ஆப்நகரம்

மே மாத ராசிபலன் 2022 : துலாம் முதல் மீன ராசி வரை : 6 ராசிகளுக்கு அமோகம்

மே மாதத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய நான்கு முக்கிய கிரக பெயர்ச்சிகள் நிகழ உள்ளன. அதுமட்டுமல்லாமல் மே மாத தொடக்கத்தில் கிரகங்களின் அமைப்பு எப்படி உள்ளன, தொடர்ந்து நடக்கும் கிரகப் பெயர்ச்சிகள் எப்படிப்பட்ட பலன் தரும் என்பதைப் பொறுத்து 12 ராசியினருக்கு அவர்களின் தொழில், உத்தியோகம், ஆரோக்கியம், குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் போன்ற விஷயங்களை விரிவாக தெரிந்து கொள்வோம்.

Samayam Tamil 30 Apr 2022, 2:42 pm
மே மாதத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய நான்கு முக்கிய கிரக பெயர்ச்சிகள் நிகழ உள்ளன. அதுமட்டுமல்லாமல் மே மாத தொடக்கத்தில் கிரகங்களின் அமைப்பு எப்படி உள்ளன, தொடர்ந்து நடக்கும் கிரகப் பெயர்ச்சிகள் எப்படிப்பட்ட பலன் தரும் என்பதைப் பொறுத்து 12 ராசியினருக்கு அவர்களின் தொழில், உத்தியோகம், ஆரோக்கியம், குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் போன்ற விஷயங்களை விரிவாக தெரிந்து கொள்வோம்.
Samayam Tamil may monthly horoscope 2022 for thulam to meenam rasi will get more energy
மே மாத ராசிபலன் 2022 : துலாம் முதல் மீன ராசி வரை : 6 ராசிகளுக்கு அமோகம்


​துலாம் மே மாத ராசிபலன்:

துலாம் ராசிக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக அமையும். உங்கள் வேலையில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பணி தொடர்பான ஒரு முக்கிய நபர் அல்லது நண்பரின் உதவியுடன் பெரிய இலக்கை அடைய செயல்படுவீர்கள்.

தொழில், வியாபாரம் லாபம் தரும் வகையில் இருக்கும். இந்த மாதம் ஆன்மிக யாத்திரை செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. விவசாயம் துறை தொடர்பான விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கக்கூடிய மாதமாக இருக்கும். வீட்டில் அனுகூலமான சூழ்நிலையும், குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்கும். நிதி ரீதியான சிறப்பான பலனை அடைவீர்கள்.

​விருச்சிகம் மாத ராசிபலன்:

விருச்சிக ராசியினருக்கு கலவையான பலன்கள் கிடைக்கக்கூடிய மாதமாக இருக்கும். உத்தியோகத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். நீங்கள் எந்த ஒரு பணியில் இருந்தாலும் அதில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் தொடர்பான காரியங்கள் வெற்றி அடையும்.

பணியிடத்தில் இருக்கும் அரசியலிலிருந்து விலகி இருக்கவும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெற அவர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். உங்களின் சகோதரர்களைப் பிரியக்கூடிய வாய்ப்புள்ளது. தாய் மற்றும் மனைவியின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். மாணவர்கள் படிப்பில் சிறப்பாகச் செயல்படக்கூடிய மாதமாக இருக்கும்.

​தனுசு மே மாத ராசிபலன்: சொத்து சார்ந்த லாபம் கிடைக்கும்

தனுசு ராசிக்கு நல்ல சாதகமான பலனகள் கிடைக்கக்கூடிய மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் வீடு, மனை வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு அவர்களின் முயற்சி வெற்றி அடையும். ரியல் எஸ்டேட் தொடர்புடையவர்களுக்கு இந்த மாதம் சிறப்பாக சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும், வியாபாரத்தில் மிதமான லாபமும் கிடைக்கும். மாமியார் வகையில் அவர்களின் நல்லாதரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மங்களாரமான நிகழ்ச்சிக்கான செயல்களை ஆர்வத்துடன் செய்வீர்கள். வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். மனைவியுடன் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். குழந்தைப் பாக்கியம் வேண்டுவோருக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

​மகரம் மே மாத ராசிபலன்:

மகர ராசிக்கு இந்த மாதம் சில குழப்பங்கள் தரக்கூடிய மாதமாக இருக்கும். உங்கள் வேலையில் செல்வாக்கு குறைய வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் வெற்றி பெரிய வருமானம் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். விவசாயத்துறையில் நற்பலன் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.

குடும்ப தேவைகளுக்காக அதிகம் செலவிட வேண்டியது இருக்கும். உடல் நலம் தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது அவசியம். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தி படிக்கவும்.

​கும்பம் மே மாத ராசிபலன்: முன்னேற்றப் பாதைகள் திறக்கும்

கும்ப ராசிக்கு வியாபார ரீதியாக இந்த மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். உத்தியோக்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையின் மனதைப் புரிந்து கொண்டு நடக்கவும். குடும்பத்தில் பிரச்னைகளைத் தவிர்க்க அமைதியைக் கடைப்பிடிக்கவும். சகோதர வீடிட்ல் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை..

எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் நீங்கள் கவனமாக சிந்தித்து முடிவெடுக்கவும்.

​மீனம் மே மாத ராசிபலன்: பதவி கௌரவம் அதிகரிக்கும்

மே மாதத்தில் மீன ராசியினரின் கெளரவம் உயரும். எந்த ஒரு செயல்களிலிருந்தும் உங்களில் நிதி நிலைமையும், கெளரவமும் அஹ்டிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் உண்டாகும். விவசாயம் சார்ந்த விஷயங்களில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் பிராச்னைகளைத் தவிர்க்கவும். விட்டுக் கொடுக்காமல் இருந்தால் வீட்டில் அமைதியின்மை ஏற்படும். குடும்பத்துடம் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். ஆன்மிகத்தின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்