ஆப்நகரம்

ஜூலை மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

ஜூலை மாதத்தில் 5 கிரகங்கள் தங்களுடைய சொந்த ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கின்றன. இருக்கும் கிரக நிலையைப் பொறுத்து, சில ராசிகளுக்கு பிரச்சினைகளும், சாதகமற்ற பலன்களும் உண்டாகும். எந்தெந்த ராசியினர் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

Samayam Tamil 2 Jul 2022, 1:03 pm
ஜூலை மாதத்தில் 5 கிரகங்கள் தங்களுடைய சொந்த ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கின்றன. இருக்கும் கிரக நிலையைப் பொறுத்து, சில ராசிகளுக்கு பிரச்சினைகளும், சாதகமற்ற பலன்களும் உண்டாகும். எந்தெந்த ராசியினர் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
Samayam Tamil july month 2022 astrology prediction these 7 zodiac signs will face bad effects from planetary changes
ஜூலை மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்


​மேஷ ராசி :

ஜூலை மாதத்தில், உங்களின் ராசி அதிபதி செவ்வாய், உங்கள் ராசியிலேயே சஞ்சரித்து நேர்மறை ஆற்றல் தருவதாக இருந்தாலும், மற்ற சில கிரகங்களின் அமைப்பு சாதகமற்றதாக இருப்பதால், பணியிடத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். பணியிட அரசியலிலிருந்து விலகி இருப்பது நல்லது.

உங்கள் வருவாய் அதிகமாகவும், வியாபாரத்தில் லாபம் கிடைக்கக்கூடியதாக இருக்கும் என்றாலும், உங்கள் பட்ஜெட்டை விட பொழுதுபோக்கிற்காக பணத்தை அதிகமாக செலவிட வாய்ப்புள்ளது; குடும்ப அமைதியைப் பேண அனுசரித்துச் செல்வது அவசியம். உங்கள் முடிவுகளை மற்றவர்கள் மீது திணிப்பதைத் தவிர்க்கவும். மாணவர்கள் கல்வி சார்ந்த முயற்சிகள் வெற்றி தரும்.

​ரிஷபம் ராசி

ரிஷப ராசியினரின் செயல்பாடுகள், வேலைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வணிகத்துடன் தொடர்புடைய சந்தையை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள்.

உங்களின் முயற்சிகள் வெற்றி பெற காலதாமதம் ஆகலாம். வலிமையான மனப்பான்மை, விடாமுயற்சியுடன் வேலையை முடிக்க முயலவும். மாணவர்களுக்குப் படிப்பு சார்ந்த செலவு, புதிய புத்தகங்கள் வாங்குவதால் செலவுகள் கூடும். உங்கள் காதலியின் உறுதியற்ற தன்மையால் நீங்கள் சற்று ஏமாற்றம் அடையலாம். குடும்ப விஷயத்தில் பொறுமையாகச் செயல்படுவது அவசியம்.

ஜூலை மாதத்தில் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

​சிம்ம ராசி

உங்களின் வேலை மற்றும் பணி மாற்றத்தால் அலைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வேலை அல்லது தொழில் என எதுவாக இருந்தாலும் கவனமாக செயல்படுவது அவசியம். இல்லையேல் சில நிதி இழப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

உங்கள் வேலையை மாற்றுவதற்கும் பொருத்தமான வாய்ப்புகளைத் தேடுவதற்கும் இதுவே சரியான நேரம். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு நிதி உதவி செய்ய வாய்ப்புள்ளது. மாணவர்கள் உயர்கல்விக்கான இலக்கை அடைவார்கள். சுவாச அமைப்பு தொடர்பான பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.

மிதுனத்தில் புதன் பெயர்ச்சி : யார் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கப்போகிறது தெரியுமா?

​கன்னி ராசி

கன்னி ராசியினருக்கு வேலை, குடும்பம் இரண்டையும் சமாளிக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள் எதிலும் பொறுமையாக இருந்து அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டியது இருக்கும். பணிச் சுமை திடீரென அதிகரிக்கும், இது வேலை மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு இடையிலான சமநிலையை சீர்குலைக்கும்.

வீட்டில் இருந்து வேலை செய்து கொண்டிருப்பவர்கள் அல்லது படிப்பவர்கள் சில எதிர்பாராத செலவுகளை சந்திக்க நேரிடும். ஓவியம் மற்றும் கலையில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் உங்கள் உணவு மற்றும் வழக்கத்தை மேம்படுத்தவும்.

சனி வக்ர நிலை முடிவு ஜூலை 13: 3 ராசிகளுக்கு அமோக யோகம், அபரிமிதமான வெற்றி கிடைக்கும்

​துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு செலவு செய்யும் போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த மாதம் உங்களின் மனம்ச் சஞ்சலத்துடன், மனக் குழப்பம் நிறைந்ததாக இருக்கும்.

வேலை தொடர்பான விஷயங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவைத் தொடர்ந்து பெறுவீர்கள். சில நேரங்களில் செலவுகள் உங்கள் பட்ஜெட்டை விட அதிகமாக செல்லும், எனவே செலவு செய்யும் போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். மாணவர்கள் கல்வி சார்ந்த விஷயங்களில் சிறந்த வெற்றியைப் பெறுவார்கள். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். தொடர்ச்சியான குடும்ப தகராறு காரணமாக, மனைவியுடனான உறவு கெட்டுப்போகலாம். என்பதால் அன்பும், அரவணைப்புடன் இருக்க முயலவும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் 'சமயம் தமிழ்' இணையதளத்தை பின் தொடருங்கள்

​தனுசு ராசி

ஜூலை மாதத்தில், தனுசு ராசிக்காரர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எந்த ஒரு சிக்கலான விஷயத்தையும் சமாளிக்கத் தயாராக இருப்பீர்கள். தொழிலில் புதிய வாய்ப்புகள் தேட வேண்டியது இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடு உங்களை மன வருத்தம் ஏற்படச் செய்யும்.

யாரிடமும் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். அமைதியாக இருந்து உங்கள் வேலையில் வெற்றி அடைய முயலவும்.. மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உங்களின் உடல் எடையை அதிகரிக்க வாய்ப்புள்ளது, எனவே தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்.

​மகர ராசி

ஜூலை மாதத்தில், மகர ராசிக்காரர்களுக்கு 5 கிரகங்களின் தாக்கத்தால் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பழைய நண்பர்களுடன் பேசி மகிழ வாய்ப்புள்ளது.

கூட்டுத் தொழிலில் புதிய நபரை சேர்ப்பதைத் தவிர்க்கவும். மாணவர்கள் குடும்பம் மற்றும் உறவினர்களிடமிருந்து கூடுதல் அழுத்தம் சந்திக்க வேண்டியது இருக்கும், இது அவர்களின் செயல்திறனுக்கு இடையூறு விளைவிக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்