ஆப்நகரம்

Birthstones Chart:எந்த ராசியினர் எந்த ராசிக்கல் அணியலாம்?: ஜோதிடர்களின் விளக்கம்

பிறந்த ராசிக்கு உரிய கல் மோதிரமாக பயன்படுத்துவதோ அல்லது பிறந்த லக்னாதிபதிக் உரிய கல்லை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ராசிகல் அணிவதில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன.

Samayam Tamil 13 Jul 2019, 3:23 pm
பிறந்த ராசிக்கு உரிய கல் மோதிரமாக பயன்படுத்துவதோ அல்லது பிறந்த லக்னாதிபதிக் உரிய கல்லை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ராசிகல் அணிவதில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன.
Samayam Tamil Birth Stones


தசா புத்தி நடக்கும் போது அந்த திசைக்குரிய கல் பயன்படுத்துவதும், எந்த கிரகம் நீசமடைந்து உள்ளதோ அதைப் பயன்படுத்த வேண்டும் என்ற பல்வேறு ஆலோசனைகள் கூறுவதுண்டு. உங்களின் பிரச்னையின் அடிப்படையில் (உதாரணம்: வேலை கிடைக்கவில்லை, திருமணமாகவில்லை உள்ளிட்டவை) அதற்குரிய நவரத்தின கல் பயன்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது.

குழப்பம் வேண்டாம்:
ஆனால் இதுபோன்ற குழப்பத்தினால் எந்த ராசிக்கு எந்த ராசிக்கல் பயன்படுத்துவது என்ற பெரிய குழப்பம் மக்களிடையே நிலவுகின்றது.

Jyeshtha Amavasya: சோமாவதி அமாவாசை சிறப்புகள்: பாவங்களை நீக்க என்ன செய்யலாம்?

ஆனால் அதில் குழப்பமடையாமல், ராசிக்கான அடிப்படையாக கூறப்பட்ட ராசிக்கல்லை நாம் அணிந்து கொண்டால் தான் சிறந்தது.

மேஷம் - ராசி நாதன்: செவ்வாய் - பவளம்
ரிஷபம்- ராசி நாதன்: சுக்கிரன் - வைரம் (ஐம்பொன்)
மிதுனம் - ராசி நாதன்: புதன் - மரகதம்
கடகம் - ராசி நாதன்: சந்திரன் - முத்து (ஐம்பொன்)
சிம்மம் - ராசி நாதன்: சூரியன் - மாணிக்கம் (தங்கம் அல்லது ஐம்பொன்னில் பயன்படுத்தலாம்)
கன்னி - ராசி நாதன்: புதன் - மரகதம்
துலாம் - ராசி நாதன்: சுக்கிரன் - வைரம் (ஐம்பொன்)

அனைத்து ராசிக்கான சூரிய திசை கொடுக்கும் பலன்கள்!

அனைத்து ராசிக்கான சந்திர திசை கொடுக்கும் பலன்கள்!

விருச்சிகம் - ராசி நாதன்: செவ்வாய் - பவளம்
தனுசு - ராசி நாதன்: குரு - கனக புஸ்பராகம் (வெள்ளி தவிர்க்கவும்)
மகரம் - ராசி நாதன்: சனி- நீலக்கல் (ஐம்பொன்னில் பயன்படுத்துவது சிறப்பு)
கும்பம் - ராசி நாதன்: சனி- நீலக்கல் (ஐம்பொன்னில் பயன்படுத்துவது சிறப்பு)
மீனம் - ராசி நாதன்: குரு - கனக புஸ்பராகம்

பிரதோஷம் கடைபிடிக்கப்படும் பெருமாள் கோயில் : மதுரை யோக நரசிம்மர் கோயிலின் சிறப்புகள்

ஜோதிடர்களின் மறுபார்வை:ராசிகற்கல் பயன்படுத்துவதால் ஒருவரின் விதி மாறிவிடுமா, அதிர்ஷ்டம் கூடிவிடுமா என பலர் கேட்பதுண்டு. இந்த உலகத்தில் நாம் பிறந்ததே நமக்கான வினைகளை முடிப்பதற்காக தான். அதோடு ஜோதிடம் என்றாலே நம்பிக்கை தான். கிரங்களுக்கு பொருத்தமான ராசிக்கல் அணிந்த உடன் வாழ்க்கயில் பெரிய மாற்றம் ஏற்படாது. நம் இக்கட்டான சூழலில் கவனமாக இருந்து போராட வேண்டும். நவரத்தின கல் அணிந்த உடன் ஒரு நீசமடைந்த கிரகத்தை நமக்கு சாதகமாக மாற்றிவிட முடியாது என்ற கருத்தையும் ஜோதிடர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்