ஆப்நகரம்

Tamil Puthandu: விகாரி வருடத்தில் மேஷம் ராசிக்கு பிரபலமாகும் வாய்ப்பு அமையும்!

பிறக்கும் தமிழ் புத்தாண்டு விகாரி வருடத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிகளவில் பிரபலமடையும் வாய்ப்பு அமையும் என்பதை ஜோதிடர் சின்னராஜ் துல்லியமாக கணித்து கூறியிருக்கிறார்.

Samayam Tamil 13 Apr 2019, 12:31 pm
பிறக்கும் தமிழ் புத்தாண்டு விகாரி வருடத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிகளவில் பிரபலமடையும் வாய்ப்பு அமையும் என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் துல்லியமாக கணித்து கூறியிருக்கிறார்.
Samayam Tamil Mesham


மங்களரகமான விகாரி வருடம், வசந்த ருதுவுடன், உத்தராயண புண்ணிய காலம் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணி 7 நிமிடத்துக்கு, 14.4.2019 அன்று தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. அன்றைய தினம் சுக்ல பட்சத்தில், ஆயில்ய நட்சத்திரம் 2ம் பாதம், கடக ராசியில், கடக லக்னத்தில், நவாம்சத்தில் தனுசு லக்னம், மகர ராசியில் விகாரி புத்தாண்டு பிறக்கிறது.

இந்த விகாரி புத்தாண்டு ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கு என்ன பலன்களை கொடுத்துள்ளது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் துல்லியமாக கணித்து கூறியிருக்கிறார்.

மேஷம் ராசி

உங்களது ராசிக்கு 4ஆவது ராசியில் புத்தாண்டு பிறப்பதால், பணப் பற்றாக்குறை இருக்காது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சமுதாயத்தை பிரபலமடையும் வாய்ப்பு கிட்டும். இந்த ஆண்டு முழுவதும் ராகு 3ல் தொடர்வதால், மனவலிமை அதிகரிக்கும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு வரும். எதையும் எளிதில் சமாளிக்கும் பக்குவம் வரும்.

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் உண்டாகும். சொத்து மற்றும் ஆபரணச் சேர்க்கை இருக்கும். மருத்துவம், ராணுவம், காவல்துறை போன்ற இடங்களில் வேலையில் இருப்போர் பாராட்டப்படுவர். தகவல் தொழில்நுட்பத் துறை யினருக்கு வெளி நாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். பங்கு வர்த்தகத்தில் லாபத்தை சம்பாதிக்கும் காலம் இது. மாணவர்களுக்கு மிக முன்னேற்றமான காலமாக இருக்கும்.

ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ்,
மொபைல் எண்: 9842108500

அடுத்த செய்தி

டிரெண்டிங்