ஆப்நகரம்

Pisces July 2019 Horoscope:ஜூலை மாத மீனம் ராசி முழு பலன்கள்

மீனம் ராசியினருக்கு தொழில்,குடும்ப வாழ்க்கை, காதல் ஆகியவை ஜூலை 2019 மாதத்தில் எப்படி இருக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.

Samayam Tamil 1 Jul 2019, 11:27 am
சுக ஸ்தானத்தில் இருக்கும் கிரக கூட்டணி, ராசி நாதன் குரு பகவானின் சஞ்சாரம் மிகச் சிறப்பாக உள்ளது. குலதெய்வம், முன்னோர்களின் அருள் பரிபூரணமாக உள்ளது.
Samayam Tamil Meenam 1200


குடும்பம்
குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகள் அனைத்தும் தீரும். எல்லா பாக்கியங்களும் வந்து சேரும். இதுவரை வீடு மனை பாக்கியங்கள் இல்லாதவர்கள் வீடு, மனை பெறுவர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு மனதில் நிம்மதி பிறக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சியில் இருந்த தயக்கங்கள் நீங்கும்.

தொழில்
அரசாங்க உத்தியோகம் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் கிடைக்கும். பங்கு தாரர்களுடன் இருந்த பிரச்னை தீரும்.

உத்தியோகஸ்தார்களின் உழைப்பு பரிசீலிக்கபடும். உங்களுக்கான அங்கிகாரம் கிடைக்கும்.
பெண்களைப் பொறுத்தவரை, உங்களுக்கு பணியிடை மாற்றம் நடக்கும்.
மாணவர்கள் எதிர்பார்த்த மேல் படிப்பு கண்டிப்பாக கிடைக்கும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கடன் அடைப்பதற்கான காலகட்டம் கனிந்துவிட்டது.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்க்ககூடிய மாற்றங்கள் வந்துவிட்டது.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயம் அனுகூலமாக அமையும்

அனைத்து ராசியினரின் மாத ராசி பலன்களைப் பார்க்க

உபாயம்
தினமும் கந்தசஷ்டி சொல்லி முருகனை வழிபாடு செய்துவருவது சிறந்த பரிகாரம்.

அதிர்ஷ்ட எண் - 1,3,9
அதிர்ஷ்ட ஹோரை - சூரியன்,புதன், குரு, சுக்கிரன்
அதிர்ஷ்ட நிறம் -சிகப்பு மற்றும் மஞ்சள்

அடுத்த செய்தி

டிரெண்டிங்