ஆப்நகரம்

Mesha Rasi: மேஷ ராசி அதிசார குரு பெயர்ச்சி பலன்

வியாழ பகவான் வருட கிரக பெயர்ச்சிகள், மேஷ லக்கினத்திற்கு 9, 12 இடம் ஆதிபத்தியம் பெற்ற குரு பகவான், எட்டாம் இடத்தில் இருந்து அவருடைய பார்வை தன் வீட்டைப் ஐந்தாம் பார்வையாக , பன்னிரெண்டாம் இடத்தை பார்ப்பகிறார்.

Samayam Tamil 29 Mar 2019, 1:00 pm
வியாழ பகவான் வருட கிரக பெயர்ச்சிகள், மேஷ லக்கினத்திற்கு 9, 12 இடம் ஆதிபத்தியம் பெற்ற குரு பகவான், எட்டாம் இடத்தில் இருந்து அவருடைய பார்வை தன் வீட்டைப் ஐந்தாம் பார்வையாக , பன்னிரெண்டாம் இடத்தை பார்ப்பகிறார்.
Samayam Tamil mesam-guru


அதனால் அயனம் ,சுகபோக வாழ்க்கை, யோகமும் , ஏழாம் பார்வையாக , இரண்டாம் இடத்தை பார்ப்பதால் , மாணவர்கள் கல்வியில் வங்கித் துறையிலும், மெக்கானிக்கல் என்ஜினியரிங் துறையிலும், தொழில்நுட்பத் துறையிலும், ஆடிட்டிங் துறையிலும், விமானப்படை துறையிலும், நீதித்துறையிலும், உயர்ந்து ,சிறந்து வருவார்கள். வீட்டில் அஷ்ட லட்சுமி கடாட்ச யோகமும் ,வாகன யோகமும் ,புதிய சொத்துக்களை வாங்குவதும், வாகனங்களை வாங்குவதும் ,தொழில் தொடங்கும் போதும், (ஆனால்) தாயாருக்கு பெயருக்கும், மனைவி பெயருக்கும் சேர்ந்து, எழுத வேண்டும். அப்பொழுதுதான் கண் திருஷ்டி வராது.

அதிசார குரு பெயர்ச்சி 2019 என்றால் என்ன? - அனைத்து ராசிகளுக்கான பலன்கள்undefined
தந்தை பெயருக்கும், கணவர் பெயருக்கு வாங்கினால் கண்திருஷ்டி வந்து உயிர் பயமும், சொத்து பயமும், கடனாளியாகவும் தந்துவிடும். மிக கவனமாக இருக்க வேண்டும். வரும் யோகத்தை யாரிடமும் கூற வேண்டாம். யாருக்கும் கடன் உதவி செய்ய வேண்டாம். அதேபோல் யாரிடமும் கடன் உதவி வாங்கி தர வேண்டாம். தானம், தர்மம் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு, உடை வாங்கித் தந்தாள் போதும். அது மிக நன்று .

மற்றபடி கிரகங்களை ஆராய்ந்து பலன் சொல்ல முடியும். இப்பொழுது எட்டில் குரு இருப்பதால் , பெற்றோர்கள் மாணவர்களை கல்வியில் குறை சொல்வதை தவிர்ப்பது, மாணவர்கள் குருவிடம் சென்று கல்வியில் படிப்பது சிறப்பாகவும், தொழிலிலும் ,வேலை பார்க்கிற இடத்திலும், மற்றவை பற்றி குறை சொல்லக் கூடாது. மிக கவனமாக இந்த ஒரு வருட காலம் இருக்க வேண்டும். இப்போது இரண்டரை மாதம் மட்டும் பாக்கியஸ்தானத்தில், இருப்பதால், வீட்டில் லட்சுமி கடாட்சம் யோகமும், புண்ணிய ஸ்தலங்களுக்கு ,குல தெய்வத்திற்கும் செல்வதும் நன்றாக இருக்கும் .

குரு பெயர்ச்சி பலன் ஐப்பசி மாதம் 11ஆம் தேதி திங்கட்கிழமை 28 /29-10-2019 விடிந்தால் செவ்வாய்க்கிழமை இரவு மணி 3. 42 மணிக்கு வரைக்கும், மிக கவனமாக இருக்க வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்