ஆப்நகரம்

ஜூன் மாத ராசி பலன் 2021 : மேஷம் முதல் சிம்மம் வரை பலன் எப்படி இருக்கும்?

ஜூன் மாதம் புனிதமான கஜகேசரி யோகத்துடன் தொடங்கியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், செவ்வாய் கடக ராசியிலும், சனி பகவானை நேருக்கு நேர் சந்திப்பார். இந்த மாதத்தில் ஜூன் 10ல் சூரிய கிரகணமும். ஜூன் 15ல் சூரியன் மிதுனத்திலும், ஜூன் 22ல் சுக்கிரன் கடகத்திற்கும், ஜூன் 23ல் புதன் வக்ர நிவர்த்தியும் அடைகிறார். இதனால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் ராசிகளுக்குஎப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

Samayam Tamil 2 Jun 2021, 3:21 pm
ஜூன் மாதம் புனிதமான கஜகேசரி யோகத்துடன் தொடங்கியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், செவ்வாய் கடக ராசியிலும், சனி பகவானை நேருக்கு நேர் சந்திப்பார். இந்த மாதத்தில் ஜூன் 10ல் சூரிய கிரகணமும். ஜூன் 15ல் சூரியன் மிதுனத்திலும், ஜூன் 22ல் சுக்கிரன் கடகத்திற்கும், ஜூன் 23ல் புதன் வக்ர நிவர்த்தியும் அடைகிறார். இதனால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் ராசிகளுக்குஎப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
Samayam Tamil june month 2021 astrology predictions for mesam rishabam mithunam kadagam simmam zodiac sign in tamil
ஜூன் மாத ராசி பலன் 2021 : மேஷம் முதல் சிம்மம் வரை பலன் எப்படி இருக்கும்?


​மேஷம் : சிறப்பாக அமையும்

மேஷ ராசிக்கு இந்த மாதம் சாதகமானதாக அமையும். ஆற்றல், தைரியம் பெருகும். உறவுகளில் இனிமை அதிகரிக்கும். மாதத்தின் முதல் வாரத்தில், புகழாரத்தால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆபத்தான எந்த ஒரு விஷயத்தையும் தவிர்க்கவும் இல்லையெனில் சேதம் ஏற்படலாம்.


மாணவர்கள் தேர்வுகள் மற்றும் போட்டிகளால் மனஅழுத்தம் சந்திக்கலாம். ஆர்வத்தைத் தவிர்க்கவும். அமைதியான மனதுடன் முயற்சிக்கவும். உங்களை நீங்களே நம்புங்கள், கண்களை மூடிக்கொண்டு உங்கள் திறனை ஆராயுங்கள். வெற்றி உங்களை முத்தமிடும்.


கடக ராசியில் செவ்வாய் பெயர்ச்சி ஜூன் 2 : 6 ராசியினர் கவனமாக இருக்கவும்

கோபம், கடுமையான பேச்சுக்களைத் தவிர்க்கவும். வணிகத்தில் புதிய முதலீட்டைத் தவிர்க்கவும். வாழ்க்கை துணையுடன் ஈர்ப்பு மற்றும் அன்பு அதிகரிக்கும். மூன்றாவது வாரத்தில், உங்கள் நோக்கங்கள், நம்பிக்கைகள் பலப்படும். வெற்றி கிடைக்கும்.

நான்காவது வாரத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல்நலம் மிதமாக பாதிக்கப்படும். காலில் வலி இருக்கலாம். சக ஊழியர்களிடம் அன்பாக பழகுவது அவசியம். சிலரின் வார்த்தைகள் மனதை புண்படுத்தலாம்.

ஜூன் மாத ராசி பலன் 2021 : கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான பலன்கள்

​ரிஷபம் : உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும்

இந்த மாதம் உங்களுக்கு நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியான எண்ணங்களுடனும் தொடங்கும். எதிர்பாராத ஒரு வருமானத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். மகர மற்றும் மிதுன ராசியினரிடம் எச்சரிக்கையாக இருங்கள், ஏனெனில் அவர்கள் உங்களின் மனதை பாதிக்கும் மற்றும் வலியை ஏற்படுத்தக்கூடியவர்களாக இருப்பார்கள். இந்த மாதம் கருப்பு வண்ணங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது

முதல் மற்றும் இரண்டாவது வாரங்கள் அருமையாக இருக்கும், மேலும் இந்த நாட்கள் புதிய தொழிலைத் தொடங்க ஏற்றதாக இருக்கும். நேர்மறையான அணுகுமுறையை வைத்து எதிர்மறை சிந்தனைகளை அழித்துவிடுங்கள்.


