ஆப்நகரம்

Characteristics: கும்ப ராசியினரின் காதல் மற்றும் திருமண வாழ்வு எப்படி இருக்கும்?

ஒவ்வொரு ராசியினரும் அவர்களின் ராசி அதிபதியைப் பொருத்து தனித்துவமான குணத்துடன் இருப்பர். அந்த வகையில் கும்ப ராசியினர் எப்படிப்பட்ட குணம் மற்றும் காதல் வாழ்க்கை அமையும் என்பதை பார்ப்போம்.

Samayam Tamil 18 Jun 2019, 7:54 pm
கும்ப ராசி நேயர்களின் குணநலன்கள் மற்றும் பலன்கள்
Samayam Tamil what are the special characteristic and love possible to the aquarius horoscope personality
Characteristics: கும்ப ராசியினரின் காதல் மற்றும் திருமண வாழ்வு எப்படி இருக்கும்?

தன்னம்பிக்கை, மற்றவர்களை மதித்தல், உயர்ந்த சிந்தனை போன்ற நற்குணங்களை கும்ப ராசியினரின் முக்கிய குணம். சுதந்திர மனப்போக்கு கொண்டவர். ஆனால் தனக்கென தனி விதிகளை வகுத்து அதற்கேற்ப வாழ்பவர். சம்பிரதாயங்களை மதிப்பவர். மற்ற சமூகத்தவரையும் சகோதர, சகோதரி போல பாவிப்பவர்.
மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் சமுதாயத்தின் மீது அக்கறையும் கொண்டவர். ஏழைகள், ஆதரவற்றவர்கள் மீது இரக்கம் காட்டுபவர். மற்ற மதத்தினருடன் ஒற்றுமையாக பழகக்கூடியவர். மற்றவர்களை தன்னை போல நேசிப்பவர். அமைதி, உலக ஒற்றுமைக்காக பாடுபடக்கூடியவர். நவீன உலகத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்பவர். மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றும் கூடியவர். தேவைக்கேற்ப தனது புத்திக்கூர்மையை பயன்படுத்தக் கூடியவர். எளியவர்களுக்கு எளியோராக பழகுபவர். ஒற்றுமைக்கு பாடுபடுபவர். எந்தவொரு குடிமகனும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்காக எடுத்துக்காட்டாக விளங்கி அதற்கேற்ப ஆள்பவர்.

காதல்
உண்மையான காதல் வாழ்க்கை இவர்களிடம் அதிகம் இருக்கும். காதலியை கற்பனை செய்து பார்ப்பதில் இவருக்கு நிகர் இவரே. மன ரீதியாக நினைத்து காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும்.

உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது நல்லது. தனக்கென ஒரு கொள்கையை வைத்துக் கொண்டு வாழ்பவர். அதை இவரது துணையும் கடைபிடிக்கவேண்டும் என்று விரும்புவார். இவர் பழகுவதற்கு இனிமையானவர்.

அனைத்து ராசிகளுக்கான காதல் மற்றும் திருமண வாழ்வு எப்படி இருக்கும்?
திருமணம்
தனது துணையை மிக மகிழ்ச்சியாக வைத்திருப்பார். கும்ப ராசிக்காரர்களின் காதல் மற்றும் தாம்பத்திய உறவுகள் பிரகாசமாக இருக்கும். இவர்கள் புதுமை விரும்பிகளாக இருப்பர். மிதுனம், துலாம், விருச்சிகம் ஆகிய ராசியில் ஒருவரை, கும்ப ராசியில் பிறந்தவர்கள் துணையாகக் கொண்டால் இல்லறம் நல்லறமாக அமையும்.

அனைத்து ராசிக்கான சந்திர திசை கொடுக்கும் பலன்கள்! கும்ப ராசியினரின் மோசமான குணங்கள்:
பேராசையும், சோம்பேறித்தனமும் கும்ப ராசிக்காரர்களின் முக்கிய பிரச்சினையாகும். நடந்து முடிந்த விஷயங்களை எண்ணி எண்ணி இவர்கள் வருந்திக் கொண்டே இருப்பார்கள். யாராவது எதையாவது சொல்லி விட்டாலும் கூட மனம் உடைந்து போவார்கள். பயணம் செய்வது பிடிக்கும். ஆனால் எந்த பயணமும் நன்மையில் முடியாது. இதனால் பண நஷ்டமும், நேர விரையம் ஆகும்.

தனது லட்சியம் நிறைவேற எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்பவர். சுதந்திரத்திலும் நடவடிக்கையிலும் வேறு யாரும் தலையிட அனுமதிக்க மாட்டார்கள்.

பிரச்னைக்கான தீர்வு
துர் குணங்களில் இருந்து விடுபட சனிக்கிழமை மற்றும் வியாழக் கிழமையில் விரதம் இருக்கலாம். ஏகாதசி, பிரதோஷம் நாட்களிலும் விரதம் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறங்கள்

கருப்பு, நீலம், பச்சை நிறங்கள் அதிர்ஷ்ட நிறங்கள். இந்த நிறங்களால் ஆன ஆடைகளை அணிந்தால் மனதிற்கு அமைதி கிடைக்கும். எப்போதும் கருப்பு அல்லது நீல வர்ணத்தில் கை குட்டைகள் வைத்திருப்பது நல்லது. ஆபத்தாக உணரும் எல்லா நேரத்திலும் அணியும் ஆடையில் இந்த மூன்று நிறங்களில் ஏதேனும் ஒரு நிறமாவது இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது.

உங்கள் ராசிகளுக்கான ராசிக்கல் மற்றும் அதன் பயன்கள்
அதிர்ஷ்ட நாள்
கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பார்வை உண்டு. இதனால் அவர்களுக்கு சனிக்கிழமைகளில் அதிர்ஷ்ட தினமாகும். சனிக்கிழமைகளில் செய்யும் செயல்கள் வெற்றிகரமாக அமையும். இவர்களுக்கு வெள்ளிக்கிழமை சுபம். ஞாயிற்றுக்கிழமை பரவாயில்லை. வியாழக்கிழமை மோசமான நாள்.

கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் நடக்கும் நாட்களில் எந்த காரியத்தையும் துவக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட எண்
கும்ப ராசிக்காரர்களுக்கு 4 மற்றும் 8 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமாக இருக்கும். 4ன் கூட்டு எண்களும் 8ன் கூட்டு எண்களும் அதிர்ஷ்டமாகும். 1, 2, 9 ஆகிய எண்கள் அசுபம் ஆகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்