ஆப்நகரம்

Tamil Puthandu: இந்த ஆண்டு சிம்மம் ராசிக்காரர்களுக்கு லாபமும், புகழும் கிடைக்கும்!

தமிழ் புத்தாண்டு விகாரி வருடத்தில் சிம்மம் ராசிக்காரர்கள் லாபமும், புகழும் கிடைக்கப் பெறுவார்கள் என்று ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.

Samayam Tamil 13 Apr 2019, 2:23 pm
தமிழ் புத்தாண்டு விகாரி வருடத்தில் சிம்மம் ராசிக்காரர்கள் லாபமும், புகழும் கிடைக்கப் பெறுவார்கள் என்று ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.
Samayam Tamil simma


மங்களரகமான விகாரி வருடம், வசந்த ருதுவுடன், உத்தராயண புண்ணிய காலம் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணி 7 நிமிடத்துக்கு, 14.4.2019 அன்று தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. அன்றைய தினம் சுக்ல பட்சத்தில், ஆயில்ய நட்சத்திரம் 2ம் பாதம், கடக ராசியில், கடக லக்னத்தில், நவாம்சத்தில் தனுசு லக்னம், மகர ராசியில் விகாரி புத்தாண்டு பிறக்கிறது.

இந்த விகாரி புத்தாண்டு ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கு என்ன பலன்களை கொடுத்துள்ளது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் துல்லியமாக கணித்து கூறியிருக்கிறார்.

சிம்மம் ராசி

கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும். உடல் நலன் சீராக இருக்கும். பெரிய அளவில் எதுவும் சேமிக்க இயலாது. ஆன்மீக காரியங்களிலும் தெய்வீக திருப்பணிகளிலும் பங்கேற்று சிறப்பிக்கும் காலம் இது. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் பொருளாதாரத்தில் செலவினங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் மிகுந்த கவனம் தேவைப்படும் காலம் இது. கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு பெயரையும் புகழையும் கொடுத்தாலும் வருமானத்தை அதற்குச் சமமான அளவில் அள்ளித் தரப் போவது இல்லை. விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைக்கும். இருப்பினும் வருமானம் கட்டுக்குள்ளேயே இருந்து வரும்.

வேலைவாய்ப்பில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் மற்றும் தொழில் மாற்றம் வருவதற்கான காலம் இது. வேலையில் கடின முயற்சிக்குப் பின்னர் வெற்றி கிடைக்கும். ஜவுளி, கட்டிடப் பொருட்கள் மின்சாதன பொருட்கள் மின்னணுவியல் துறை போன்றவற்றில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு லாபத்தையும் புகழையும் இந்த காலம் பெற்றுத் தரும்.

ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ்,
மொபைல் எண்: 9842108500

அடுத்த செய்தி

டிரெண்டிங்