ஆப்நகரம்

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்கான டிசம்பர் மாத ராசிபலன் 2021

மேஷம் - வேலையில் இலக்கை அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறக்கும். ரிஷபம் - தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வயிறு சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மிதுனம் - சிலருக்கு பணிச்சுமை அதிகரிக்கும். கூடுதல் கவனமாக இருப்பதால் விபத்துகளிலிருந்து தப்பிக்கலாம்.கடகம் - துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிறிய மன வருத்தம் ஏற்படுத்தும்.

Samayam Tamil 1 Dec 2021, 12:02 pm

ஹைலைட்ஸ்:

  • மேஷம் - வேலையில் இலக்கை அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறக்கும்.
  • ரிஷபம் - தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வயிறு சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • மிதுனம் - சிலருக்கு பணிச்சுமை அதிகரிக்கும். கூடுதல் கவனமாக இருப்பதால் விபத்துகளிலிருந்து தப்பிக்கலாம்.
  • கடகம் - துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிறிய மன வருத்தம் ஏற்படுத்தும்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil December Horoscope 2021
மேஷம் ராசி டிசம்பர் மாத பலன்: Aries December Month Horoscope

மேஷ ராசிக்கு அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன்களைத் தரக்கூடியதாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக இருப்பர்.
சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வேலையில் நினைத்த இலக்கை அடையாவதற்கான முயற்சிகள் வெற்றி தரும். புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அமையும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

உடல் ஆரோக்கியம் சிறக்கும். எதிரிகளின் தொல்லை குறையும். தொழில், வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு லாபம் தரக்கூடிய நற்பலன்கள் கிடைக்கும்.

வழிபாடு :
கணபதியை வணங்கி வரவும். அன்னதானம் செய்யவும்.

தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்கான டிசம்பர் மாத ராசிபலன் 2021

ரிஷபம் ராசி டிசம்பர் மாத பலன்: Taurus December Month Horoscope

எந்த ஒரு செயலையும் செய்ய மனம் ஒத்துழைப்பு தர தயங்கும். இருப்பினும் உங்களின் மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது. குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும்.
செவ்வாய் 12ம் இடத்தைப் பார்வையிடுகிறார் என்பதால் நீங்கள் அடிக்கடி கோபப்படுதல், உணர்ச்சிவசப்படக்கூடிய நிலை ஏற்படும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் சிறப்பானதாக இருக்கும். அதிகளவு லாபம் இல்லாவிட்டாலும், ஓரளவு லாபம் தரக்கூடிய மாதமாக இருக்கும்.

உங்கள் தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் வேண்டும். வீட்டில் சமைத்த நல்ல உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும். இல்லையெனில் வயிறு சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. முதுகு வலி ஏற்படலாம்.
பிள்ளைகள் விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளவும். அவர்கள் மூலம் சிறியளவில் பிரச்னை ஏற்படலாம்.

டிசம்பர் மாதத்தில் நடக்கும் முக்கிய கிரக பெயர்ச்சிகள் - அதிர்ஷ்ட பலன் பெறும் 5 ராசிகள்

மிதுனம் ராசி டிசம்பர் மாத பலன்: Gemini December Month Horoscope

டிசம்பர் மாத கிரக நிலை மிதுன ராசிக்கு பெரியளவில் சாதகமானதாக இல்லை. அதனால் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அதில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

உங்கள் பேச்சு செயலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகள், சக ஊழியர்கள், உங்களுக்கு கீழ் பணியாற்றக்கூடியவராக இருந்தாலும் சரியான மரியாதை கொடுத்து பேசுவது அவசியம். கொடுத்த வேலையை கவனமாக சரியாக செய்து முடிக்கவும். சிலருக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.

தாம்பத்தியம் இனிக்க புதுமணத் தம்பதிகளின் படுக்கை அறையை அலங்கரிப்பது எப்படி?

நீங்கள் செய்யக்கூடிய வேலை எதுவாக இருந்தாலும், குறிப்பாக கெமிக்கல், உடல் உழைப்பு கொடுக்கும் வேலையில் உள்ளவர்கள் கூடுதல் கவனமாக இருப்பதால் விபத்துகளிலிருந்து தப்பிக்கலாம்.

யாருக்காகவும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்ளவும். மருத்துவம் எடுத்துக் கொள்வதிலும், உணவு விஷயத்திலும் கட்டுப்பாடு கவனம் தேவை.

வழிபாடு :
கால பைரவர் வழிபாடு செய்வதும், பருப்புகளை நன்கொடையாகக் கொடுப்பது நல்லது.

கடகம் ராசி டிசம்பர் மாத பலன்: Cancer December Month Horoscope
கடக ராசி அதிபதியான சந்திரன், யோக காரகனான செவ்வாய் பகவானின் நட்சத்திரத்தில் இருக்கும் போது இந்த டிசம்பர் மாதம் தொடங்குகிறது.
உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் குரு பகவான் இருக்கின்றார். இதன் காரணமாக உங்கள் செலவு விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. பண பரிவர்த்தனைகளின் போது ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்துக் கொண்டு பரிவர்த்தனை செய்யவும்.

வீடு கட்ட இப்படிப்பட்ட நிலம் வாங்க வேண்டாம் - எந்த வகை நிலத்தில் வீடுகட்டுவது சிறப்பு?

அதே சமயம் சொத்து போன்ற விஷயங்களில் அனுகூலம் கிடைக்கும். துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் உங்களின் விருப்பங்கள் நிறைவேறலாம். குழந்தைகள் வழியில் உங்களுக்கு சிறிய மன வருத்தம் ஏற்படுத்தும்.

கிரகங்களின் தந்தையான சூரியன், கேதுவுடன் சேர்ந்து இருப்பதால், மூதாதையர்களின் வழிபாடு செய்வது அவசியம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்