி பேசுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் சார்ந்தும், குடும்ப பொறுப்புகள் காரணமாக பிஸியாக இருப்பீர்கள். இன்று உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து திட்டமிடுவீர்கள். இன்று யாரிடமும் விவாதம் செய் வேண்டாம். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்தவும்.

சித்திரை மாத ராசி பலன்: மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ரிஷபம், மீனம் உள்ளிட ராசிகள்

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு கௌரவம் அதிகரிக்கும்.உங்கள் பயணம் இன்று தள்ளிப் போக வாய்ப்புள்ளது. இன்று மாலை உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காமல் மன உளைச்சல் ஏற்படலாம். உங்கள் நிதி நிலையை மேம்படுத்த கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

வாராந்திர ராசிபலன் : ஏப்ரல் 2 முதல் 9 வரை - துலாம் முதல் மீனம் ராசி வரை யாருக்கு யோகம் தெரியுமா

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு கலவையான நாளாக இருக்கும். இன்று மாணவர்கள் படிப்பில் முழு மனதுடன் ஈடுபடுவது நல்லது. இன்று உங்கள் மாமியார் தரப்பிலிருந்து பணப் பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. இன்று வேலை சார்ந்த சில நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்களுக்கு சமூகத்தில் மரியாதை கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள். இன்று வண்டி, வாகனத்தை கவனமாக பயன்படுத்தவும். உங்கள் வாகனத்திற்காக கொஞ்சம் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். இன்று நீங்கள் முதலீடு செய்ய ஏற்ற நாள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.

சூரிய கிரகணம் எப்போது 2023? எந்தெந்த இடங்களில் பார்க்க முடியும் தெரியுமா?

மகரம்

இன்று மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்கும். உங்களுக்கு வர வேண்டிய பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. தடைப்பட்ட பணிகளை செய்து முடித்து நிம்மதி அடைவீர்கள். திருமண வாழ்க்கையில் இனிமை நிலைத்திருக்கும். இன்று உத்தியோகத்தில் வியாபாரத்தில் மேலதிகாரிகளால் ஆதாயம் அடைவீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று குடும்ப வாழ்க்கையில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். இன்று உங்கள் மனைவியிடம் அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். பெற்றோரிடம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வீட்டில் விருந்தினர்களின் வருகையால் செலவு உண்டாக வாய்ப்புள்ளது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான நாளாக இருக்கும். நாளின் பிற்பகுதியில் சந்திராஷ்டமம் வருகிறது. உங்கள் வேலையில் மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது.
உங்கள் ஆரோக்கியத்திலும், செலவு விஷயங்களிலும் கவனம் தேவை. சட்டம் தகராறு தொடர்பான விஷயங்கள் பிரச்சினையை ஏற்படுத்தலாம்.பணியிடத்தில் கடின உழைப்பால் வெற்றி பெறுவீர்கள்.

எழுத்தாளர் பற்றி
அரவிந்தன்
நான் அரவிந்தன் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 12 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஜோதிடம், ஆன்மிகம் தொடர்பான செய்திகளை எழுதிக் கொண்டிருக்கும் நான், விளையாட்டு, நடப்பு நிகழ்வு, செய்திகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Principal Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்