ஆப்நகரம்

இன்றைய ஜென்ம நட்சத்திர பலன் 20 பிப்ரவரி 2023 - சோமவார அமாவாசை

சோமவார அமாவாசை எனும் அற்புத நாளில் 27 நட்சத்திரங்களுக்கு சிறப்பான பலன்கள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.

Authored byஅரவிந்தன் | Samayam Tamil 20 Feb 2023, 12:01 am
சோமவார அமாவாசை அற்புத தினத்தில் நட்சத்திரங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை ஜோதிட நிபுணர் ஜி.ஸ்ரீனிவாசன் M.A.(Astrology) cell: 94999 02400 விரிவாக விளக்கியுள்ளார்.
Samayam Tamil today jenma natchathira palan 20 february 2023 poosam ayilyam star chandrastama
இன்றைய ஜென்ம நட்சத்திர பலன் 20 பிப்ரவரி 2023 - சோமவார அமாவாசை


நட்சத்திர பலன்

  • அஸ்வினி: தொழில் விரிவாக்கம் செய்ய போட்ட திட்டங்கள் அனுகூலமான பலன் தரும். காரிய அனுகூலம் உண்டாகும்.
  • பரணி: சுப காரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்க கூடும். நண்பர்கள் உதவக்கூடும்.
  • கார்த்திகை: திடீர் தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
  • ரோகிணி: உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் வரக்கூடும். வியாபார ரீதியான பயணங்களால் லாபம் உண்டாகும்.
  • மிருகசீரிஷம்: செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அடுத்தவரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
  • திருவாதிரை: உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இன்றைய ராசி பலன் (20 பிப்ரவரி 2023) : Horoscope Today, February 20

இன்றைய ஜென்ம நட்சத்திர பலன்

புனர்பூசம்: தொழில், வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் லாபம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.
பூசம்: தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
ஆயில்யம் : வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். புதிய வாகனம் வாங்க நினைப்பவர்களுக்கு அந்த யோகம் உண்டாகும்.
மகம்: உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். சுபகாரியம் கூடி வரும்.
பூரம் : வருமானம் அதிகரிக்க எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும்
உத்திரம்: திட்டமிட்ட படி பணிகளை செய்து முடிப்பீர்கள். வீடு, சொத்து வாங்குவது விற்பதில் இருந்த தடை, தாமதம் நீங்கும்.
உதயமாகும் சனி! - 5 ராசிகளுக்கு பிரகாசமான யோகம்

இன்றைய நட்சத்திர பலன்

அஸ்தம்: உத்தியோகத்தில் இருந்த மறைமுக போட்டிகள், எதிர்ப்புகள் நீங்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகளும் கிடைக்க கூடும்.
சித்திரை: வருமானம் எதிர்பார்த்தபடி இருக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நீண்ட நாள் தேவை பூர்த்தியாகும்.
சுவாதி: ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
விசாகம்: குடும்பத்தினருடன் வாக்குவாதங்கள் ஏற்பட்டு அதனால் மன வருத்தங்கள் உண்டாகலாம் என்பதால் கவனமாக பேசுவது நல்லது.
அனுஷம்: பயணங்களின் போது கூடுதல் கவனம் நன்மை தரும். வாகனங்களால் செலவுகள் ஏற்படலாம்.

நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் உங்கள் நாக்கின் வடிவம் நிறம் இப்படி இருக்கா?

நட்சத்திர பலன்

கேட்டை: எடுத்த காரியத்தை செய்துமுடிக்க கூடுதல் முயற்சி தேவைப்படும். உறக்கம் பாதிக்கும் விதத்தில் பணிசுமை இருக்க கூடும்.
மூலம்: தொழில் வியாபாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசரப்படாமல் நிதானத்தை கடைப்பிடிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.


பூராடம்: மனதிலிருந்த குழப்பங்கள் தீர்ந்து திருப்தியான நிலை காணப்படும். பண வரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.
உத்திராடம்: குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். சாமர்த்தியமான பேச்சினால் காரிய அனுகூலம் ஏற்படும். கருத்து வேற்றுமைகள் நீங்கும்.
திருவோணம்: உத்தியோக ரீதியிலான பயணங்கள் செல்ல வேண்டி வரலாம். அதனால் நல்ல பலன்களும் உண்டாகும்.

ஜென்ம நட்சத்திர பலன்

அவிட்டம்: தொழில் வியாபாரம் சிறப்படைய புதிய கருவிகள் வாங்கும் முயற்சி நல்ல பலனை தரும்.
சதயம்: கவலைகள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படக்கூடும். முக்கிய விஷயங்களில் தெளிவான முடிவுகளை எடுப்பதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.
பூரட்டாதி: முக்கிய நபர்களின் நட்பு கிடைக்கும். தேவைகள் யாவும் நிறைவேற எடுக்கும் முயற்சிகள் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
உத்திரட்டாதி: தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். புதிய நபர்கள் அறிமுகம் அவர்களால் நன்மை உண்டாகும்.
ரேவதி: நீண்ட நாள் எதிர்பார்த்த நிதி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். விட்டு சென்றவர்கள் திரும்பி வரலாம்.

திருமண உறவில் சமரசம் செய்து கொள்ளாத 4 ராசியினர் யார் தெரியுமா?

எழுத்தாளர் பற்றி
அரவிந்தன்
நான் அரவிந்தன் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 12 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஜோதிடம், ஆன்மிகம் தொடர்பான செய்திகளை எழுதிக் கொண்டிருக்கும் நான், விளையாட்டு, நடப்பு நிகழ்வு, செய்திகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Principal Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்