ஆப்நகரம்

சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசிக்கான செப்டம்பர் மாத ராசி பலன் 2021

சிம்மம் : தம்பதிகள் விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். கடன் வாங்குவதைக் கண்டிப்பாக தவிர்க்கவும். கன்னி : தொழில், வியாபாரத்தில் புதிய முயற்சிகளை வெற்றி தரும்.திட்டமிட்டு வேலை செய்வது நல்லது. துலாம் : உடன் பிறந்தவர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வீண் செலவுகள் வேண்டாம். விருச்சிகம்: பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவில் கவனமும்,நேரத்திற்குச் சாப்பிடுவது நல்லது.

Samayam Tamil 27 Aug 2021, 2:30 pm

ஹைலைட்ஸ்:

  • சிம்மம் : தம்பதிகள் விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். கடன் வாங்குவதைக் கண்டிப்பாக தவிர்க்கவும்.
  • கன்னி : தொழில், வியாபாரத்தில் புதிய முயற்சிகளை வெற்றி தரும்.திட்டமிட்டு வேலை செய்வது நல்லது.
  • துலாம் : உடன் பிறந்தவர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வீண் செலவுகள் வேண்டாம்.
  • விருச்சிகம்: பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவில் கவனமும்,நேரத்திற்குச் சாப்பிடுவது நல்லது.

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil September Matha Rasipalan
சிம்ம ராசி செப்டம்பர் மாத பலன் : Leo September Matha Rasi Palan

சிம்ம ராசிக்கு இந்த மாதத்தின் முதல் பாதி இனிமையானதாக இருந்தாலும், அடுத்த பாதியில் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் இருந்தாலும், திருமணமான தம்பதிகள் விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். அதனால் தேவையற்ற வாக்குவாதத்தைத் தவிர்த்து மன நிம்மதியுடன் வாழலாம்.
குடும்பத்தின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் கடன் வாங்குவதைக் கண்டிப்பாக தவிர்க்கவும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டு பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் இடைக்கு. லாபம் கிடைக்கும் என்றாலும், உங்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும் என்பதால், உங்கள் வேலையில் கவனமாகவும், திட்டமிட்டுச் செய்வது அவசியம். மனதில் பதற்றத்தைத் தவிர்த்துக் கொண்டு செயல்படுங்கள். தியானம், யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

சந்திராஷ்டம நாட்கள் : செப்டம்பர் 21, 22 ஆகிய தேதிகள்

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்கான செப்டம்பர் மாத ராசி பலன் 2021

கன்னி ராசி செப்டம்பர் மாத பலன் : Virgo September Matha Rasi Palan

கன்னி ராசி நேயர்களுக்கு சிறப்பான மாதமாக இருக்கும். உங்கள் குடும்பத்திலும், வெளியிலும் உங்கள் மீதான மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்களுடன் நல்லுறவு பேணுவீர்கள்.
வேலை தேடுவோர், தொழில், வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வோருக்கு நம்பிக்கை தரக்கூடிய மாதமாக இருக்கும். அதே சமயம் இந்த மாதம் கூடுதல் பணிச்சுமை இருக்கும் என்பதால் திட்டமிட்டு வேலை செய்வது நல்லது.

பணிச்சுமையால் கணவன் - மனைவி இடையே நேரம் செலவிட முடியாமல் சிறு கருத்து வேறுபாடு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும் என்பதால், ஆடம்பர, வீண் செலவுகளை குறைத்துக் கொண்டு கவனமாக இருக்கவும். பணியிடத்தில் புதிய பொறுப்புகளால் வேலை அதிகரிக்கலாம்.

தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்வதால் உங்களுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் ஏற்படும். உடல் நலனில் அக்கறை தேவை. வயிறு, செரிமானம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் என்பதால், ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளவும்.

சந்திராஷ்டம நாட்கள் : செப்டம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகள்

தசா, புக்தி, அந்தரம், சூட்சமம் என்றால் என்ன, தசா புத்தி காலத்தில் கிரகங்கள் எப்படி பலன் தரும்?

துலாம் ராசி செப்டம்பர் மாத பலன் : Libra September Matha Rasi Palan

துலாம் ராசிக்கு சிறப்பான பல பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் அமைதி, நிம்மதி ஏற்படும். குடும்பம் சார்ந்த சில முக்கிய பொறுப்புகள் செய்து முடிக்க வேண்டி இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் உங்களின் பேச்சு, செயலில் நிதானம் தேவை.

உங்களின் செலவுகள் அதிகரிக்கும். வீண் செலவுகள் குறைத்துக் கொண்டு சேமிப்பது அவசியம்.
பணியில் இருப்பவர்களுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்படும். வெளிநாடு சார்ந்த வேலைதேடுவோர், வேலை செய்வோருக்கு மிக சிறப்பான யோகமான நிலை ஏற்படும்.

நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முடிவு, செயலில் கவனமும், பொறுமையும் அவசியும். எதையும் ஆராய்ந்து செய்வது நல்லது. உங்களின் ஆரோக்கியத்தில் சிறியளவில் பிரச்னை வந்து நீங்கும். உடற்பயிற்சி செய்வது நல்லது.

சந்திராஷ்டம நாட்கள் : செப்டம்பர் 25, 26, 27, 28 ஆகிய தேதிகள்

செப்டம்பர் மாதம் 2021 முக்கிய கிரக பெயர்ச்சியால் 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும்

விருச்சிகம் ராசி செப்டம்பர் மாத பலன் : Scropio September Matha Rasi Palan
விருச்சிக ராசி நேயர்களுக்கு சற்று சவாலான பலன்கள் இந்த மாதம் பெறுவீர்கள். திருமணமானவர்கள் கணவன் - மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வதால், குடும்பத்தில் தேவையற்ற சச்சரவுகள் தவிர்க்கலாம். நிம்மதியை அனுபவிக்கலாம்.

இந்த மாதம் உங்களுக்கு நல்ல லாபமும், நிதி நிலை முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும். இருப்பினும் உங்களின் செலவுகளைக் குறைத்துக் கொண்டு சேமிப்பது அவசியம். பெரியவர்களின் ஆலோசனையை ஏற்று உங்கள் செயல்களை செய்வதால் வெற்றி ஏற்படும். பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

உங்களின் நிதி நிலை சிறப்பாக இருக்கும் என்பதால், நீங்கள் வாங்கியிருக்கும் கடன் திருப்பி செலுத்த வாய்ப்புள்ளது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கிய பிரச்சினையால் செலவுகள் ஏற்படலாம். சரிவிகித உணவு எடுத்துக் கொள்ளுதல், நேரத்திற்குச் சாப்பிடுவது நல்லது.

சந்திராஷ்டம நாட்கள் : செப்டம்பர் 1, 2, 28, 29, 30 ஆகிய தேதிகள்

அடுத்த செய்தி

டிரெண்டிங்