ஜூன் மாத ராசி பலன் 2021 : மகரம், கும்பம் மீன ராசிக்கான பலன்கள்

இந்த மாதம் உங்கள் காதல் வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். திருமண உறவை வலுப்படுத்தும். பொருளாதார நிலை முன்னேறக்கூடியதாக இருக்கும். திடீர் அதிர்ஷ்டம், எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள்.


சுக்கிர பெயர்ச்சி : மிதுனத்தில் புதன், செவ்வாயுடன் சேரும் சுக்கிர பகவான்

​மிதுனம்

மிதுன ராசிக்கு ஒரு சவாலான மற்றும் தைரியமான மாதமாக இருக்கும். இந்த மாதம், உங்கள் திட்டமிடல், செயல்திறன் சிறப்பாக இருக்கும். உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் மாதமாக இருக்கும். மாதத்தின் நடுப்பகுதியில் அல்லது மாதத்தின் முடிவில் நீண்ட காலமாக உங்களைத் தொந்தரவு செய்த விஷயங்களிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள்.

எந்தவொரு தடைகளையும் சமாளிப்பதற்கான வழி கிடைக்கும். பழைய தடை, தோல்விகளை மறந்து எதிர்காலத்தில் கவனம் செலுத்துங்கள். காதலில் இனிமையான நிகழ்வுகள் நடக்கும்.

உங்கள் தொழில் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் சக ஊழியர்கள் உங்களைப் பார்த்து பொறாமைப்படுவார்கள். சக ஊழியர்களிடம் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. உங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ள நபர் உங்களை காட்டிக் கொடுப்பார். இந்த மாதத்தில் ஒரு புதிய வணிகத்தைத் தொடங்குவது நல்லதல்ல. தலைவலி, குமட்டல் உள்ளிட்டவை தொந்தரவு தரும் என்பதால் ஆரோக்கியம் சற்று கவலை தருவதாக இருக்கும்.


நம்மைச் சுற்றும் நவகிரகங்கள் : ஜோதிடம் எதன் அடிப்படையில் உருவானது?

​கடகம்

கடக ராசிக்கு ஜூன் மாதம் அருமையாக இருக்கும். முதல் மற்றும் மூன்றாவது வாரங்கள் சில் குழப்பங்கள் நிறைந்ததாக இருக்கும், இருப்பினும் அதிலிருந்து சிறந்த பாடம் கற்றுக் கொள்வீர்கள்.

எதிர்காலத்தில் விஷயங்களை சிறப்பாக நிர்வகிக்க முடியும். இந்த மாதம் சவாலானதாக இருக்கும், ஆனாலும் உங்கள் பணியில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். லக்ஷ்மி தேவி மற்றும் குபேர் கடவுளை வணங்குவதால் நற்பலன் கிடைக்கும்.

நிறைய பணம் சம்பாதிக்கும் வகையில் நிதி நிலை மேம்படும். கவனமாக படித்து தேர்வுகளை எதிர்கொள்வது அவசியம். இந்த மாதம் தொழில் முனைவு நன்மை பயக்கும் மற்றும் சாதகமான பலன்களை வழங்கும்.

காதலில் இனிமையும், திருமணமான தம்பதிகள் குழந்தைப் பேறு எதிர்பார்க்கலாம். உடல்நலம் சிறப்பாக இருக்கும். ஏதேனும் திடீர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதிலிருந்து படிப்படியாக குணமடைவீர்கள்.

சுக்கிரன் மோசமானதாக இருந்தால் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் இதோ

சிம்ம ராசி

சிம்ம ராசிக்கு மிக அருமையான மாதமாக ஜூன் மாதம் அமையும். காதல், திருமண உறவில் மிக கவனமாக இருங்கள். தேவையற்ற கருத்து வேறுபாடு, பிரிவை கட்டாயம் தவிருங்கள். இது பெரிய பிரிவைத் தருவதாக அமைந்து விடும். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

உங்கள் பணியில் கவனமாக செயல்பட்டால் சிறப்பான வெற்றியைப் பெற்றிடலாம். உங்களின் முயற்சியால் சிறப்பான வெற்றி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்துவீர்கள்.

ஒரு சிலர் கடுமையான உடல் நல குறைப்பாட்டால் அவதிப்படுவீர்கள். எனவே எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் தேவையான மருத்துவ சிகிச்சையை எடுக்கவும்.

உங்கள் பேச்சில், செயலில் கவனம் செலுத்தினால் உங்களைத் தேடி அன்பானவர்கள் வந்து சேர்வார்கள். திருமண வாழ்க்கை இனிமையைத் தரும்.

சூரிய கிரகணம் ஜூன் 2021 தேதி மற்றும் இந்தியாவில் பார்க்க முடியுமா?

அடுத்த செய்தி

டிரெண்டிங்